(இ-ள்.) உனை அளித்தவன் - உன்னைப்பெற்றவன், முனியும்- சினப்பான், என்று-, அஞ்சல் - பயப்படாதே: நீ-, உடன்படும் - சம்மதிக்கின்ற, உணர்வால் - உணர்ச்சியோடு, நல் வினை அளித்தது என்று - நல்வினை (இவனைத்) தந்ததென்றுகருதி, அணைதி ஏல் - (என்னைச்) சேர்வையானால், இன்பம்உம்-, விழைவுஉறும்படி- (மனத்தில்) விருப்பமுண்டாகும்படி, துய்த்தி - நுகர்வாய்: எனை அளித்த தொல் அதிதியின்-என்னைப்பெற்ற பழமையான அதிதிபோல, உனக்கு-, இசை - புகழ், எய்தும் ஆறு - உண்டாகும்படி, இகல் மைந்தன் தனைஉம் - வலிமையுள்ள மைந்தனையும், அளித்தி - உண்டாக்குவாய்: மற்று - மேலும், (அந்தப்புதல்வன்), என்னின்உம் - என்னைக்காட்டிலும், இரு நிலம் - பெருவுலகத்தாரால், தாள் தொழதக்கோன் - தாளில் விழுதற்குரிய மேன்மையுடையவனாவன், (என்றும் கூறினான்); (எ -று.) 'உனை யளித்தவன் முனியுமென்றஞ்சல்' என்பதற்கு - நீ இப்போதிருப்பதுபோலவே கன்னிகையேயாய்விடுவாய் என்று கருத்துக் காணலாம்: "ந கந்யகாபாவம் இமஞ்ச ஹாஸ்யஸி" என்று பாலபாரதத்தில் வருவது காண்க: "சூரன தருளினாற் றுலங்கு கன்னிகையாகி" என்று இவரே பின்னர்க் கூறுவர். (190) 36.-சூரியனது புகழ்ச்சியுரைகேட்டுப் பிரதை மலரணை சேர்தல். ஆயிரங்கரத்திபதிபுகழ்ந்துநூ றாயிரமுகமாகப் போயிரந்திவையுரைத்தபின்மதர்விழிப் புரிவுமூரலுநல்கி வேயிருந்தடந்தோளிடந்துடித்திட மெல்லியன்மதன்வேதப் பாயிரங்கொலென்றையுறவவனொடும் பனிமலரணைசேர்ந்தாள். |
(இ-ள்.) ஆயிரம் கரத்து அதிபதி - ஆயிரங்கிரணங்களையுடைய (ஒளிகட்கெல்லாம்) அதிபதியான சூரியன், நூறு ஆயிரம் முகம் ஆக புகழ்ந்து - பலபாடியாகப் புகழ்ந்துகூறி, போய் இரந்து - மிகவும் இரந்து, இவை உரைத்தபின் - இவ்வார்த்தைகளைக் கூறியபின்,- மெல்லியல் - அந்தப்பிரதை, மதர் விழி பிரிவுஉம் - மதர்த்தகண்ணின் மூலமாக(த் தன்) விருப்பத்தையும், மூரல்உம் - புன்சிரிப்பையும், நல்கி - தந்து,- வேய் இருந் தட தோள் இடம் துடித்திட - மூங்கில்போன்ற மிகப்பெரியதோள் இடப்புறந் துடிக்க,- 'மதன் வேதம் பாயிரம் கொல் - மன்மத வேதத்தின் பாயிரமோ (இது)?' என்று-, ஐயுற - ஐயம் மனத்திலுண்டாக, அவனொடுஉம் - அந்தச் சூரியனோடும், பனி மலர் அணை - குளிர்ந்த புஷ்பசயனத்திலே, சேர்ந்தாள்-; (எ-று.) பாயிரமென்பது - நூற்குப் புறம்பானது; நூலுக்குத்தோற்றுவாயாவது. மதன்வேதம் என்பது இங்கேயிலக்கணையால், காம சாஸ்திரத்திலுணர்த்தப்படும் காரணங்களுக்கு ஆகுபெயர். இடந்துடித்தது. இனி விரைவிற் புணர்வுநிகழுமென்பதைக் குறிப்பிப்பதாதலால். அது மதனவேதத்தின் பாயிரமென ஐயுறத்தக்கதாயிற்று. (191) 37.- புணர்ச்சியில் அவசமாகிய பிரதை பின் தன்வசமாக, சூரியன் கரத்தலும் அவள் கருக்கொள்ளுதலும். தினகரன்சுடர்வடிவமுமமிர்தெழு திங்களின்வடிவாகத் தனதடந்திருமார்புறத்தழீஇயபின் றையறன்னினைவெய்த |
|