பக்கம் எண் :

சம்பவச் சருக்கம்117

     (இ - ள்.) கல்லா - கற்காத [இயற்கையாய்த் தோன்றுகின்ற], மழலை -
குதலைச்சொல்லை, கனி ஊறல் - கொவ்வைக்கனிபோன்ற வாயினின்று
ஊறும்சொள்ளோடு, கலந்து - சேர்த்து, கொஞ்சும் - கொஞ்சிப்பேசுகின்ற,
சொல்லால் - சொல்லினால், உருக்கி - (கேட்போரை) உருகச்செய்து, (எங்கேனும்
பெற்றோர் சென்றால் அவர்களை), அழுது தொடர்ந்து ஓடி - அழுதுகொண்டே
விரைந்து பின் சென்று, பற்றி - பிடித்துக்கொண்டு, மல் ஆர் புயத்தில் - வலிமை
பொருந்திய தோளிலே, விளையாடும் - விளையாடுவதனாலான, மகிழ்ச்சி -
சந்தோஷத்தைவிளைக்கின்ற, மைந்தர் - புதல்வரை, இல்லாதவர்க்கு -
பெறாதவர்க்கு, மனை வாழ்வின் இனிமை - இல்லற வாழ்க்கையினிமை, என்ஆம்
- யாதுஆகும்? (எ-று.)

     புத்திரரைப்பெறாதோரால் இல்வாழ்வினினிமை பெறமுடியாதென்பதாம்.
கல்லாமழலை - கற்கமுடியாத மழலை யெனினுமாம்.தன்மைநவிற்சியணி.    (214)

60.மெய்தானம்வண்மைவிரதந்தழல் வேள்விநாளும்
செய்தாலுஞாலத்தவர்நற்கதி சென்றுசேரார்
மைதாழ்தடங்கண்மகவின்முக மன்னுபார்வை
எய்தாதொழியிற்பெறுமின்ப மிவணுமில்லை.

     (இ - ள்.) மெய் - உண்மையே பேசுதலும், தானம்- (சற்பாத்திரத்தில்)
கொடுத்தலும்,வண்மை விரதம் - வளப்பமுள்ள பலவகை விரதத்தை
மேற்கொள்ளுதலும், தழல்வேள்வி - அக்கினியில் யாகம்புரிதலும்,
(ஆகியசெயல்களை), நாள்உம்செய்தால்உம் - நாடோறும்செய்துவந்தாரேயாயினும்,-
ஞாலத்தவர் -இவ்வுலகத்துப்பிறந்தவர்,- மை தாழ் - அஞ்சனம் பெருகுகின்ற, தட
கண் -விசாலமான கண்களையுடைய, மகவின் - குழந்தையின், முகம் - முகத்திலே,
மன்னு - பொருந்திய, பார்வை - கண்ணின்பார்வையை, எய்தாது ஒழியின் -
அடையாமற் போவாரேயானால், (அன்னார்), நற்கதி சென்று சேரார்-; இவண்
பெறும் இன்பம்உம் - இவ்வுலகத்திற் பெறுகின்ற இன்பமும், இல்லை -
(அவர்கட்கு) உண்டாகாது;மகப்பெறாதோர் இம்மைமறுமைகளை யிழப்ப
ரென்றவாறு.                                                 (215)

61.-இரண்டுகவிகள் - பாண்டு குந்தியினிடம் 'நீ புத்திரப்
பேறுஉண்டாக்கிக்கொள்ள அருள்புரிக ' என்றதைத்
தெரிவிக்கும்.

மென்பாலகரைப்பயவாதவர் மெய்ம்மையாகத்
தென்பாலவர்தம்பசித்தீநனி தீர்க்கமாட்டார்
என்பானிகழ்ந்தவினையாலிட ரெய்திநின்றேன்
நின்பாலருளுண்டெனினுய்வ னெடுங்கணல்லாய்.

     (இ - ள்.) நெடுங் கண் நல்லாய் - நீண்டகண்களையுடைய பெண்ணே! மெல்
பாலகரை - மெல்லிய குழந்தைகளை, பயவாதவர் - பெறாதவர், மெய்ம்மை ஆக
- உண்மையாக, தென்பாலவர்தம் - தெற்கேயுள்ளவரான பிதிரர்களின், பசி தீ -
பசியாகிய தீயை, நனி - மிகவும், தீர்க்கமாட்டார்- போக்கும்
வல்லமையில்லாதவராவர்;