பக்கம் எண் :

162பாரதம்ஆதி பருவம்

வரதன் ஒருவன் வந்தான் - வசிஷ்டமகாமுனியைப் போன்ற ஒரு முனிவன்
தோன்றினான்; (எ-று.)

     அங்கிரஸ் என்னும் முனிவனது குலத்தில் தோன்றிய பரத்துவாசமாகாருஷி
கங்கைத்தலைப்பில் யாகஞ்செய்துகொண்டிருக்கையில் அங்கு நீராடவந்த
ஒருதேவமாதின் கட்டழகைக் கண்டு காதல்கொண்டு நெகிழ்ந்து உருக, அவனது
விருப்பத்தால் ஒருதுரோண கலசத்திலிருந்து ஒருகுமாரன் பிறந்தான்; அவனுக்குத்
துரோணனென்று பெயராயிற்று என்று அறிக. அந்தத் தேவமாதின் பெயர்
கிருதாசி என்ற வடநூல்கூறும். பரதநாதவேத பரத்வாஜன், வ்ரதம், மேநகா,
ஸுூரததாது, த்ரோணகும்பம், வரதன்,வசிஷ்டமுநி - வடசொற்கள். பரதமென்ற
நாட்டியசாஸ்திரத்தின் பெயர் - இங்கே இலக்கணையாய், நாட்டியத்தின்
அங்கமான தாளத்தைத் குறித்தது. வேதம் - உதாத்தம் முதலிய நால்வகை
சுவரத்தோடு கூடியிருத்தலேயன்றி 'வேத கீதம், 'ஸாமகாநம்' என்றபடி மற்றும்
இசை வகைக்கும் உரியதாய் நிற்றலால், 'நாதவேதம்' எனப்பட்டது.
பரத்வாஜன்என்ற பெயருக்கு - பிரசைகளைப் பாதுகாப்பவ னென்று பொருள்
கூறுவர்; பரத் - பரிப்பவன், வாஜம் - ஜனம். துரோணம் - இரண்டு மரக்கால்.
வசிஷ்டன் என்பதற்கு - (இந்திரியங்களை) வசப்படுத்தியவ னென்பது உற்பத்தி
யருத்தம். முநி - மநநசீலன்: எப்பொழுதுங் கடவுளைத் தியானஞ் செய்பவன்.
மேனகையான் மெலிந்து என்றும் பாடம்.                               

          இதுமுதற் பதினாறு கவிகள் - எல்லாச்சீரும் மாச்சீர்களாய்வந்த
கழிநெடிலடிநான்கு கொண்ட அறுசீராசிரிய விருத்தங்கள்.           (306)

33.ஈரேழ்விஞ்சைத்திறனு மீன்றோன்றன்பாலெய்தி
நீரேழென்னயாவு நிறைந்தகேள்விநெஞ்சன்
பாரேழெண்ணும்படைகள் பரசுராமன்றன்பால்
ஓரேழ்பகலினுலகுக் கொருவனென்னக்கற்றான்.

     (இ-ள்.)(அந்தத்துரோணன்),- ஈர் ஏழ் விஞ்சை திறன்உம் - பதினான்கு
வித்தைகளின் வகைகளையும், ஈன்றோன் தன்பால்எய்தி (தனது) தந்தையான
பரத்துவாச முனிவரிடத்திலே பெற்று [கற்றறிந்து], நீர் ஏழ்என்ன கேள்வி யாஉம்
நிறைந்தநெஞ்சன - ஏழு கடல்போல நூற்கேள்விக ளெல்லாம் நிரம்பின
மனத்தையுடையவனாய், பரசுராமன் தன்பால் - பரசுராமனிடத்தில், பார் ஏழ்
எண்ணும் படைகள் - ஏழுலகத்தாரும் மதிக்கத்தக்க அஸ்திரங்களை, ஓர் ஏழ்
பகலின் - ஏழுநாளிலே, உலகுக்கு ஒருவன் என்ன கற்றான் - உலகத்திற்கு
(இவன்) ஒருவனேயென்று சொல்லும்படி பயின்று தேர்ந்தான்; (எ-று.)

     இந்தத்துரோணன் அக்நிவேசனென்னும் முனிவனிடத்தும் படைக்கலந்
தேர்ந்தன னென்பது, மேல் 38-ஆங் கவியில் விளங்கும். ("இடையிருவகையோ
ரல்லது நாடிற், படைவகை பெறாஅரென் மனார்புலவர்" என்ற
தொல்காப்பியச்சூத்திரத்தின் உரையில் 'நாடின் என்பதனால் ஒருசார் அந்தணரும்
படைக்கு உரியரென்பது