பக்கம் எண் :

சம்பவச் சருக்கம்135

வெளியேயூறுகின்ற பவழம்போன்ற வாயும், விரும்பிய சுரதம் போகம் மேவரு
குறிப்புஉம் - (தான்) விரும்பின புணர்ச்சி பற்றிச் செல்லுகின்ற எண்ணம்
புலப்படுகின்ற முகக்குறிப்பும், ஆகி - உடையவனாகி,- பொரும் படை மதனன்
அம்பால் பொன்றினன்போல- போர்செய்கின்ற மன்மதனுடைய அம்பினால் உயிர்
நீங்கினவன் போல, மன்றல் சுரும்பு இனம் இரங்கி ஆர்ப்ப - மணத்திற்செல்லும்
வண்டுகளின்கூட்டம் இரக்கங்கொண்டு ஒலிப்பதுபோல் ஒலிக்க,- தோன்றல்உம்-
பாண்டுராசனும், சோர்ந்து - உயிரொடுங்கி, வீழ்ந்தான்;

     இறந்தபோதைய பாண்டுவின்நிலை, இங்கு இனிது கூறப்பட்டிருத்தல்
காண்க. புணர்ச்சியே இந்தப்பாண்டுவின் உயிரொழிவுக்குக் காரணமாதலால்,
'பொரும்படைமதனனம்பாற் பொன்றினன்போல' என்றது;
ஏதுத்தற்குறிப்பேற்றவணி.                                  (254)

வேறு.

100.-பாண்டு காமவின்பத்தாலிறந்ததுபற்றிய கவிக்கூற்று.

கொஞ்சுகிளி யன்னமொழி குமுதவித ழமுதால்
எஞ்சின னராதிபதி யீதென வியப்போ
அஞ்சுதரு தீவினையி னாரமுது நஞ்சாம்
நஞ்சுமமு தாமுரிய நல்வினையின் மாதோ.

     (இ-ள்.) கொஞ்சு கிளி அன்ன மொழி - கொஞ்சுகின்ற கிளியை யொத்த
மொழியையுடையளான மாத்திரியின், குமுதம் இதழ் அமுதால் -
ஆம்பல்மலர்போன்ற வாயிதழினின்றுதோன்றிய அமிருதத்தினால், நர அதிபதி -
பாண்டுமகாராசன், எஞ்சினன் - உயிரொடுங்கினான்: ஈது என வியப்புஓ - இது
என்ன ஆச்சரியமோதான்! அஞ்சு தரு தீவினையின் - அஞ்சத்தக்க
தீவினையினால், ஆர் அமுதுஉம் நஞ்சு ஆம் - அருமையான அமிருதமும்
விஷமாகும்: உரிய நல்வினையின்- உரிமையாகக்கொள்ளத்தக்க
நல்வினையினாலே, நஞ்சுஉம் அமுது ஆம் - நஞ்சமும் அமிருதமாகும்; (எ-று.)

     முன்னிரண்டடியை மூன்றாமடி சமர்த்தித்துநின்றது: சிறப்புப் பொருளைப்
பொதுப்பொருளாற் சமர்த்தித்துநின்ற வேற்றுப்பொருள்வைப்பணி. தீவினையால்
அமுதமும் நஞ்சாம்என்று கூற வந்தவர், நான்காமடியால் அதன்
மறுதலைப்பொருளையும் உடன் கூறினார். நர அதிபதி - மனிதர்க்குத்தலைவன்.
மாதோ - ஈற்றசை.

     இதுமுதற் பதினொருகவிகள் பெரும்பாலும் ஈற்றுச்சீரொன்று மாச்சீரும்,
மற்றைமூன்றும் காய்ச்சீர்களுமாகிவந்த கலிவிருத்தங்கள்.              (255)

101.- மாத்திரி பாண்டுநித்திரையிலிருப்பதாகவே நினைத்தல்.

சித்திரைவசந்தன்வரு செவ்வியுடன்மகிழா
மத்திரியெனுங்கொடிய வாட்கண்விடமன்னாள்
முத்திரையுணர்ந்திலண் முயக்கமுறுமின்ப
நித்திரைகொலாமென நினைந்தருகிருந்தாள்.

     (இ-ள்.) சித்திரை - சித்திரைமாதத்தில், வசந்தன் - வசந்தருதுவினால், வரு
- தோன்றுகின்ற, செவ்வியுடன் - அழகோடு, மகிழா -