பக்கம் எண் :

110பாரதம்ஆதி பருவம்

போல,- பருவம்செய்- யௌவன பருவத்தையடைந்த, பைம் பொன் கொடி
அன்னவள் - பசும்பொற்கொடி போன்றவளான அந்தக்குந்தி, பாண்டு என்னும் -
பாண்டு என்கிற, நிருபன் தனக்குஏ - அரசன்திறத்தில்தானே, மணம் - விவாகஞ்
செய்து கொள்ளுதற்கு, கூர் மிக்க, பெருநேயம் - பெருத்த அன்பை, உற்றாள்-
பொருந்தினாள்; (எ-று.)                                          (199)

45.-மத்திரராசன் தன்புதல்வியைத் தானே தர, அவளையும் பாண்டு
மணத்தல்.

தானேயுவந்துதனித்தார்புனை தையல்வென்றி
ஆனேறனையானுயிர்க்கா ரமிர்தானபின்னர்
யானேதருவன்னெனமத்திர ராசனல்க
மானேயனையவிழியாளை வதுவைசெய்தான்.

     (இ - ள்.) தான்ஏ - சுயமாகவே, உவந்து - மனமகிழ்ந்து, தனி தார் புனை -
ஒப்பற்ற சுயம்வரமாலையைச் சூட்டிய, தையல் - பெண்ணாகிய குந்தி, வென்றி
ஆன்ஏறு அனையான் - வெற்றிபொருந்திய இடபத்தை யொத்தவனாகிய
பாண்டுவின், உயிர்க்கு-, ஆர் அமிர்து ஆன  பின்னர் - அருமையான
அமிர்தம்போலான பிறகு,- மத்திரராசன்-, யானே தருவன் என நல்க-நானே
(என்மகளை இந்தப் பாண்டுவுக்கு மனைவியாகத்) தருவேன் என்று
சொல்லிக்கொடுக்க,- மான்ஏ அனையவிழியாளை - மானையேயொத்த
கண்ணையுடையவளான மாத்திரியையும், வதுவைசெய்தான்-(அந்தப்பாண்டு)
மணந்தான்;

     இந்த மாத்திரி மத்திரதேசாதிபதியான ருதாயன னென்பவனுக்கு மகள்:
சல்லியனுக்குத் தங்கை. பாலபாரதத்தில், வீடுமன் தன்வில்வலியாற் கவர்ந்து
கொண்டுவந்து மாத்திரியைப் பாண்டுவுக்கு மனைவியாக்கினா னென்று உள்ளது.
வியாசபாரதத்தில் வீடுமன் சென்று மாத்திரியைப் பாண்டுவுக்குத் தருமாறுகேட்க,
மத்திரபதி இசைந்தானென்று உள்ளது.                             (200)

46.-பாண்டுமன்னவன் வேட்டையாடுமாறு இவ்விரு
 மங்கையரோடும் இமயமலைப்புறத்தைச் சார்தல்.

எண்ணுற்றசூரனிகன்மத்திர ராசனென்ன
மண்ணுற்றசீர்த்திவயமன்னர் மகளிரோடும்
கண்ணுற்றகானில்விளையாடல் கருதியம்பொன்
விண்ணுற்றசாரலிமயப்புற மேவினானே.

     (இ - ள்.) கண்உற்ற - எதிர்ப்பட்ட, கானில் - காட்டிலே, விளையாடல் -
வேட்டையாடுவதை, கருதி - எண்ணி,- (பாண்டுமன்னன்),- எண் உற்ற - நல்ல
மதிப்புப் பொருந்திய, சூரன் - சூரனும், இகல்மத்திரராசன் - பராக்கிரமமுடைய
மத்திரராசனும், என்ன - என்று, மண் உற்ற சீர்த்தி வயமன்னர் - பூமியிலே
பொருந்திய கீர்த்தியை யுடையவலிமைபொருந்திய அரசரின், மகளிரோடும்-,
அம்பொன் - அழகிய பொன்னைக்கொண்ட, விண் உற்ற சாரல் -
வானத்தையளாவிய தாழ்வரையோடுகூடிய, இமயம் - இமயமலையின் - புலம் -
பக்கத்தை, மேவினான் - அடைந்தான்; (எ-று.)

     மகளிரோடும் விளையாடல் கருதி இமயமலைப்புறத்தை யடைந்தானென்று
கூறலாமெனினும், 'ஆகேடவிஹாரகௌதுகீ -