யானையும் விடபன்மன்மகளான சன்மிட்டையும் உயிர்ப்பாங்கியராயிருந்தனர். ஒருகால்சன்மிட்டை தன்னைச் சினந்துபழித்த தேவ யானையைக் கிணற்றில் தள்ளினளாக,அதனையறிந்த விடபன்மன் தன்மகளைத் தேவயானையின் விருப்பிற்கு ஏற்ப அன்னாளுக்குப் பணிப்பெண்ணாக்கினான்: சன்மிட்டையும் தன்தந்தைகூறியபடிஅந்தத்தேவயானைக்கு ஏவல்செய்தொழுகுபவளாயினாளென்ற விஷயம்,முன்னிரண்டடிகளில் அறியத்தக்கது. கவியென்பது சுக்கிராசார்யரின் பெயர்களுள்ஒன்று. (26) 19. | ஆழிமன்னனவ்வணங்கினை யணங்கெனக்கண்டு பாழிவன்புயம்வலந்துடித் துடலுறப்பரிந்து வாழிதன்மனைமடவர லறிவுறாவண்ணம் யாழினோர்பெரும்புணர்ச்சியி னிதயமொத்திசைந்தான். |
(இ-ள்.) ஆழி மன்னன் - ஆஜ்ஞாசக்கரத்தையுடைய யயாதியரசன், அ அணங்கினை - அந்த அழகிய சன்மிட்டையை, அணங்கு என கண்டு - தெய்வப்பெண்போற் கட்டழகியாளாகப்பார்த்து, பாழி வல் புயம் வலம் துடித்து - மிக்கவலிமைபொருந்திய தோள்களில் வலத்தோள் துடிக்கப்பெற்று, உடல் உற பரிந்து -(அவளுடைய) உடம்பைச் சேர மனத்திற்கருதி, தன் மனை மடவரல் அறிவுறாவண்ணம் - தன்மனைவியாகிய தேவயானை அறியாதபடி, யாழினோர் பெரும்புணர்ச்சியின் - கந்தருவர்களின் பெருமை பெற்ற மணத்தினால், இதயம் ஒத்துஇசைந்தான்- மனமொத்து மணந்தான்; (எ -று.)- வாழி - அசை. மிக்க கட்டழகியான அந்தச் சன்மிட்டையை ஒருகால் யயாதி மன்னவன் கண்டுகாதல்கொண்டு, தன்மனைவியறியாதபடி அவளை மணக்கவேண்டுமென்ற கருத்தினால்காந்தர்வவிவாகத்தினால் மணந்துகொண்டானென்பதாம். சுக்கிராசார்யன்தேவயானையை யயாதிக்கு மணஞ்செய்து கொடுக்கும்போது அவளுக்குத்தோழியும்பணிப்பெண்ணுமான சர்மிஷ்டையையும் போஷிக்குமாறும், ஆனால்மணக்கக்கூடாதென்றும் சொல்லிக்கொடுத்தானென்று வியாசபாரதத்தி லுள்ளது."அறநிலையொப்பே பொருள்கோடெய்வம், யாழோர்கூட்ட மரும்பொருள் வினையே,யிராக்கதம்பேய்நிலை யென்றிக்கூறிய, மறையோர் மன்றலெட்டிவை" என்பதனால்,எண் வகைமணம் இன்ன வென்றும், அவற்றுள் யாழோர் கூட்டமென்பதொன்றுஎன்றும் அறியலாம்: இவ்வெண்வகை மணத்துள் யாழோர்கூட்டமாவது -ஆணும்பெண்ணுமாகிய இருவர் ஒத்தார் தாமே கூடுங் கூட்டம்: இது,காந்தர்வவிவாஹமெனச் சிறப்பித்துச் சொல்லப்படும். வலம்புயம்துடித்தல்,அண்மைக்காலத்தில் நிகழ விருக்குஞ் சுபத்தைத் தெரிவிக்கும் முற்குறியாகியநன்னிமித்தம். (27) 20.-சன்மிட்டை பூருஎன்பவனைப் பெருதல். சாருமன்பினிற்கற்பினிற்சிறந்தசன்மிட்டை சேருமைந்தினுமுயர்வினுந் தேசினுஞ்சிறந்து மேருவென்றிடமேதினி யாவையுந்தரிப்பான் பூருவென்றொருபுண்ணியப் புதல்வனைப்பயந்தாள். |
|