பக்கம் எண் :

118பாரதம்ஆதி பருவம்

என்பால் நிகழ்ந்த வினையால் - என்னிடம் தோன்றிய தீவினையால், இடர்
(மகப்பெறாமையாகிய) துன்பத்தை, எய்திநின்றேன்- அடைந்துள்ளேன்; நின்பால்
அருள் உண்டுஎனின் - உன்னிடம் கருணையுண்டாகுமானால், உய்வன் - (நான்)
ஈடேறுவேன்; (எ - று.)

     என்பால் நிகழ்ந்தவினை என்றது - கிந்தம முனிவரின் சாபத்தை. நான்
சாபவசத்தினனாதலால், என் அனுமதியினால், முனிவர் மூலமாகவோ
தேவர்மூலமாகவோ நீ சந்ததியை யுண்டாக்கிக்கொள்க என்றவாறு.      (216)

62.இல்வாழ்பவர்க்குமடவாரல தியாவரின்ப
நல்வாழ்வுதேசுபுகழ்யாவு நடத்துகிற்பார்
தொல்வானவரின்மறையோரிற் றுறக்கபூமி
செல்வார்பெறும்பேறினிநீயருள் செய்தியென்றான்.

    (இ-ள்.)இல் வாழ்பவர்க்கு - கிருகஸ்தராயிருப்பவர்க்கு, மடவார் அலது -
(அவர்களுடைய) மனைவிமாரேயல்லாமல், இன்பம் - இன்பமும், நல் வாழ்வு -
நல்லவாழ்க்கையும், தேசு - ஒளியும், புகழ் - புகழும், யாஉம் - (ஆகிய)
எல்லாவற்றையும், நடத்துகிற்பார் - உண்டாக்கக்கூடியவர், யாவர் - வேறுயாவர்?
இனி-, நீ-, தொல்வானவரின் - பழமையான தேவர்களாலோ, (அல்லது), மறை
யோரின்-வேதம்வல்லோரான அந்தணராலோ,துறக்கம் பூமி செல்வார்  பெறும்
பேறு அருள்செய்தி - சுவர்க்கலோகத்தையடைபவர் பெறுகின்ற பேற்றை (நான்)
அடையும்படி செய்வாய், என்றான்-; (எ -று.)

     தேவர்மூலமாகவோ வேதியர்மூலமாகவோ நீ மகப்பெறின், அதனால் யான்
தீக்கதிசேராது நற்கதிசேரவே னாதலால், அவ்வாறு நிகழ்த்த
மனம்புரியவேண்டுமென்று பாண்டுவேண்டியவாறு.                      (217)

63.- குந்தி மறுத்துக் கூறுதல்.

பொற்பாவைகேள்வன்மொழிகேட்டதும் பொன்றநாணிச்
சொற்பாலவல்லாப்பழிகூருரை சொல்வதென்னே
வெற்பார்நதிகள்சிறுபுன்குழி மேவினன்றோ
இற்பாலவர்க்குப்பிறர்மேன்மன மேற்பதென்றாள்.

     (இ - ள்.) பொன் பாவை - பொன்னாலியன்ற பிரதிமைபோல்பவளான குந்தி,-
கேள்வன் மொழி- (தன்) கணவனுடையசொல்லை, கேட்டலும்,- கேட்டவுடனே,
பொன்ற நாணி - உயிரழிந்தான்போன்று நாணங்கொண்டு, 'சொல் பால அல்லா -
சொல்லுதற்கு ஏற்றன வல்லாத, பழி கூர் உரை - பழி மிக்க வார்த்தையை,
சொல்வது - (நீ) சொல்லுகின்ற இது, எனே்ன - என்னோ? வெற்புஆர் நதிகள் -
மலியிற்றோன்றுதல் பொருந்திய ஆறுகள், சிறு புன்குழி - மிகச் சிறியகுட்டையில்,
மேவின் அன்றோ - பாய்ந்துநின்றாலன்றோ, இல் பாலவர்க்கு - வீட்டிலிருந்து
தொழில்பார்ப்பவரான மனைவிமார்க்கு, பிறர்மேல் - (தன்கணவர் தவிர)
மற்றையோர்மேல், மனம்-ஏற்பது - சென்றிருப்பதாம், ' என்றாள்- என்று
கூறினாள்; (எ-று.)

    நதிக்குக் கடலிற்புகுதலே பெரும்பாலும் இயற்கையாதல் காண்க.    (218)