பக்கம் எண் :

வேத்திரகீயச் சருக்கம்241

     இதுமுதற் பதின்மூன்றுகவிகள் - பெரும்பாலும் ஒன்று மூன்று
ஐந்தாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிவந்த
எழுசீராசிரியச்சந்தவிருத்தங்கள், தனன தன தன தனன தனதன தனன தனதன
தனதனா என்பது, இதுமுதல் மூன்று கவிகளுக்குச் சந்தக்குழப்பு.    (448)

39.-இதுமுதல் ஆறுகவிகள் - ஒருதொடர்: 'புலம்புவானேன்?'
என்று வினவிய குந்திக்குப் பார்ப்பனி
பகன் செய்தியைக் கூறல்.

மறுகியழுவதென்மொழிகமுனிவரன் மனைவியெனவிவள்வினவலும்
குறுகியவளுடனுரைசெய்குவளுறு குறையையுளநனிகுறையவே
முறுகுசினவனல்பொழியும்விழியினன் முகனில்பகனெனுமுரணுடைத்
தறுகணிசிசரனுளனிவ்வளநகர் தழுவும்வனனுறைதகுதியான்.

     (இ-ள்.) 'முனிவரன் மனைவி - சிறந்த அந்தணனுடைய மனைவியே! மறுகி
அழுவது என் - (நீ) கலங்கிப் புலம்புவதுயாதுகாரணத்தால்? மொழிக -
சொல்வாயாக', என -, இவள் வினவலும் - இக்குந்தி கேட்டவளவிலே,-
(அப்பார்ப்பனி), குறுகி - அருகில்வந்து, உறு குறையை - (தனக்கு) நேர்ந்த
மனக்குறையை, உளம் நனி குறைய - மனம்மிகவும் மெலிய, அவளுடன்
உரைசெய்குவள் - அக்குந்தியுடள் கூறுவாள்:- முறுகுசினம்
அனல்பொழியும்விழியினன்- மிக்க கோபாக்கினியைச் சொரிகின்ற
கண்களையுடையவனாகிய, முகன் இல் பகன் எனும் - கண்ணோட்டமில்லாத
பகனென்கிற, முரண் உடை தறுகண் நிசிசரன் - வலிமையுடைய
வன்கண்மையுள்ளவனாகிய இராக்கத னொருவன், இ வளம் நகர் தழுவும் வனன்
உறை தகுதியான் - வளன்களையுடைய இந்த நகரத்தைச்சார்ந்த காட்டில்
வசிக்கும் உரிமையுடையவனாய், உளன் - இருக்கின்றான்;

     முகன் - இலக்கணையாய், அன்போடு முகங்கொடுத்தலைஉணர்த்தும். இந்நகரத்தையடுத்தயமுனைக்கரையில் அரக்கன் வசிக்கின்றா னென்று
பாலபாரதம் கூறும். வனன் =வனம்.                           (449)

40.அருளிலிதயமுநெறியில்சரிதமு மழகிலுருவமுமதிர்குரற்,
பொருளிலுரைகளுமுடையன்முழுதுடல் புலவுகமழ்தரு
                                பொறியினன்,
மருளுநரியொடுகழுகுதொடர்தர வலியபிணநுகர்சுவையறா,
திருளின்மிசையிருபிறைகளெனவளை யெயிறுநிலவெழுமி
                                      தழினான்.

     (இ-ள்.) (அவ்வரக்கன்),- அருள் இல் இதயம்உம்-கருணையில்லாத
மனத்தையும், நெறி இல் சரிதம்உம் - நல்வழியில்லாத ஒழுக்கத்தையும், அழகு
இல் உருவம்உம் - அழகில்லாதகோரரூபத்தையும், அதிர் குரல் - முழங்குகிற
கர்ச்சனையொலியையும், பொருள் இல் உரைகள்உம் - பயனில்லாத
பேச்சுக்களையும், உடையன் - உடையவன்; முழுது உடல் - உடம்பு முழுவதும்,
புலவு கமழ் தரு - புலால் நாற்றம் வீசுகிற, பொறியினன் -
அடையாளத்தையுடையவன்; மருளும்நரியொடு கழுகு தொடர்தர -
(காண்பவர்மனம்) வெருளும்படியுள்ள நரிகளும் கழுகுகளும் விடாதுதொடர,
வலிய பிணம் நுகர் சுவை அறாது - வலிய பிணங்களைத் தின்னும் உருசி நீங்கா