பக்கம் எண் :

128பாரதம்ஆதி பருவம்

பேரை, பகுதியால் - (பிறந்ததினத்தின்) தன்மையால், படைத்திட்டான் - (பிறந்த
அக்குமரன்) பெற்றான்;  (எ-று.)

     பங்குனியுத்தரத்திற் பிறந்ததனால், பிறந்த அக்குமரனுக்குப் பல்குநன் என்று
பேராயிற்று: பல்குநன் என்ற இச்சொல். பங்குனன் என்ற இச்சொல், பங்குனன்
என்று திரித்து வரும். உத்தரத்துக்குச் சூரியன் தேவதையாதலால், அந்நாளை
'ஆதபன் பயிலுநாள்' என்றார். 'வரிவில் வாழ்க்கை' எனவும் பாடம்.     (238)

84.- அப்போது பல நன்னிமித்தங்கள் தோன்றுதல்.

கற்பகமலர்கள் சிந்திக் கடவுளர் கணங்களாட
வெற்பகமுனிவரீண்டி மங்கலவேதம்பாடப்
பொற்பகமுழவுவிம்மப் புரிவளைமுழங்கியார்ப்ப
நற்பகலிதுவென்றெல்லா வுலகமுநயந்தவன்றே.

     (இ-ள்.) கடவுளர் கணங்கள் - தேவர்களின் திரள், கற்பகம் மலர்கள்
சிந்தி-, ஆட - ஆனந்தக்கூத்தாடவும்,- வெற்பு அகம் முனிவர் ஈண்டி -
(அருச்சுனன்பிறந்த) மலையினிடத்தே இருடியர் திரண்டு, மங்கலம் வேதம்பாட -
மங்கலமானவேதங்களைப்பாடவும்,- பொற்பு அகம் முழவு விம்ம - அழகைத்
தம்மிடத்துக்கொண்ட முரசங்கள் ஒலிக்கவும், புரி வளை முழங்கி ஆர்ப்ப -
உட்சுழிவுள்ள சங்கவாச்சியங்கள் பேரொலிசெய்து ஒலிக்கவும், இது  நல் பகல்
என்று - இது நல்ல பகற்காலமென்று, எல்லாம் உலகம்உம் -
உலகத்தவரெல்லாம், நயந்த - (அந்நாளை) விரும்பிக்கொண்டாடினர்; (எ -று.)

     வேதத்தில் மங்களமான பகுதி, ஸ்வஸ்திவாசனம் போல்வன. பாண்டு
தவஞ்செய்த சதச்ருங்கமலையில்தானே இந்தப் பாண்டு புத்திரர் தோன்றினரென
அறிக.அன்றே - ஈற்றசை; தேற்றமுமாம்.

85.-மன்னன் கட்டளைப்படி குந்தி அந்த மந்திரத்தை
மாத்திரிக்கு உபதேசிக்க, அவள் வேண்டியபடி அசுவினீ
தேவர்கள்வருதல்.

இறைவனுமகிழ்ந்துபின்னும் யாதவிக்குரைப்பவந்த
மறையினைமுறையிற்பெற்ற மத்திரராசன்கன்னி
குறைவறவிருவர்வேண்டுங் குமரரென்றுன்னிநின்றாள்
நிறையுடையிரவிமைந்த ரிருவருநினைவின்வந்தார்.

     (இ-ள்.)இறைவன்உம் - பாண்டுராசனும், மகிழ்ந்து - மகிழ்ச்சி கொண்டு,
பின்னும் - மேலும், யாதவிக்கு உரைப்ப - குந்திதேவியினிடம் (அந்த
மந்திரத்தை மாத்திரிக்கு உபதேசிக்குமாறு) சொல்ல, - அந்த மறையினை - அந்த
வேதமந்திரத்தை, முறையில் பெற்ற- முறைமையாக அடைந்த, மத்திரராசன்
கன்னி - மத்திரராசனுடைய பெண்ணான மாத்திரி, 'குறைவு அற - குறைநீங்க,
குமரர் இருவர் வேண்டும் - இரண்டு குமாரர்வேண்டும் ', என்று-, உன்னி
நின்றாள் - (அசுவினீதேவர்களை) நினைத்து நின்றாள்: நிறை உடை -
(நற்குணங்கள்) நிறைதலையுடைய, இரவி மைந்தர் இருவர்உம் - சூரியகுமாரரான
அசுவினீதேவதைகளிரண்டுபெரும், நினைவின் வந்தார்- (அந்த மாத்திரியின்)
நினைவின்படியே வந்தார்கள்; (எ-று.) - அசுவினீதேவர்கள், இரட்டையரானவர்.
                                                           (240)