17.- அந்த யயாதி சுக்கிராசாரியர்புதல்வியைமணந்து இருபுதல்வரைப் பெறுதல். யயாதியென்றுகொண்டிவனையே யெவரினுஞ்சிறக்க வியாதனும்புகழ்ந்துரைத்தது மற்றிவன்மேனாள் புயாசலங்களுக்கிசையவே புகரவன்புதல்வி குயாசலந்தழீஇயிருவர்வெங் குமரரையளித்தான். |
(இ - ள்.) இவனைஏ - இந்த நகுடனது புத்திரனையே, யயாதி என்றுகொண்டு -யயாதியென்றுபாராட்டிக்கொண்டு, எவரின்உம் சிறக்க - யாவரினும்மேன்மைபெறும்படி, வியாதன்உம் - வியாசமகரிஷியும், புகழ்ந்து உரைத்தது - புகழ்ந்துகூறியது: மேல்நாள் - முற்காலத்தில், இவன் - இந்தயயாதி, புய அசலங்களுக்குஇசைய - (தன்னுடைய) மலைபோன்ற புஜங்களுக்குஏற்க, புகரவன் புதல்வி -சுக்கிராசார்யருடைய புத்திரியின், - குய அசலம் தழீஇ - மலைபோன்ற தனங்களைத்தழுவி, வெம் குமரர் இருவரை - கொடுங்குணமுடைய இரண்டு புத்திரர்களை,அளித்தான்-; (எ -று.) புயாசலங்களுக்குஇசையக் குயாசலந் தழுவினா னென்று நயம் காண்க: மலையோடு மலை சேர்த லியல்பாதல் அறிக. யயாதியின் உபாக்கியானம் வியாசபாரதத்து விரிவாகக் கூறப்பட்டிருத்தலால், யயாதியென்றுகொண்டு வியாதனும்புகழ்ந்துரைத்தது இவனையே யென்றார். புகரவன் புதல்வியின் பெயர், தேவயாநீயென்பது. இருவர்குமரர் - யது துருவசுஎனப்படுவர். வெங்குமரரென்றது- இவர்கள்தந்தைசொல்லைக்கேளாதவராதலால்; இத்தன்மை, மேல் இருபத்துமூன்றாங் கவியில்விளங்கும். மற்று - அசை. (25) 18.- இதுவும் அடுத்த கவியும் - தேவயானைக்குப் பணிப்பெண்ணும் விடபன்மனென்னும் அசுரமன்னன்மகளுமான சன்மிட்டையை, யயாதி, கந்தருவமணத்தாற் சேர்ந்தமை கூறும். அன்னகாலையிலிவடன தாருயிர்த்துணையாய் முன்னிசைந்தபேரிசைவினா லேவலின்முயல்வாள் நன்னிலந்திகழ்கவிதனக் குரைகெழுநண்பாம் மன்னவன்றருமடவர லிவனுழைவந்தாள். |
(இ - ள்.) அன்ன காலையில் - அக்காலத்தில், இவள் தனது - இந்தத் தேவயானையின், ஆர்உயிர்துணை ஆய் - அரியஉயிர்த்தோழியாய், முன் இசைந்தபேர் இசைவினால் ஏவலின் முயல்வாள் - முன்னம் உடன்பட்ட மிக்க உடன்பாட்டின்படியே (அந்தத்தேவயானையின்) ஏவலைமுயன்றுசெய்பவளான, நல் நலம் திகழ் கவி தனக்கு உரை கெழு நண்பு ஆம் மன்னவன் தரும் மடவரல் - மிக்கநற்குணத்தால் விளங்குகின்ற சுக்கிராசாரியனுக்குப் புகழ்ந்து கூறப்படும் நண்பனான(வ்ருஷபர்வனென்ற) அசுரமன்னவன் பெற்ற பெண், இவனுழை - இந்தயயாதியினிடத்து, வந்தாள்-; (எ - று.) சன்மிட்டையென்பவள் - அசுரகுருவான சுக்கிராசார்யர்க்கு நண்பனான வ்ருஷபர்வன்மகள்: சுக்கிராசார்யரின்புத்திரி தேவ |