மாலை புயத்தின்உம் - போரிற் பூணப்படுகின்ற விளங்குதலையுடைய வெற்றிமாலையையணிந்த புயத்தைக்காட்டிலும், கொற்றம் உயர்ந்த - (அவர்களது) வெற்றி மிக்கன: சீர்தரு வாய்மை - சிறப்புப் பொருந்திய சத்தியமானது, கண்ணின்உம் மிக்க - (அவர்களின்) கண்ணைக் காட்டிலும் மிக்கன: செங் கை வண்மை-(அன்னாரின்) செவ்விய கையினாற் செய்யப்படும் தானம், பார் வளம் சுரக்கும் செல்வம் பரப்பின்உம் - பூமியிலே செழிப்பினாலுண்டாகின்ற செல்வப்பரப்பைப் காட்டிலும், பரந்த - மிக்கன; (எ-று.) அகன்றமுதலியவை - பலவின்பால் முற்றுக்கள்: ஐவர்மாட்டும் உளவாதற்கேற்ப வந்தன. "சீர்த்திமிகுபுகழ்." கண்ணின் மிகுதல் - அருமைகொண்டு பாராட்டுதல். (245) 91.- வசந்தகாலம் வருதல். ஆரமுமாரச்சேறு மரும்பனிநீரும்பூவும் ஈரவெண்மதிநிலாவு மிதம்பெறுதென்றற்காலும் ஓருயிரிரண்டுமெய்யா யுருகுவாருருகும்வண்ணம் மாரனைமகுடஞ்சூட்ட வந்ததுவசந்தகாலம். |
(இ-ள்.) ஆரம் உம் - முக்தாஹாரமும், ஆரம் சேறுஉம் - சந்தனக் குழம்பும், அரும்பனி நீர்உம் - அருமையான பனிநீரும், பூஉம் - புஷ்பங்களும், ஈரம் வெள் மதி நிலாஉம் - குளிர்ச்சிபொருந்திய வெண்ணிறமுள்ள சந்திரனுடைய நிலவும், இதம் பெறு தென்றல் கால்உம்- இதமாக வீசுதல் பொருந்திய தென்றற்காற்றும், ஓர் உயிர் இரண்டு மெய் ஆய் உருகுவார் - ஓருயிரும் இரண்டுமெய்யுமாகி(க் காதலுடையராய்க் கூடாது பிரிந்து) மனங்கசிந்துநிற்பவர், உருகும் வண்ணம் - பின்னும் உருகும்படி, மாரனை மகுடம் சூட்ட - மன்மதனை மகுடஞ் சூட்டுமாறு, வசந்தகாலம் வந்தது-; பிரிந்திருப்போர் மிகவும் மனம்உருக வசந்தகாலம் வந்தது; வசந்தகாலம் வரவே, மன்மதன் முடிசூடித் தன்செங்கோலைச் செலுத்தலாயினன். மூன்றாமடிக்கு - ஓருயிர் இரண்டு சரீரத்திலும் பொருந்த உருகுகின்ற ஆடவர்களும் மகளிரும் கலவிவேட்டுருகும் படி என்று உரைத்தலும் ஒன்று. (246) 92.- மூன்றுகவிகள் - வசந்தகாலத்துச் சோலைவருணனை. விதுநலம்பெறுகாவெங்கு மெய்சிவப்பேறவண்டு புதுமையின்முரன்றுமொய்ப்பப் புதுமணம்பரந்துலாவக் கதுமெனத்தலைநடுங்கக் காறடுமாறிற்றம்மா மதுவயர்ந்தவரில்யாவர் மண்ணின்மேன்மயக்குறாதார். |
(இ-ள்.) விது - சந்திரனால், நலம் பெறு - நன்மைபெற்ற,கா சோலை, எங்குஉம் மெய்சிவப்புஏற - எல்லாவிடங்களையும் தன்னுடலிலே (புதுத்தளிர் வெடித்தலால்) செந்நிறம்மிகவும், வண்டு - வண்டென்னும்பறவை, புதுமையின் முரன்று மொய்ப்ப புதுமையினலொலித்து மொய்க்கவும், புது மணம் பரந்து உலாவ மணம் பரவியுலாவவும், கதுமென தலைநடுக்க - விரைவாக மேலிடம் நடுங்கவும், கால் தடுமாறிற்று - கால் தடுமாறலாயிற்று மேல் - பூமியின்மீது, மது அயர்ந்தவரில் - கள்ளைப்பருகியப் பருகியவரில், மயக்குறாதார் யாவர்-? (எ -று.) - அம்மா - வியப்புக்குறிக்கும். |