பக்கம் எண் :

170பாரதம்ஆதி பருவம்

47.-அரசர்க்கு உரிய வரிசைகளை வீடுமன் துரோணனுக்கு அளித்தல்.

முனிநீ யையா விதற்கு முன்ன மின்று முதலா
இனியிவ் வுலகுக் கரசா யெம்மி லொருவ னாகிக்
குனிவில் வலியா லமருங் கோடி யென்று கொடுத்தான்
பனிவெண் குடையு நிருபற் குரிய வரிசை பலவும்.

     (இ-ள்.) 'ஐயா - சுவாமீ! இதற்கு முன்னம் முனி நீ - இதற்கு முன்பு நீ
அந்தணன்: இன்று முதல் ஆ - இன்றைத்தினம் முதற்கொண்டு, இனி -
இனிமேல், (நீ), இ உலகுக்கு அரசு ஆய் - இந்த இராச்சியத்துக்குத்
தலைவனாய், எம்மில் ஒருவன் ஆகி - எங்களில் ஒருத்தனாய், குனி வில்
வலியால் அமர்உம் கோடி - வளைந்தவில்லின் வலிமையாற் போர்செய்தலையும்
மேற்கொள்வாய்,' என்று - என்று சொல்லி, (வீடுமன் துரோணனுக்கு), பனி
வெள்குடைஉம் - குளிர்ச்சி தரும் வெண்கொற்றைக் குடையையும், நிருபற்கு
உரிய வரிசை பல உம் - (மற்றும்) அரசர்க்கு உரிய பல சிறப்புச்
சின்னங்களையும், கொடுத்தான்-; (எ-று.)

      'மாணாக்கரது உடைமை யெல்லாம் குருவுக்கு உரியன' என்ற கருத்தால்,
'இவ்வுலகுக்கு அரசாய்' என்றான். 'குருகுலத்தவர்க்கு இராச்சியம் முதலிய
செல்வம் எவ்வளவு உண்டோ அவ்வளவுக்கும் நீயே அரசன்' என்று வீடுமன்
துரோணனுக்கு உபசாரமொழிகூறினதாக முதனூல் கூறுவதையும் உணர்க. வரிசை
பல - தேர், கொடி விருது, கழல் முதலியன. "படையுங்கொடியும் குடையும்
முரசும், நடை நவில் புரவியும் களிறும் தேரும், தாரும் முடியும் நேர்வன
பிறவும்... செங்கோலரசர்க்குஉரிய" என்றது காண்க.               (321)

வேறு.

48.- கௌரவபாண்டவர் அன்றுமுதல் துரோணனிடம் கல்விதேர்தல்.

அன்றுமுத லாகவரி வெஞ்சிலைமு தற்படைக ளானவைய னைத்து
                                            மடைவே,
தொன்றுபடுநூன்முறையின்மறையினொ டுதிட்டிரசுயோ
                                   தனர்களாதியெவரும்,
ஒன்றியது ரோணனரு ளாலும்வலி யாலுமுயருணர்வுடைமை யாலு
                                             முதலே,
நின்றகுறையாலுமொருவர்க்கொருவர்கல்வியினிரம்பினர்
                                     வரம்பினிதியோர்.

     (இ-ள்.) வரம்பு இல் நிதியோர் - எல்லையில்லாத செல்வங்களை
யுடையவர்களான, உதிட்டிர சுயோதனர்கள் ஆதி எவர்உம் - தரும புத்திரனும்
துரியோதனனும் முதலிய ஐவரும் நூற்றுவரும்,- அன்று முதல் ஆக - அந்த
நாள் முதலாக, ஒன்றிய துரோணன் அருளால்உம் - (தங்களிடத்துப்)
பொருந்திய துரோணசாரியனது கருணையினாலும், வலியால்உம் - (தங்கள்)
உடல் வலிமையாலும், உயர் உணர்வு உடைமையால் உம் - (தாங்கள்) சிறந்த
இயற்கை யறிவை யுடைமையாலும், முதல்ஏ நின்ற குறையால்உம் -
முற்பிறப்பிலே கற்றுநின்ற சேஷத்தாலும்,- வரி வெம்சிலைமுதல் படைகளானவை
அனைத்துஉம் - கட்டமைந்த பயங்கரமான வில் முதலிய ஆயுதங்க