பக்கம் எண் :

20பாரதம்ஆதி பருவம்

தான் இருக்கையில் வேறோருத்தியை மணந்த காரணத்தினால் மன்னவனிடத்துச்
சினந்து தன்தந்தையுன் வீட்டைத் தேவயானை சேர்ந்தனளென்பதாம். பூருவைத்
தவிர,சன்மிட்டையின் மற்றை யிருபுதல்வர் - த்ருஹ்யு அனு என்பவர். பூரு-
சன்மிட்டையின்ஈற்றுப் புதல்வனாவனென்பது வியாசபாரதத்துப் பெறப்படும்
இறைமனை -இறைவனுக்கு மனைவி: நான்காம் வேற்றுமைத்தொகை:
முறைப்பொருளது, மனை -மனைவிக்குஇடவாகுபெயர்.             (29)

22.-தேவயானை தன்தந்தையினிடம் யயாதி மன்னவ
னொழுக்கத்தைச்சொல்ல, அந்தச்சுக்கிரனுடைய சாபத்தால்
யயாதி முதுமை யடைதல்.

சென்றுதாதையைப்பணிந்திது செப்பலுஞ்சினவேல்
வென்றிமன்னனைவிருத்தனாம் வகையவன்விதித்தான்
அன்றுதொட்டிவனைம்முதற் பிணியினாலழுங்கி
இன்றுநூறெனநரைமுதிர் யாக்கையோடிருந்தான்.

     (இ - ள்.) (தேவயானை), சென்று - (தாதையின்வீட்டைச்) சேர்ந்து,
தாதையைபணிந்து - (தன்) தந்தையான சுக்கிரனை வணங்கி, இது செப்பலும்-
(தன்கணவன்சன்மிட்டையைமணந்த) இதைச் சொல்லுதலும்,- சினம் வேல் வென்றி
மன்னனை -சினத்தைக்கொண்ட வேற்படைதாங்கிய வெற்றியையுடைய
யயாதியரசனை, விருத்தன்ஆம் வகை - முதுமையுடையோனாகுமாறு, அவன் -
அந்தச் சுக்கிராசாரியன்,விதித்தான் - கட்டடையிட்டான்[சபித்தான்]:
அன்றுதொட்டு (சுக்கிரன் சபித்த)அந்தநாள்முதல், இவன்- இந்த யயாதி
மன்னவன், ஐ முதல் பிணியினால் - சிலேட்டுமத்தைத் தலைமையாகக்கொண்ட
நோயினால், அழுங்கி - வருந்தி, இன்று நூறு என -இப்போது (இவனுக்கு)
நூறுவயசு (ஆய்விட்டது) என்று (இவன் முதுமைகண்டுயாவரும்) சொல்லும்படி,
நரை முதிர் யாக்கையோடு - கிழத்தனத்தினால் முதிர்ந்தசரீரத்துடனே,
இருந்தான்-; (எ - று.)

     விருத்தன்=வ்ருத்தன்: வடசொல். முதுமைப்பருவத்துச் சிலேட்டுமம் விஞ்சிய
இருமல்வியாதி தோன்றுத லியற்கையாதலறிக.                         (30)

23.- யயாதி தன் மைந்தர்களொவ்வொருவரையும்
இளமையைத் தந்து தன் முதுமையைப் பெறுமாறுகேட்க,
பூருவே இசைதல்.

அந்தமன்னவன்மைந்தரை யழைத்தெனக்குசனார்
தந்தமூப்பைநீர்கொண்மினும் மிளமைதந்தென்ன
மைந்தர்யாவருமறுத்திடப் பூருமற்றவன்றன்
இந்தமூப்பினைக்கவர்ந்துதன் னிளமையுமீந்தான்.

     (இ - ள்.) அந்த மன்னவன் - அந்தயயாதியரசன், மைந்தரை - (தன்)
புத்திரரானயதுமுதலியோர்களை, அழைத்து-, 'எனக்கு-, உசனார் -
சுக்கிராசார்யர், தந்த -(சாபமூலமாகக்) கொடுத்த, மூப்பை - முதுமையை, நும்
இளமை தந்து - உங்களுடையஇளமையைக்