பக்கம் எண் :

வாரணாவதச் சருக்கம்171

ளெல்லாவற்றிலும், கல்வியின் - (அவற்றின்) சாஸ்திரத்திலும், தொன்று படுநூல்
முறையின் - பழமைபொருந்திய நூல்களிற்கூறிய முறைப்படியே, மறையினொடு-
(அஸ்திரங்களுக்கு உரிய) மந்திரங்களோடு, அடைவே - முறைமையாக,
ஒருவர்க்கு ஒருவர் நிரம்பினர் - ஒருத்தர் போலவே அனைவரும்
தேர்ச்சியுற்றார்கள்; (எ-று.)

     பிரயத்தின பூர்வமாக மறைக்கத்தக்கதாதலால், மந்திரம், மறையென்று
பெயர்பெறும்; செயப்படுபொருள்விகுதி புணர்ந்து கெட்டது. 'முயலுணர்வு' என்ற
பாடமோதி, ஊக்கம் விளைவிக்கும் அறிவென்று உரைப்பாருமுளர்.
கல்விமுற்றக்கற்றல் முற்பிறப்பிற் பரிசயமுடையார்க்கன்றிமுடியாதாதலால்
'முதலேநின்ற குறையாலும்' என்றார்; இனி, இதற்கு - முதலிற்
கிருபாசாரியனிடத்துக் கற்றுநின்ற சேஷத்தாலும் என்று உரைத்தலும் ஒன்று,
'கல்வியு நிரம்பினர்' என்ற பாடத்துக்கு - இயல்பிலே பொருட் செல்வம்
நிறைந்தவர் இப்பொழுது கல்விச்செல்வமும் நிறைந்தனரென்க.

     இதுமுதற் பதின்மூன்றுகவிகள் - பெரும்பாலும் முதலைந்துசீர்கள்
விளங்காய்ச்சீர்களும், மற்றையவை மாச்சீர்களுமாகிய எழுசீராசிரியவிருத்தங்கள்.
                                                            (322)

49.- அவர்களில் அருச்சுனன்சிறந்து குருவுக்குப்பிரியனாதல்.

வெஞ்சிலையினாலிவனிராகவனையொக்குமென விசயன்விசயத்
                                            தின்மிகவே,
எஞ்சியகுமாரர்கள் பொறாமையின்மிகுந்தனர்களிரவியெதிர்
                                      மின்மினிகள்போல்,
அஞ்சொன்முனிதானுமிவன்மேலேவரினும்பெருக
                                  வன்புடையனாகியகலான்,
நெஞ்சுறவருங்கலைகள்கற்குமவர்தம்மளவி னேயநிகழாதவர்கள்யார்.

    (இ-ள்.) விசயன் - அருச்சுனன்,- வெம் சிலையினால் இவன் இராகவனை
ஒக்கும் - என கொடிய வில்லின் தேர்ச்சியால் இவன் (பகைவர்க்கு)
இராமபிரானைப்போல்வா னென்று (அனைவரும்) சொல்லும் படி,
விசயத்தில்மிகஏ - கல்வித்தேர்ச்சியில்மேம்படவே,- (அதுகண்டு), எஞ்சிய
குமாரர்கள்- ஒழிந்த துரியோதனாதியர்கள், இரவி எதிர் மின் மினிகள்போல் -
சூரியனெதிரில் மின்மினிப்பூச்சிகள் போலாகி, பொறாமையில் மிகுந்தனர்கள் -
(இவனிடத்துப்) பொறாமைகொள்ளுதலில் மேம்பட்டார்கள்: அம்சொல் முனி
தான்அம்- அழகிய சொற்களையுடைய துரோணாசாரியனும், எவரின்உம்பெருக
இவன்மேல் அன்பு உடையன் ஆகி - மற்றை மாணாக்க
ரெல்லோரிடத்தினும்பார்க்க இவ்வருச்சுனனிடத்தில் மிக அம்புடையவனாய்,
அகலான்- (அந்த அன்பினின்று என்றும்) நீங்காதவனானான்; அரு கலைகள்
நெஞ்சு உற கற்குமவர் தம் அளவில் - அரியகல்விகளை மனத்தில் ஊன்றப்
படிக்குமவரிடத்து, நேயம்நிகழாதவர்கள் - அன்புகொள்ளப்பெறாத ஆசிரியர்,
யார் - யாவர்? (எ-று.)

     மற்றையோரினுங் கல்வியில் நன்கு தேர்ந்த அருச்சுனனிடம் துரோணன்
மற்றையோரிடத்தினும் மிக்க அன்பு வைத்தானென்ற சிறப்புப் பொருளை,
நன்றாகக் கல்விதேர்பவரிடம் அன்பு கொள்ளுதல் ஆசிரியர்க்கு இயல்பேயென்ற
பொதுப்பொருள் கொண்டு விளக்