முதல் - முதலிய, விலங்கொடு - மிருகங்களுடனே, ஓடி- (தொடர்ந்து) விரைந்து சென்று, வேதியர் முன்றில் தோறுஉம் - பிராமணருடைய வீட்டின் முன்னிடங்கடோறும், விழை - (கண்டவர்) விரும்புகின்ற, விளையாடல் - விளையாடலை(ச்செய்தற்கு), உற்றார் - (அக்குமாரர்) தொடங்கினார்கள்;(எ-று.) குழந்தைகள் நடக்கும் பருவத்திற்கு முன்னே வளர்ந்தமையை முன்னிரண்டடிகள் தெரிவிக்கும், நடக்கும்பருவத்தில்தானே அக்குழந்தைகள மிக்கவீரமும் சுறுசுறுப்பும் பெற்றிருந்தமையைப் பின்னிரண்டடிகள் தெரிவிக்கும்: மருங்கு-இடை, இடுப்பு; "எடுத்துக்கொள்ளில் மருங்கையிறுத்திடும்" என்றதும் காண்க. இனி, மருங்கு - சமீபம் எனினுமாம். (243) 89.-அக்குமாரர்கள் பூணூல்பூண்டு விச்சைபயின்று யௌவனபருவத்தை யடைதல். செய்தவமுனிவர்தம்மாற் சிகையுடன்புரிநூல்சாத்திக் கைதவமின்றியெண்ணெண் கலைக்கடற்கரையுங்கண்டு மெய்தவம்விளங்கவேழ வில்லியும் விழைந்துநோக்க மைதவழ்சிகரியன்ன வளர்ச்சியின்வனப்பின்மிக்கார். |
(இ-ள்.) செய் தவம் முனிவர் தம்மால் - செய்த தவத்தையுடைய முனிவரால், சிகையுடன் - குடுமிவைக்குஞ் சடங்குடனே, புரிநூல் சாத்தி - வெண்புரிநூலும் அணிவிக்கப்பெற்று, (அக்குமாரர்கள்), கைதவம் இன்றி வஞ்சனையில்லாமல், எண் எண்கலை கடல் கரைஉம் - அறுபத்துநான்கு கலைகளாகிய கடலின் கரைகளையும், கண்டு-, மெய்தவம் விளங்க - உண்மையான தவம் விளங்க, வேழம் வில்லிஉம் விழைந்து நோக்க - கரும்பைவில்லாகவுடைய மன்மதனும் விரும்பிப்பார்க்க,- மை தவழ் சிகரி அன்ன வளர்ச்சியின் - மேகந் தவழ்கின்ற மலையையொத்த வளர்ச்சியோடு, வனப்பின் மிக்கார் - அழகில் மிக்கவரானார்கள்; (எ -று.) முற்பிறவியிற்செய்த நல்வினையினாலேயே இப்பிறவியில் கல்வி முதலியன கைகூடு மாதலால் 'கலைக்கடற்கரையுங்கண்டு மெய்தவம் விளங்க' என்றது. செய்யுணோக்கி, 'மெய்தவம்' என்றது இயல்பாயிற்று. மலைபோன்ற பெருந்தோற்ற முடையவராய் வளர்ந்து யௌவனப்பருவம் வந்ததனால் அழகினால் மிக்கவரானார், அந்தப் பாண்டு புத்திரர்க ளென்க. "க்ரமேணதேஷாம்- ப்ரஸாதயாமாஸவ பூம்ஷி யௌவநம்" என்றது, பாலபாரதம். (244) 90.- ஐம்புதல்வரிடத்தும் தோன்றிய நற்பண்புகள். மார்பினுமகன்றகல்வி வனப்பினுநிறைந்தசீர்த்தி போர்வருதெரியன்மாலைப் புயத்தினுமுயர்ந்தகொற்றம் சீர்தருவாய்மைமிக்க கண்ணினுஞ் செங்கைவண்மை பார்வளஞ்சுரக்குஞ்செல்வப் பரப்பினும்பரந்தவன்றே. |
(இ-ள்.) கல்வி - (அந்தப்பாண்டு புத்திரர்களுடைய) கல்வியானது, மார்பின்உம் - (அவர்களுடைய) மார்பைக்காட்டிலும் அகன்ற-; சீர்த்தி - சீர்த்தியானது, வனப்பின்உம் - (அவர்களுடைய) அழகைக்காட்டிலும், நிறைந்த - நிறைந்தன: போர் வரு தெரியல் |