பக்கம் எண் :

வாரணாவதச் சருக்கம்159

விளக்கும் மெல் பங்கயங்கள்உம் - (தனது) தலைவனான சூரியன்
(மறைதலாற் குவிந்து அவன்) உதித்தலால் மலர்ந்த மெல்லிய தாமரைமலர்களும்,
மதியினால் குளிர் நெடு வான்உம் ஆயினான் - (சூரியனால் வெப்பமடைந்து)
சந்திரனாற் குளர்ச்சியடைந்த பெரிய ஆகாயமும் போல்ஆனான்; (எ-று.) -
பங்கயங்கள் என்ற பன்மைக்குப்பயன் இல்லை.

     சூரியன்கண்டபொழுது தாமரை மலர்தலும் காணாதபொழுது
குவிதலுமாகிய இயல்புபற்றி, தாமரையாகியபெண்ணுக்குச்சூரியனைக் கணவனென்ப.
நலங்கொள்மேனியாள்..... வானுமாயினாள்என்றும் பாடம்.                 (300)

27.-வீமன் உற்றார்க்கு மகிழ்ச்சியையும் உறாதார்க்கு அச்சத்தையும்
விளைத்தல்.

வேதியர்குரவர்வில் விதுரன்வீடுமன்
ஆதியர்துணைவரந் நகருளார்களென்று
ஓதியசனங்களுக் குவகைநல்கினான்
ஞாதியர்கிளைக்கெலா நடுக்கநல்கியே.

     (இ-ள்.) (இத்தன்மையனான வீமன்),- ஞாதியர்கிளைக்கு எலாம் நடுக்கம்
நல்கி - பங்காளிகளாகிய துரியோதனாதியரது கூட்டத்துக்கெல்லாம் மிக்க
அச்சத்தைக்கொடுத்து,- வேதியர் - பிராமணர்களும், குரவர் - (தாயும்
தமையனும்முதலிய) பெரியோர்களும், வில் விதுரன் வீடுமன்ஆதியர் -
வில்வித்தையில் தேர்ந்த விதுரன் பீஷ்மன் முதலானவர்களும், துணைவர் -
(தனது) தம்பிமாராகிய (அருச்சுனன்முதலிய) மூவரும், அ நகர் உளார்கள் -
மற்றும் அந்நகரத்திலுள்ளவர்களும், என்ற ஓதிய - என்று சொல்லப்பட்ட,
சனங்களுக்கு - சனங்களுக்கெல்லாம், உவகை நல்கினான் - மகிழ்ச்சியைக்
கொடுத்தான்; (எ-று.)

     குரவர் என்பதற்கு - ஐம்பெருங்குரவரிற்சேர்ந்த தாயும் தமையனும்
குலகுருவும் கொள்க. உவகைநல்கினான் நடுக்க நல்கி - தொடைமுரண்.      (301)

28- வீமன் அத்தினாபுரிசேர்ந்து தாயைத் தேற்றி வாழ்தல்.

குந்தியைமகிழுரை கூறிக்கற்பினால்
அந்திமீனனையவ ளருளின்வாழ்த்தவே
செந்திருமகளுறை செல்வமாநகர்
வந்திவன்முன்புபோல் வளருநாளிலே.

இதுமுதல் மூன்றுகவிகள் - ஒருதொடர்.

     (இ-ள்.) இவன் - இந்த வீமன்,- செம் திருமகள் உறை செல்வம் மாநகர்
வந்து - செம்மையுடைய இலக்குமி வசிக்கின்ற செல்வங்கள் நிறைந்த பெரிய
அத்தினாபுரிக்கு வந்து, குந்தியை மகிழ்உரை கூறி - (தனது தாயாகிய)
குந்தியைநோக்கி (அவளுக்கு) மகிழ்ச்சியைத்தரும் இனியவார்த்தைகளைச்
சொல்லி, கற்பினால்