பக்கம் எண் :

134பாரதம்ஆதி பருவம்

     இவர்கள் கொண்ட காதல் பின் வருத்தமுறுதற்கு ஏதுவாதல் காண்க. (251)

97.- அங்கேஇருவரும் இன்பமனுபவித்தல்.

பஞ்சின்மெல்லடியினாளுங் கணவனும்பழங்கணோட்டம்
நெஞ்சினைநலியமேன்மே னேயமுற்றுருகியாங்கண்
எஞ்சியகாலமெல்லா மென்செய்தேமென்றென்றெண்ணி
வெஞ்சிலைநங்கவேத முறைமையான்மேவினாரே.

    (இ-ள்.) பஞ்சின் மெல் அடியினால்உம் - பஞ்சுபோல்மெல்லிய
பாதங்களையுடையளான மாத்திரியும், கணவன்உம்-, (தாம்கொண்டிருந்த),
பழங்கணோட்டம் - பழமையான [நெடுநாளாகவுள்ள] இச்சை, நெஞ்சினை -
மனத்தை, நலிய - வருத்த,- மேல்மேல் நேயம் உற்று- மேலும்மேலும் அன்பு
பூண்டு, உருகி-, ஆங்கண் - அந்த வனத்திலே 'எஞ்சிய - கீழேகழிந்திட்ட,
காலம் எல்லாம்-, என்செய்தேம் - என்ன செய்திட்டோம்! [இவ்வாறு
இன்பமனுபவியாது வாளாகழித்திட்டோம்!],' என்று என்று எண்ணி - என்று
பலமுறையெண்ணமிட்டு, வெம் சிலை அநங்கவேதம் - கொடிய
வில்லையுடையனான மன்மதனுடைய வேதத்திற்சொல்லிய கரணங்களை,
முறைமையால்-, மேவினால் - நுகரலானார்கள்; (எ-று.)

     வேதம் - வேதத்திற்கூறிய கரணங்களுக்கு இலக்கணை.
கண்ணோட்டமென்பது - இங்கே, விருப்பமென்றபொருளது. அநங்க வேதம் -
காமசாஸ்திரம்.                                                (252)

98.- மாத்திரி அவசையாகிப் பாண்டுவின்மார்பிலே வீழ்தல்.

பூவியலமளிபொங்கப் புணர்முலைபுளகமேற
மேவியகலவியின்ப மெய்யுறுமகிழ்ச்சிமுற்றிக்
காவியங்கண்ணிகேள்வன் கமழ்வரைமார்பினன்போடு
ஓவியமென்னவுள்ள முருகினளயர்ந்துவீழ்ந்தாள்.

     (இ-ள்.) பூ இயல் அமளி பொங்க - பூவினாலியன்ற படுக்கை பொலிவு
பெறவும், புணர் முலை புளகம் ஏற - நெருங்கியுள்ள கொங்கைகளில்
மயிர்க்கூச்சு மிகவும், மேவிய - நுகர்ந்த, கலவி இன்பம் -
புணர்ச்சியின்பத்தினால், மெய் உறு மகிழ்ச்சி முற்றி - உடம்பிலே பொருந்திய
மகிழ்ச்சி முதிர்ந்து,- காவி அம் கண்ணி - கருங்குவளை மலர்போன்ற
அழகியகண்களையுடையாளான மாத்திரி, கேள்வன் - (தன்) கணவனாகிய
பாண்டுவின், கமழ் வரை மார்பின்- (கலவைச் சாந்தின்நறுமணங்) கமழ்கின்ற
மார்பிலே, அன்போடு - அன்புடனே, ஓவியம் என்ன - சித்திரப்பதுமைபோல,
உள்ளம் உருகினள் - மனமுருகி, அயர்ந்து - பரவசையாகி, வீழ்ந்தாள்-; (எ-று.)
                                                          (253)

99.- பாண்டு சாபத்தினால் உயிர்சோர்ந்துவிழுதல்.

அரும்பிய விழியுந் தொண்டை யமுதுறு பவள வாயும்
விரும்பிய சுரத போக மேவரு குறிப்பு மாகிப்
பொரும்படை மதன னம்பாற் பொன்றினன் போல மன்றல்
சுரும்பின மிரங்கி யார்ப்பத் தோன்றலுஞ் சோர்ந்து வீழ்ந்தான்.

     (இ-ள்.) அரும்பிய விழிஉம் - சிறிதுமலர்ந்த கண்ணும், தொண்டை அமுது
உறு பவளம் வாய்உம் - தொண்டையிலுள்ள நீர்