மாளிகையமைக்குஞ் சிற்பிகளுள் ஒருவனாயிருந்து தொழில் செய்யும் படி) கட்டளையிட்டனுப்பினான்: (எ-று.) 'அறன்வடிவாம்' என்றது - யமனது அமிசமானவனென்ற கருத்தையும் விளக்கும். கர்மம் - சிற்பம் முதலிய தொழில்: அதனையுடையவன், கர்மீ: இது திரிந்து பலர்பாலில் கம்மியரென வந்தது. 123. | அடியனேனுமற்றவருட னரக்குமாளிகையிப் படியினாலியற்றியதொழிற் பயனெலாங்குறித்து நெடியகானகத்தளவுநீ ணிலவறைநெறிபோய் முடியுமாறொருமண்டபங் கோட்டினேன்முழைபோல். |
(இ-ள்.) அடியனேன்உம் - (உங்கட்கு) அடியவனானநானும், மற்றவருடன் - மற்றைய சிற்பிகளுடனிருந்து, அரக்கு மாளிகை இ படியினால் இயற்றிய தொழில்பயன் எலாம் குறித்து - அரக்கினால் ஒருமாளிகையை இவ்வாறு செய்த தொழிலினால் இனிநிகழும் பயன்களை யெல்லாம் ஆலோசித்து, நீள் நிலவறை நெறி முழை போல் போய் நெடிய கானகத்து அளவு முடியும் ஆறு- நீண்ட நிலவறையின் வழி மலைக்குகைபோலச் சென்று நீண்ட காட்டினிடம் வரையில் முடியும்படி, ஒரு மண்டபம் கோட்டினேன் - (இந்தமாளிகையில்) ஒருமண்டபத்தைச் செய்தேன்; (எ-று.) நிலவறைநெறி - பிறர் அறியாதபடி தரையினுள் அமைந்த சுரங்க வழி. இம்மாளிகையில் பாண்டவர்களை நம்பிக்கையுடன் இனிதுவீற்றிருக்கச்செய்து பின்பு தீப்பற்றவைத்து அழிக்கக்கருதிய கருத்தை அறிந்தேனென்பான், 'தொழிற்பயனெலாங்குறித்து' என்றான். (397) 124. | வேறொருத்தருமறிவுறா விரகினாலொருதூண் மாறுபட்டுநீபறிக்கலாம் வகைவழிவகுத்தேன் தேறுதற்கிதுதகுமெனத் திருவுளத்தடக்கி ஊறுபட்டபோதெழுந்தருள் கெனப்பணிந்துரைத்தான். |
(இ-ள்.) வேறு ஒருத்தர்உம் அறிவுறா விரகினால் - மற்றுஒருவரும் அறியாத உபாயத்தால், ஒரு தூண் - (அம்மண்டபத்தில்) ஒரு துணை, நீ மாறுபட்டு பறிக்கல் ஆம் வகை - நீ வலிமைகொண்டு பெயர்த்தெடுத்து விடும்படி, வழிவகுத்தேன் - அந்நிலவறைவழியைச் சார அமைத்துவைத்துள்ளேன்; இது தேறுதற்கு தகும் என திரு உளத்து அடக்கி - இச்செய்தி நம்பத்தக்கதென்று (உனது) திருவுள்ளத்திலே கொண்டு, ஊறுபட்டபோது எழுந்தருள்க - தீங்கு நிகழ்ந்தபொழுது (அவ்வழியாகத் தப்பியுய்ந்து) சென்றருள்வாயாக, என - என்று, பணிந்துஉரைத்தான் - வணங்கிச்சொன்னான், (அந்தச்சிற்பி); (எ-று.) மூன்றாம்அடியில், எளிய இந்த எனதுவார்த்தை இகழத்தக்கதன்றென்றும், இவ்வுபாயம் அலட்சியஞ்செய்தற்கு உரியதன்றென்றும், இதனைப் பிறர் அறியாதபடி இரகசியமாக வைத்திட வேண்டுமென்றுங் கூறியவாறாம். (398) 125.-வீமன் அவனுக்குப் பரிசளித்துப் பின் ஜாக்கிரதையுடையனாயிருத்தல். தச்சரிற்பெருந்தலைவனுக் குரிமையிற்றனங்கள் பிச்சரிற்கொடுத்தவன்விடை கொண்டதன்பின்னர் |
|