பக்கம் எண் :

154பாரதம்ஆதி பருவம்

வனானவீமன், ஏய்இரு தவம் பயன் என்ன-பொருந்திய மிக்க தவத்தின்
பயனினாற்போல, பணிவேந்தன் கோயில்-நாகராசனான  வாசுகியினது
சிறந்தமாளிகையிலே, எண்பகல் மேய் இருந்தனன்-எட்டு நாள் தங்கியிருந்தான்;
(எ-று.)

     இன்பத்திற்சிறந்த நாகலோகத்தில் மனிதவுடம்போடு சென்று சிலநாள்
தங்குதல்அரிதிற்செய்த பெரியதவயோகத்தின் சித்தியினாலன்றி இயலாதாதலால்,
'ஏயிருந்தவப்பயனென்ன' என்றார். அரசு உவா - சிறந்தயானை; சிறந்ததை
அரசென்றல், மரபு. உவா - யுவா என்ற வடசொல் விகாரப்பட்டது. அரசுவாவின்
இலக்கணம் - நான்கு கால்களும் துதிக்கையும் கோசமும் வாலுமாகிய ஏழுறுப்பு
நிலத்தில் தோய்ந்து, பாலையும் சங்கையும் போன்ற வெண்ணிறம் வாய்ந்த கால்
நகமுடையதாய், நான்கு கால்கள் துதிக்கை உடம்பு வால் தந்தம் இரண்டு ஆகிய
ஒன்பது உறுப்புக்களாலுங் கொல்லவல்லதாய், ஏழு முழம் உயர்ந்து ஒன்பதுமுழம்
நீண்டு பதின்மூன்று முழச்சுற்றளுவுடையதாகி, தீயுமிழுஞ் சிறிய கண்களையும்
சிவந்தபுள்ளிகளையுமுடைத்தாய், முன்பக்கம் உயர்ந்து பின்பக்கம்
தாழ்ந்திருப்பதாம். மாயிரு - உரிச்சொற்புணர்ச்சி. திறல்வலி -
ஒருபொருட்பன்மொழி.                                            (291)

18.- வீமனின்றித் துரியோதனன்மாத்திரம் நகர் சேர்தல்.

இவனையந்நதியிடை யிட்டபாவியும்
தவனனையுததியிற் சாய்த்தமாலைபோல்
அவனிபனகரியி னரசவெள்வளைத்
துவனிசெந்தழல்விளக் கெடுப்பதுன்னவே.

இதுவும், அடுத்தகவியும் - குளகம்.

     (இ-ள்.) இவனை அ நதியிடை இட்டபாவிஉம் - வீமனை அங்கங்கா
நதியின் நடுவிலே போகட்ட தீவினையுடையவனான துரியோதனனும்,- தவனனை
உததியில் - சாய்த்தமாலை போல் - சூரியனைக் கடலில்வீழ்த்திய
மாலைக்காலம்போல,- அரசர் வெள் வளைதுவனி - அரசர்களுக்குரிய
வெண்மையான சங்கத்தின் முழக்கத்தோடு, செம் தழல் விளக்கு எடுப்ப -
சிவந்த அக்கினியினாலாகிய தீபத்தை (நகரத்தவர்) எடுக்காநிற்க,- அவனிபன்
நகரியின் துன்ன - திருதராட்டிர மகாராசனுடைய நகரத்தில் [அத்தினாபுரியில்]
சேர்ந்திடவே,- (எ-று.)- குந்தி கண்டிலள் விண்டிலளென வருங் கவியோடு
முடியும்.

     துரியோதனன் மாலைப்பொழுதில் அத்தினாபுரிக்கு வந்தானென்பது, இதன்
கருத்து. செந்நிறமுடைய சூரியன் கடலில் மறைந்திடுதற்குக் காரணமான கரிய
இருட்பொழுதாகியமாலையை, செம்மையுடைய வீமன் கங்கைப்பெருக்கில்
மூழ்கியிடுதற்குத் தூண்டுகோலான கறுத்த களங்க சித்தமுடைய துரியோதனனுக்கு
உவமைகூறினமை நன்குபொருந்தும். அன்றியும், சூரியனைக் கடலிற் சாய்த்த
மாலை அவன் அழியாதுநிற்கச் சிறிதுபொழுதிலேதான் அழிதல்போல, வீமனை
நதியில் ஆழ்த்திய துரியோதனனும் அவன் இறவாதுநிற்கத் தானே விரைவில்
அழிந்திடுதலையும் நோக்குக. காலை மாலையாகிய இரண்டு சந்தியிலும்
இராசநகரியிற் சங்கொலித்