பார்த்து,- அம்புராசிகள் உட்பட்ட அவனிகள் அனைத்துஉம் - சமுத்திரத்துக்கு உட்பட்ட பூமிமுழுவதையும்பற்றி, இம்பர் நோய் - இங்குவரக்கூடிய துன்பத்தை, அகற்றி - போக்கி, எல்லாம்எண்ணம்உம் - எல்லாவெண்ணத்தையும், நாம்ஏ முடித்தும் - நாமே தீர்த்துவைப்போம், என்றான்-; (எ-று.) எல்லாவெண்ணமும் என்றது - பூபாரந் தீர்க்கவேணுமென்று தான் கருதியிருப்பதும், பாண்டவர்க்கு ஞாதியரால் நேரக்கூடியனவாகக்கருதும் பலவகையிடையூறுகளும் ஆகிய பலவற்றையும் காட்டும். தர்மிஷ்டனாதலால் தருமபுத்திரனை, 'தருமதேவதை' என்றார். இம்பரேயகற்றி யென்றும் பாடம். (269) 115.-திருதராஷ்டிரன் முதலியோர் வந்தவரோடு அளவளாவுதல். முகுரவானனனும்வேத்து முனிவனுமனஞ்சொற்காயம் பகிர்விலாவிதுரன்றானும் பாந்தளேறுயர்த்தகோவும் நிகரில்லாத்துணைவர்தாமு நீரொடுநீர்சேர்ந்தென்னத் தகைவிலாவன்பினோடுந் தழுவினர்கெழுமினாரே. |
(இ-ள்.) முகுரவானனன்உம் - திருதராட்டிரனும், வேந்து முனிவன்உம் - அரசனாயிருந்தே முனிவனாயிருக்கும் வீடுமனும், மனம் சொல் காயம் பகிர்வு இலா விதுரன்தான்உம் - மனசு வாக்கு காயம் என்னும் திரிகரணங்களும் வேறுபடுதலில்லாத [ஒன்றுபட்டுள்ள] விதுரனும், பாந்தள் ஏறு உயர்த்த கோஉம் - சர்ப்பத்தை உயரக் [கொடியிற்] கொண்டவனாகிய துரியோதனனும், நிகர் இலா துணைவர்தாம்உம் - ஒப்பற்றவரான அவனுடைய தம்பிமாரும், நீரொடு நீர் சேர்ந்துஎன்ன - நீரோடு நீர் சேர்த்தாற்போல (வேறுபாடின்றி ஒரு தன்மையராய்), தகைவு இலா அன்பினோடுஉம் - தடைப்படுதலில்லாத அன்புடனே, தழுவினர் - (வந்த அந்தவசுதேவன் முதலியோரைத்) தழுவினவராய், கெழுமினார் - உரிமை பாராட்டினார்கள்; (எ-று.) முகுரவானனன் என்றபெயர்க்கு - கண்ணாடிபோன்ற முகமுடையவனென்று பொருள்: முகுரம் - கண்ணாடி: ஆனனம் - முகம்: கண்ணாடி தான் பிறராற்காணப்பட்டுப் பிறரைத் தான் காணும் உணர்ச்சியில்லாதுபோல, தான்பிறராற் காணப்பட்டுப் பிறரைத் தான் காணாத பிறவிக்குருடான முகத்தை யுடையவனென்றவாறு: இனி, கண்ணாடிபோல விளக்கமுடைய முகமுடையவனென்றுமாம்: "வயக்குறுமண்டிலம் வடமொழிப்பெயர்பெற்ற, முகத்தவன்" என்றார், கலித்தொகையிலும். 'நீரொடுபால்சேர்ந் தென்ன' என்றும் பாடம். (270) 116.- வந்தவர்க்கு வீடுமன் முதலியோர் விருந்துசெய்தல். தன்பதிவந்தோர்தம்மைத் தாதைதன்றாதையான முன்புடைக்கங்கைமைந்தன் முதலியமுதல்வரெல்லாம் அன்பொடுகண்டுகண்டு கண்களித்தார்வம்விஞ்சி மன்பதைமகிழ்ச்சிகூர வரம்பிலாவிருந்துசெய்தார். |
|