பக்கம் எண் :

106பாரதம்ஆதி பருவம்

மனமகிழ்ந்ததும்வந்ததுமணந்ததும் வரங்கொடுத்ததுமெல்லாம்
கனவெனும்படிகரந்தனன்பெருந்தகை கன்னியுங்கருக்கொண்டாள்.

     (இ-ள்.) தினகரன் - சூரியன், சுடர் வடிவம்உம் - (தன்) தேஜோ மயமான
வடிவமும், அமிர்து எழு திங்களின் வடிவுஆக - அமிருதம் தோன்றப்பெற்ற
சந்திரனுடைய வடிவுபோன்றிருக்க,- தன தடம் திரு மார்பு உற -
(அந்தப்பிரதையின்) கொங்கைத்தலம் (தன்) அழகிய மார்பிலே பொருந்த,
தழீஇயபின் - தழுவிப்புணர்ச்சி நிகழ்த்திய பின்,- தையல் - அந்தப்பிரதை, தன்
நினைவு எய்த - தன்வசத்தையடைய, - மனம்  மகிழ்ந்ததும் - (தன் இசைவால்
அந்தச்சூரியன்) மனமகிழ்ச்சி யடைந்ததும், வந்ததுஉம் மணந்ததுஉம்-வந்து
(தன்னை அச்சூரியன்) கூடியதும், வரம்கொடுத்ததுஉம் - (அந்தச் சூரியன்
கன்னிகை யாவாயென்று) வரங்கொடுத்ததும், எல்லாம்-, கனவு எனும்படி-,
பெருந்தகை - பெருமைக்குணமுள்ள அந்தச் சூரியன், கரந்தனன் - மறைந்தான்;
கன்னிஉம் - அந்தக்கன்னிகையான பிரதையும், கருக் கொண்டாள் -
கருப்பமடைந்தாள்; (எ-று.)

      தன - தன்னுடைய, தட திருமார்பு - விசாலமான அழகிய மார்பு
என்றுமாம். வரம் - துருவாசன் உபதேசித்த சிறந்த மந்திரம் என்பாருமுளர்.
பெருந்தகை - அன்மொழித்தொகை: பெருந்தகைக் கன்னி எனின், கன்னிக்கு
விசேடணம்.                                                    (192)

38.- குந்தி மைந்தனொருவனைப் பெறல்.

அந்தியாரழலெனப்பரிதியினொளி யடைந்தபினணிமாடக்
குந்திபோசன்மாமடமகளெழினலங் கொண்டகொள்கையளாகி
இந்திராதியரவரவர்முகமலர்ந் திரந்தனதரத்தக்க
மைந்தனானவனொருவனைப்பயந்தனண் மாசிலாமணியென்ன.

     (இ-ள்.) பரிதியின் ஒளி - சூரியனுடைய ஒளிமயமாகிய கருப்பம், அடைந்த
பின் - (தன்வயிற்றைச்) சேர்ந்தபிறகு, அணிமாடம் குந்தி போசன் மா மடம்
மகள் - அழகிய மாடத்திலிருந்த குந்தி போசனுடைய சிறந்த மடப்பத்தையுடைய
மகளாகிய அந்தக் குந்தி,- அந்தி ஆர் அழல் என - அந்திக்காலத்து (ச் சிகை)
நிரம்பிய அக்கினிபோல, எழில் நலம் கொண்ட - அழகின்சோபையைப் பெற்ற,
கொள்கையள் ஆகி - தன்மையை யுடையவளாய்,- இந்திர ஆதியர் அவர்
அவர் இரந்தன முகம்மலர்ந்து தரத்தக்க - இந்திரன் முதலிய அந்த அந்த
இரப்பாளர் இரந்தவற்றை முகம் மலர்ந்து கொடுத்தற்கு  உரிய, மைந்தன்
ஆனவன் ஒருவனை - ஒப்பற்ற ஒரு மைந்தனை, மாசு இலா மணி என்ன -
(சமுத்திரக்கரை) சிந்தாமணியைப்பெற்றதுபோல, பயந்தனள்- பெற்றாள்:எ-று.)
அமருண்கட்குந்தி என்றும் பாடம்.

     "அநுப்ரவேசாத் அயம் ஆத்மதேஜஸ:- சிகாமிவாக்நேரதிகோஜ்
ஜ்வாலக்ருதிம்.....  அதேப்ஸிதார்த்த ப்ரதிபாதநார்ஹதாம் - உபேயிவாம்ஸம் ஸு ர
பர்த்து ரர்த்திந: அஸூதசிந்தாமணி மூடதேஜஸம் - ஸமுத்ரவேலேவ
ந்ருபாத்மஜாஸு தம்" என்ற பால பாரதத்தால், இங்குக்கூறிய உரையைத் தெளிக.
இந்தக் கர்ணன் இந்திர னிரக்கத் தன் கவசகுண்டலங்களைக் கொடுத்த
வரலாற்றை உத்தியோகபருவத்திற் காணலாம். மாலைக்காலத்துச் சூரியனொளியை
அக்கினி பெறுகிறானென்ப.                                       (193)