பக்கம் எண் :

226பாரதம்ஆதி பருவம்

10.- இடிபடுத்தெழுந்தெழிலிமின்னுமாறென்னநீடுகுன்றெதி
                                  ரொலிக்கவே,
வெடிபடச்சிரித்திருபுறத்துநா மிளிரவுட்புகைந்தொளிரும்
                                   வாயினான்,
நெடில்படுத்தவெங்கானமெங்கணுந் நிழல்படுத்தி
                           வானுறநிமிர்ந்துளான்,
கொடிபடுத்துநுண்ணிடையிடிம்பையைக்கூவியவ்விடைக்
                               குறுகினானரோ.

     (இ-ள்.) எழிலி - மேகம், எழுந்து - (வானத்தில்) எழுந்து, இடி படுத்து -
இடியை வெளிப்படுத்திக்கொண்டு, மின்னும் ஆறு என்ன - மின்னும்
விதம்போல, நீடு குன்று எதிர் ஒலிக்க வெடிபட சிரித்து - பெரியமலை
பிரதித்தொனிசெய்யும்படி பெருமுழக்கமுண்டாகச் சிரித்து, இரு புறத்துஉம் நா
மிளிர - இரண்டு வாயோரங்களிலும் நாக்குப் பிறழ்ந்துதோன்ற, உள் புகைந்து
ஒளிரும் - உள்ளேபுகை கொண்டு விளங்குகிற, வாயினான்-
வாயையுடையவனாய்,- நெடில்படுத்த வெம் கானம் எங்கண்உம் - மூங்கில்கள்
அடர்ந்த வெவ்விய காடு முழுவதிலும், நிழல் படுத்தி - நிழலை
யுண்டாக்கிக்கொண்டு, வான் உற நிமிர்ந்துளான் - ஆகாயத்தையளாவ உயர்ந்து
எழுந்தவனாய்,- கொடிபடுத்த நுண் இடை இடிம்பையை கூவி - பூங்கொடியை
(த் தனக்கு ஒப்பாகாதென்று) கீழ்ப்படுத்திய நுண்ணிய இடையையுடைய
இடிம்பையைக் கூப்பிட்டுக்கொண்டு, அ இடை குறுகினான் - அவ்விடத்தில்
வந்து சமீபித்தான்; (எ-று.)

     கரியபெரிய அரக்கனுக்குக் காளமேகமும், அவனது பெருஞ்
சிரிப்பொலிக்கு இடிமுழக்கமும், நா மிளிர்வுக்கு மின்னலொளியும் உவமை
யெனக்காண்க. 'நெடிபடுத்த' என்ற பாடத்துக்கு - சிள்வீடுகள் பொருந்திய என்க.
"கொழுநற் றொழு தெழுவாள்" என்றதில், 'தொழுது' என்றதற்குப்போல,
'இடிபடுத்து, நிழல் படுத்தி 'கூவி' என்ற இறந்தகாலவினையெச்சங்களுக்கு
நிகழ்காலப் பொருள் கொள்ளவேண்டும். வானுற நிமிர்ந்த பெருவடிவத்தாற்
காடெங்கும் நிழலுண்டாகுமென்க, நாக்கைப் பிறழவைத்தல், கோபக்குறி.
வாயினுட் புகைதல், கொடுமைபற்றியது. அரோ- ஈற்றசை.           (420)

11. இடிம்பன்வார்த்தை: தங்கையைக் கோபித்துக் கூறியது.

உணவினாசையாற்கொல்லவந்தநீ யுவகையாசையாலுள்ளழிந்திவன்
கணவனாமெனக்காதலிப்பதே கங்குல்வாணர்தங்கடனிறப்பதே[புலிப்
அணவுவெம்பசிக்கனலவிந்துபோ யனங்கவெங்கனற்கொளுமடற்
பிணவையன்பினிற்கலைநயப்பதே பேதைமானுடன்பேசுகிற்பதே.

மூன்றுகவிகள் - ஒருதொடர்.

     (இ-ள்.) உணவின் ஆசையால் கொல்லவந்த நீ - உணவில் விருப்பத்தாற்
கொல்லுவதற்குவந்த நீ, உவகை ஆசையால் உள் அழிந்து - காமவிருப்பத்தால்
மனமிழிந்து, இவன் கணவன் ஆம் என காதலிப்பதுஏ - இவன் (எனக்குக்)
கணவனாவ னென்று ஆசைப்படுவதா! கங்குல் வாணர்தம் கடன் இறப்பதுஏ -
இராக்கதர்க்குஉரிய முறைமையினின்று தவறுவதா! அணவு வெம் பசி கனல்
அவிந்து போய் - பொருந்திய வெவ்விய பசித்தீ அடங்கிப் போக, அனங்க
வெம் கனல் கொழும் - வெவ்விய காமாக்கினியைக்