(இ-ள்.) முத்தி முனி - வீடுபெறுதற்குஉரிய [ஞானவொழுக்கங்களிற் சிறந்த] துரோணாசாரியன், நீர் படி தட துறையில்- நீராடுகிற பெரிய நீர்த்துறையிலே, தாள் இணையை - (தனது) கால்களிரண்டையும், முதலை கவர்வுற்றது - ஒருமுதலை பிடித்துக் கொண்டது, எனலும் - என்று சொன்ன வளவிலே,- சித்திரம் வில் வீரர் பலர்உம் - அழகிய வில்லை யேந்திய வீரர்களான குருகுல குமாரர்கள் எல்லோரும், தம வெறு கையொடு - தங்கள் வெறுங்கைகளுடனே, அருகு சென்று - பக்கத்திற் போய் நின்று, விட- (திகைத்துச்) சும்மாநின்றுவிட, விசயன் - அருச்சுனன்,- இபம் - ஒருயானை [கஜேந்திராழ்வான்], பத்தியின் - பக்தியோடு, விரைந்து - விரைவாக, பொதுவே அழைக்க - (ஆதிமூலமேயென்று) பொதுவாகக் கூப்பிட, (அதனைப் பாதுகாக்கும்பொருட்டு), ஒரு பறவைமிசை வந்த - ஒப்பற்ற கருடவாகனத்தின் மேல் ஏறிவந்த, நெடு மால் - பெருமைக்குணமுடைய திருமாலினது, கை - கையினால் எறியப்பட்ட, திகிரி - சக்கராயுதத்தை, போல் - ஒத்த, கணையின் - ஒருபாணத்தால்,- அதனை- அம்முதலையை, பழைய கார் முதலையின் - (அச்சக்கரம் பிளந்த) பழைய கரிய முதலையைப்போல, துணி செய்தான் - பிளந்து தள்ளினான்; (எ -று.) ஒருநாள் துரோணன் மாணாக்கர்களுடனே சென்று கங்கைத் துறையில் நீராடுகையில் வலியதொருமுதலை அவனது பாதங்களை முழங்காலளவும் பிடித்துக்கொள்ள, அவன் அதனை விடுவித்துக் கொள்ள வல்லவனாயினும், சிஷ்யர்களைப் பரீட்சிக்கும் பொருட்டு அவர் அனைவரையும் நோக்கி 'முதலையைக்கொன்று என்னை விடுவியுங்கள்' என்று விரைந்துகூற, மற்றையாவரும் இன்னது செய்வதென்று அறியாமல் திகைத்துநிற்க, உடனே அருச்சுனன் கூரிய சிறந்த அம்பு தொடுத்து முதலையைக் கொன்று குருவைக் காத்தனனென அறிக. முதலைவாய்ப்பட்ட காலுக்கு யாதொரூறுபாடுஞ் செய்யாது அதனைப் பற்றிய முதலையின் வாயையே துணித்துக் குறிக்கொண்டு காத்த திறத்தை வியந்து 'மால்கைத்திகிரிபோல் கணை' என்று கூறினார். (326) 53.-துரோணன் அருச்சுனனுக்கு ஒருசிறந்த அஸ்திரம் அளித்தல். ஒருதனுவினாலிதயமகிழ்குருவினுக்கிவனு முயிருதவினானுதவலும், குருவுமிவனுக்குநிலையாலுமறையாலும்வலிகூர்பகழியொன்றுதவினான், இருவருநயந்தருளும்வினயமுமிகுந்தனர்களின்னுயிருமனமு மெனமேல், மருவிவருநல்வினைவயத்தின்வழிவந்தபயன் மற்றொருவருக்கு வருமோ. |
(இ-ள்.)இவன்உம் - இந்த அருச்சுனனும், இதயம் மகிழ் குருவினுக்கு - (தன்னிடத்து) மனமகிழ்ச்சிகொண்ட குருவாகிய துரோணனுக்கு, ஒருதனுவினால் - ஒப்பற்ற வில்லின் திறத்தைக் கொண்டு, உயிர் உதவினான் - (இவ்வாறு) உயிரைப் பாதுகாத்தான்: உதவலும் - (இங்ஙனம்) உயிர்கொடுத்தவளவிலே, குருஉம் - (மிகமகிழ்ச்சி கொண்ட) துரோணனும், இவனுக்கு - அருச்சுனனுக்கு, நிலையால்உம் மறையால்உம் வலி கூர் பகழி ஒன்று உதவினான் - நிலையினாலும் மந்தி |