பக்கம் எண் :

சம்பவச் சருக்கம்143

     (இ-ள்.) தன் பதி வந்தோர் தம்மை - தருமபுத்திரனுடைய நகராகிய
அத்தினபுரத்தை வந்தடைந்தவராகிய வசுதேவர்முதலியோரை, தாதை தன்
தாதைஆன - பாட்டன் முறையாகுபவனான, முன்பு உடை கங்கை மைந்தன்
முதலிய - வலிமையையுடைய கங்கா புத்திரன் [வீடுமன்] முதலான, முதல்வர்
எல்லாம் - முதன்மைபெற்றவரெல்லாம், அன்பொடு - அன்போடு, கண்டு கண்டு
- பார்த்துப் பார்த்து, கண்களித்து - கண்கள் மகிழ்வுறப் பெற்று, ஆர்வம் விஞ்சி
- பிரீதிமிகுந்து,- மன்பதை மகிழ்ச்சி கூர - (செய்யும் உபசாரத்தைக்கண்ட)
மனிதர்திரள் மகிழ்ச்சிமிக, வரம்புஇலா விருந்துசெய்தார் - மிக அதிகமாக
விருந்தினர்க்குச் செய்யும் உபசாரத்தைச் செய்தார்கள்; (எ-று.)         (271)

117.-வீடுமன் முதலியோர் வந்த அவர்களிடம் கூறிய
முகமன்.

நூற்றுவரைவரென்னு நுதியுடைச்சமரவைவேற்
கூற்றுவரனையோர்க்கியாருங் கொடுங்கடும்போரிலாற்றார்
ஆற்றுவரேனுமுங்க ளுதவியுண்டருளுமுண்டு
தோற்றமுமுண்டுநுங்கள் சுமையிவர்சுமையுமென்றார்.

     (இ-ள்.) 'நூற்றவர் ஐவர் என்னும் - நூற்றுவரும் ஐவரும் என்று
சொல்லப்படுகின்ற, சமரம் வை நுதி உடை வேல் கூற்றுவர் அனையோர்க்கு -
போர்க்குரிய கூரிய நுனியைக்கொண்ட வேற்படையையுடைய யமனை
யொத்தவர்கட்குமுன்னே, யார்உம்-, கொடும் கடும் போரில் ஆற்றார் - கொடிய
கடியபோரைச்செய்யும் வல்லமையுள்ளவரல்லர்: ஆற்றுவர்ஏன்உம் -
(எவரேனும்துணிவு கொண்டு) போர்செய்வாரேனும், உங்கள் உதவி உண்டு -
உங்களுடைய உதவி (இவர்கட்கு) உண்டு: அருள்உம்உண்டு - அருளும்
இருக்கின்றது: தோற்றஉம் உண்டு - (உங்கள்சம்பந்தத்தினாலான) மேன்மையும்
உண்டு: இவர் சுமைஉம் - இவர்களுடைய பாரமும், நுங்கள் சுமை -
உங்கள்பாரமே, ' என்றார் - என்று முகமனுரை கூறினார்கள்; (எ-று.)

      'கங்கைமைந்தன் முதலிய முதல்வரெல்லாம்' என்று கீழ்ச் செய்யுளில்
வந்ததே, இச்செய்யுளில் 'என்றால்' என்பதற்கு எழுவாய்.             (272)

118.-வந்தவரை வீடுமன் முதலியோர் உபசரித்து
விடைகொடுத்தனுப்புதல்.

இனிமையின் பலவு மாற்றம் யாவர்க்கு மியாவுஞ்சொல்லித்
தினகரற் றொழுத பின்னர்த் தேர்பரி கரிக டோறும்
மனனுறத் தக்க செல்வம் வகைதொறும் வழங்கி யன்றே
தனதனைப் போல்வார் தம்மைத் தம்பதி யடைவித் தாரே.

     (இ-ள்.) யாவர்க்குஉம் - வந்தவர் எல்லோர்க்கும், இனிமையின் -
இனிமையாக, பல மாற்றம்உம் யாஉம் - பலவார்த்தைகளையும் மற்றுஞ்
சொல்லவேண்டுவனவற்றையும், சொல்லி-,- தினகரன் தொழுத பின்னர் -
சூரியனை நமஸ்கரித்தபின்பு,- தேர் பரி கரிகள் தோறுஉம் - இரதம் குதிரை
யானை என்னும் இவைகளிலெல்லாம், மனன் உற தக்க செல்வம் - மனசு
விரும்பத்தக்க செல்வத்தை, வகை தொறும் - பலவகையிலும் வழங்கி -
கொடுத்து, தனதனை