மாறு, கந்தம் வான் கொன்றை தோயும் கங்கையாள் குமரன் - நறுமணமுள்ள சிறந்த கொன்றைமலரிற் படிந்த கங்காதேவியின் குமாரனான வீடுமன், வைகும் - தங்கியுள்ள, அந்தம் இல் சுவர்க்கம் அன்ன - அழிதலில்லாத சுவர்க்கலோகத்தையொத்த, அத்தினாபுரி - அத்தினாபுரியை, வந்துஉற்றார் - வந்துசேர்ந்தார்; (எ-று.)-ஆகும் - அசை. பாண்டுஇறக்க, குந்தியும் அவளுடைய புத்திரரும் அவனுடைய அந்திம கருமங்களைச் செய்துமுடித்திட்டுக் காட்டிலிருந்து நாட்டில் இப்போதுதான் வந்து சேர்ந்தன ராதலால், உறவின் முறையாரான வசுதேவன் முதலியோர் அவர்களைக் காணுமாறு வந்தனரென்க. (267) 113.-கிருஷ்ணன்முதலியோரும் குந்தியைக்கண்டு புண்ணியநலனை யெண்ணிப் பூமியாளும்முறையையும் ஆலோசித்தல். வெண்ணிறமதியமன்ன விடலையுங்கரியமேக வண்ணனும்வள்ளறன்னைத் திருவயிற்றுயிர்த்தமாதும் எண்ணிலாவுவகையோடுங் குந்தியையெய்தியெல்லாப் புண்ணியநலமுமெண்ணிப் பூமியாண்முறையுங்கோத்தார். |
(இ-ள்.) வெள் நிறம் மதியம் அன்ன விடலைஉம் - வெண்ணிறமுடைய சந்திரனை யொத்த ஆண்களிற் சிறந்தோனாகிய பலராமனும், கரிய மேகம் வண்ணன்உம் - கருநிறமுள்ள மேகநிறத்தனாகிய க்ருஷ்ணனும், வள்ளல்தன்னை திரு வயிறு உயிர்த்த மாதுஉம் - அந்த ஸ்ரீகிருஷ்ணனை (த் தன்) திருவயிற்றிலே தோன்றுமாறு செய்த பெண்ணாகிய தேவகியும், எண் இலா உவகையோடுஉம் - அளவில்லாத மகிழ்ச்சியுடனே, குந்தியை எய்தி - குந்தியையடைந்து, புண்ணியம் நலம்எல்லாம்உம் எண்ணி - புண்ணியத்தினால் விளைந்த நன்மைகளையெல்லாம் கருதிப்பார்த்து, பூமி ஆள் முறைஉம் - (இனிப்) பூமியையாள வேண்டியமுறையையும், கோத்தார் - கருதினார்கள்; (எ -று.)
பாண்டு சாபவசத்தனானபின்பும் அவனுடைய சந்ததியற்றுப் போகாமல் தேவர்களருளால் முளைத்தது புண்ணியத்தினால் விளைந்த நன்மையாதல் காண்க. பூமிபாரம் தீர்ப்பதற்கே திருவவதரித்த க்ருஷ்ணன், பூமியாள் முறையை உடனிருந்துகருதியமை ஏற்றதாதல் காண்க. (268) 114.-தருமபுத்திரனைநோக்கி ஸ்ரீக்ருஷ்ணன் கூறியது. எம்பிரானாதிமூல மிந்திரன்முதலோர்க்கெல்லாம் தம்பிரான்பாண்டுவீன்ற தருமதேவதையைநோக்கி அம்புராசிகளுட்பட்ட வவனிகளனைத்துநாமே இம்பர்நோயகற்றியெல்லா வெண்ணமுமுடித்துமென்றாள். |
(இ-ள்.) எம்பிரான் - எமதுசுவாமியும், ஆதிமூலம் - மூலப்பொருள்கட்கும்மூலமானவனும், இந்திரன் முதலோர்க்கு எல்லாம் தம்பிரான் - இந்திராதியர்க்கும் சுவாமியுமான ஸ்ரீக்ருஷ்ணன், பாண்டு ஈன்ற - பாண்டுமகாராசனுக்குப் புத்திரனாகப்பிறந்த, தருமதேவதையை நோக்கி - தருமதேதையான யுதிஷ்டிரனைப் |