தற் பொருட்டு, கொளுத்திய - ஏற்றிய, விளக்குஎனும்படி-, அருக்கன் - சூரியன், அரு திசை பொலிவு உற - மேன்மையான கிழக்குத் திக்கு விளக்கமடையும்படி, தோன்றினான் - உதித்தான்; (எ-று.) இரவு இருக்கையில் சூரியனாகிய விளக்குக் கொளுத்தப் படவே, அது பகலாய்விட்ட தென்க; தற்குறிப்பேற்றவணி. (428) 19.- வீமனைச் சூரியனோடு உவமித்தல். கரங்களானிசாசர விருளைக்காய்ந்துகொண்டு இரங்கிநீள்வனத்திடை யிரவின்மாழ்கிய வரங்கொடாமரைமுக மலர்த்துநீர்மையால் உரங்கொள்வீமனுக்கெதி ருதயபானுவே. |
(இ-ள்.) கரங்களால் - (தனது) கைகளால் [தன்கிரணங்களால்], நிசாசர இருளை - அரக்கனாகிய இருட்டை [இரவிற்பொருந்தும் இயல்பினதாகிய இருட்டை], காய்ந்துகொண்டு - அழித்து,- நீள் வனத்திடை இரவில் இரங்கி மாழ்கிய வரம் கொள் தாமரை முகம் மலர்ந்தும் நீர்மையால் - பெரிய காட்டிலே இராப்பொழுதிலே (இவனுக்கு என்னாகுமோ வென்று), பரிதபித்து வாடிய (தருமன் முதலியோரது) மேன்மைகொண்ட தாமரைமலர் போன்ற முகத்தை (மகிழ்ச்சியால்) மலரச்செய்யுந் தன்மையினால் [பெரியநீர் நிலையிலே இரவில் குவிந்து வாடிய மேன்மைகொண்ட தாமரை மலர்களின் இதழை மலர்த்துந் தன்மையினால்],- உதயம் பானு - உதித்த சூரியன், உரம் கொள் வீமனுக்கு எதிர்- வலிமைகொண்ட வீமனுக்கு ஒப்பாவன்; (எ-று.) இங்குச் சூரியனுக்கும் வீமனுக்கும் ஒப்புமையைச் சொற் பொதுமை கொண்டு காட்டியதனால், செம்மொழிச்சிலேடையுவமையணி; 'தாவதுத்திதகர: தமோமயம் - ராக்ஷஸம்விசகலய்யபாநுமாந்" பீமஸேநஇவ பார்த்த மாநஸாநி - அம்புஜாநி தத்ருசே விகாஸயந்" என்றது, பாலபாரதம், கரமென்பது - கையுங் கிரணமும். வனமென்பது - காடும் நீருமாம். 'காய்ந்து கொண்டு' என்பதில் 'கொண்டு' என்பது - அசைநிலை. (429) 20.- வீமன் இடிம்பையின் குறிப்பை நோக்குதல். எண்டகுகவர்மனத் திடும்பைமன்மதன் மண்டெரிசுடுதலின் வாடுமேனியள் கொண்டவெங்காதலின் குறிப்பையவ்வழிக் கண்டனன்காணலற் செற்றகாளையே. |
(இ-ள்.) மண்டு மன்மதன் எரி சுடுதலின் - மிக்க காமனாகிய அக்கினி சுடுதலினால், வாடும் - வாட்டமுற்ற, மேனியள் - மேனியையுடையளாகிய எண் தகு கவர் மனத்து இடிம்பை - ஆலோசனை மிக்க கவர்ந்த [சஞ்சலப்பட்ட] மனத்தையுடைய இடிம்பை, கொண்ட - (தன்மீது) கொண்ட, வெம் காதலின் - வெவ்விய ஆசையினது, குறிப்பை-, காணலன் செற்ற காளை - பகைவனாகிய இடிம்பனைக் கொன்ற வீமன், அ வழி கண்டனன்-அப்போது நோக்கினான்; (எ-று.) |