பக்கம் எண் :

224பாரதம்ஆதி பருவம்

எனக்கு நீயேகதியும் கொழுநனும் என்றன ளென்க. ஆசையோடு விரைந்துசார்ந்த
வண்டுகளுக்குப் பசி தாகந்தீரும்படி தேனூட்டிக் களிப்புண்டாக்கும் மாலையுடைய
நீ, ஆசையோடு விரைந்து உன்னைச்சேர்ந்த எனக்கு இந்நோயைநீக்கி மகிழ்ச்சி
யளிப்பா யென்பாள், 'இருஞ்சிறைச்சுரும்பிசைகொள்மாலையாய்' என்றாள்.    (416)

7.நீடியிங்குநானிற்கின்மாரனா நிருதனிற்கவந்நிருதன்
                               வெம்மையோடு,
ஓடிவந்தெனைக்கொல்லுமும்மையு மொருகணத்திலேயுயிர்
                                 செகுத்திடும்,
நாடியேன்கொன்மற்றுய்ந்துபோகலா நம்பியென்னைநீ
                               நலனுறத்தழீஇக்,
கோடியம்பரத்திடையெழுந்துனைக் கொண்டுபோவலோர்
                             குன்றிலென்னவே.

     (இ-ள்.) நான் இங்கு நீடி நிற்கின் - நான் இவ்விடத்தில் நீட்டித்து நின்றால்,
மாரன் ஆம் நிருதன் நிற்க - மன்மதனாகிய இராக்கதன் (என்னைக்
கொல்லுதற்கு அமைந்து) நிற்க, (அவனுக்கும் முந்தி), அ நிருதன் - அந்த
இடிம்பனாகிய இராட்சசன், வெம்மையோடு ஓடி வந்து - கடுமையுடனே
ஓடிவந்து, எனை கொல்லும் - என்னைக் கொல்லுவான்; உம்மைஉம் ஒரு
கணத்தில் உயிர் செகுத்திடும் - உங்களையும் ஒருகணப்பொழுதிலே
உயிர்நீக்கிவிடுவான்: நாடிமற்று என்கொல் -(அதனைக்குறித்து) வேறு சிந்தித்து
ஆவதென்ன? உய்ந்து போகல் ஆம் - (ஓருபாயத்தால் நாம்) தப்பிச்செல்லலாம்:
(எங்ஙனமெனின்),- என்னை நீ நம்பி நலன் உற தழீஇக் கோடி - நீ என்னை
விரும்பி இன்பம்மிகத் தழுவிக்கொள்வாய்; அம்பரத்திடை எழுந்து உனை ஓர்
குன்றில்கொண்டு போவல் - (நான்) வானத்திலெழும்பி உன்னை
ஒருமலையினிடத்தே கொண்டுசெல்வேன், என்ன - என்றுசொல்ல,- (எ-று.)-
'காளை இயம்பலும்(9) என்று இயையும்.

     என்னை நீ தழுவுதல், மன்மதனாகியஅரக்கனினின்று நானும்,
இடிம்பனாகிய அரக்கனினின்று நீயும்நானும் ஆகிய இருவரும் தப்பியுய்தற்குக்
காரணமா மென்றாள். 'உம்மை' என்றது, மற்றைப் பாண்டவரையும் குந்தியையும்
உட்படுத்து மென்னலாம். நம்பி யென்பதை ஆடவரிற்சிறந்தவனே யென
அண்மைவிளியாக் கொள்ளினும் பொருந்தும். சிறிதும் இரங்காது வருந்துதலால்,
மன்மதனை 'அரக்கன்' என்றாள். 'மாரனாநிருபன்' என்றும் பாடம்.

8.-அவள்வேண்டுகோளை மறுத்து வீமன் தனது
ஆண்மைகூறல்.

இரக்கமின்றியேதனிவனத்திலே யிளைஞரெம்முன்யாயிவரை
                                    விட்டெமைப்,
புரக்கவல்லளென்றொருமடந்தைபின் போவதாடவர்க்
                                காண்மைபோதுமோ,
வரைக்கண்வாழ்வுகூர்நும்முனெம்முனே மலையவெண்ணிமேல்
                                  வந்தபோதுபார்,
அரக்கனாகிலென்னவுணனாகிலென்னவனையோர்கணத்தாவி
                                     கொள்வனே.

    (இ-ள்.) இரக்கம் இன்றி - இரக்கமில்லாமல், வனத்தில் - காட்டிலே,
இளைஞர் எம் முன் யாய் இவரை - எமது தம்பியர்தமையன் தாய் ஆகிய
இவர்களை, தனி விட்டு - தனியே விட்டிட்டு, எமை புரக்க வல்லள் என்று ஒரு
மடந்தைபின்போவது எம்மைக்காக்கவல்லவ