பக்கம் எண் :

வாரணாவதச் சருக்கம்173

வைத்து அவ்வுருவையே துரோணனாகப் பாவித்துக் குருவாகக் கொண்டு
மிகுந்தபக்தியோடு அவ்விக்கிரகத்துக்குப் பூசைபண்ணி அப்பூஜையின் பலனால்
அஸ்திர சஸ்திரப் பயிற்சிவகை யனைத்தும் தன் மனத்தில் தானே
தோன்றப்பெற்றுத் துரோணனுக்குத் தெரியாமலே வில்வித்தையில்
அருச்சுனனினும் தேர்ந்துவந்தான்; இங்ஙனம் இருக்கையில், துரோணன்
கட்டளைப்படிவேட்டைக்குச்சென்ற குருகுலகுமாரர்கள் தம்முடன்சென்ற ஒரு
நாயின்வாயில் குரைக்க முடியாதபடி ஒருவனால் ஒருங்கே ஏழம்புகள்
பிரயோகிக்கப்பட்டமையைக் கண்டு வியந்து நாணி அங்ஙனம் பிரயோகித்தவனை
நாடிக் கண்டு விசாரித்துத் துரோண சிஷ்யனென்று அறிந்து மீண்டும்
நகருக்குவந்து நிகழ்ந்தசெய்தியனைத்தையுங் குருவினிடம் கூறினர்; பின்பு
அருச்சுனன் ஏகலவ்யனையே சிந்தித்தவனாய் ஏகாதந்தத்தில்
துரோணனையடுத்து 'என்னினும் மேம்பட்ட சிஷ்யன் இருக்காமல்
என்னைக்கற்பிப்பதாக முன்பு நீர் சொல்லியிருக்க, இங்ஙனம் ஒருவன் உளனே'
என்று குறைகூற, துரோணன் சிறிதுசிந்தித்துத்தேர்ந்து அருச்சுனனை
அழைத்துக்கொண்டு ஏகலவ்யனிடம் வந்து, தன்னை வணங்கி யுபசரித்த
அவனைநோக்கி 'சிஷ்யனாகிய நீ குருவாகிய எனக்குத் தக்ஷிணை
கொடுக்கக்கடவாய்' என்ன, அதற்கு அவன் 'என்ன வேண்டும்?
கட்டளையிட்டது எதுவாயினும் கொடுப்பேன்' என்ற வளவிலே, துரோணன் 'உன்
வலக்கைக் கட்டைவிரலைக் கொடுப்பாய்' என்றுகூறு, ஏகலவ்யனும்
வாக்குத்தவறாமல் மகிழ்ச்சியோடு அவ்விரலைத் துணித்துக் குருதக்ஷிணை
கொடுத்தனன்; பின்பு அவன் மற்றைவிரல்களால் அம்புதொடுக்கலானானாயினும்
முன்போலச்சிறப்புறானாயினான்; அதனால் அருச்சுனன் மகிழத் துரோணனும்
அருச்சுனனுக்கு முன்புசொன்னசொல் தவறாதவனாயினன் என வரலாறு அறிக.

     அருச்சுன னென்பதற்கு - வெண்ணிறமுடையவ னென்று பொருள்; இது -
முதலில், இந்நிறமுடைய கார்த்தவீரியமகாராசனுக்குப் பெயராயிருந்து, பின்பு,
அவனைப்போன்ற சௌரியதைரியங்களை யுடைய இப்பார்த்தனுக்கு
இட்டுவழங்கப்பட்டது: பார்த்தன் கருநிறமுடையவ னாதலால், அவனுக்கு
அருச்சுனனென்பது நிறம்பற்றி வந்த இயற்பெயரென்றல் பொருந்தாது. இனி,
அருச்சுனன் என்பதற்கு - பசுமைநிறமுடையோனென்று பொருள் கூறுவாருமுளர்.
அன்றியும், பார்த்தன்,(பார்வதிபோலப்) பிறந்தபொழுது
வெண்ணிறமுடையவனாயிருந்தது பின்பு கருநிறமடைந்தா னென்று கூறலும்
உண்டு, கடலை, பூமியாகிய பெண்அணியும் மேகலையணி ளெனக் கூறதல்,
கவிமரபு.                                                 (324)

51.- அருச்சுனனது வில்திறத்தின் சிறப்பு.

அங்குலிகமொன்றுபுனலாழ்தருகிணற்றில்விழ வந்தமுனிதேடு
                                   மீனெனப்,
புங்கமொடுபுங்கமுறவெய்திவனெடுத்தமை புகன்றருகு
                                   நின்றவரைநீர்,
இங்கிதனிலைத்தொகைகள்யாவுமுருவப்பகழி யேவுமி
                                   னெனாமுன்விசயன்,
துங்கவில்வளைத்தொருகணத்தினில்வடத்திலை
                         துளைத்தனனிலக்கிறொடையால்.