மல், இருளின்மிசை இரு பிறைகள் என வளை எயிறு நிலவுஎழும் - இருளின்மேல் இரண்டுபிறைகள் (விளங்கினாற்) போல வளைந்த கோரதந்தங்கள் (இரண்டு கடைவாயிலும்) வெள்ளொளி வீசப் பெற்ற, இதழினான் - வாயிதழையுடையவன்; (எ-று.) தொடர்தர அறாது எழும் இத ழென்க. நரியுங் கழுகுந்தொடர்தல், தசையினிடத்து நசையால். கரியவடிவத்தில் விளங்கும் பற்களுக்கு, இருளின்மிசைப் பிறைகள் உவமையாம். 'உடல் முழுதும் புலால்நாறும் பொறி' என்றது, உயிர்நீங்கிய உடல்களை மிகுதியாகத் தின்னும்போது அவற்றினின்று மேலேதெறித்த இரத்தம் முதலியவற்றால் ஆகிய அடையாளங்களைக் குறிக்கும். பீபத்ஸரஸ மெனப்படும் இழிப்புச்சுவைக்கு இச்செய்யுள் உதாரணமாம். 'பொறியிலன்' என்றும் பாடம். (450) 41. | அந்தகனுமிகவஞ்சிமுதுகிடு மந்தநிசிசரனிந்தவூர், வந்துகுடியொடுகொன்றுபலரையு மன்றமறுகிடை தின்றநாள், எந்தைமுதலியவந்தணருமவ னிங்குவருதொழிலஞ்சியே, சிந்தைமெலிவுறாநொந்துதலைமிசை சென்றுகுவிதரு செங்கையார். |
(இ-ள்.) அந்தகண்உம் மிக அஞ்சி முதுகு இடும் - யமனும் மிகப்பயந்து (முன்நின்று எதிர்க்கமாட்டாமல்) புறங்கொடுக்கும் படியாகவுள்ள, அந்த நிசிசரன் - அந்த அரக்கன், இந்த ஊர் வந்து - இந்த ஊரினுள்ளேவந்து, பலரைஉம் - இவ்வூரார் பலரையும், குடியொடு- (அவரவர்) குடும்பத்துடனே, மன்ற - மிகுதியாக, கொன்று-, மறுகிடை - தெருவுகளிலே, தின்ற நாள் - தின்ற நாளிலே,- எந்தை முதலிய அந்தணர்உம் - எனது தந்தைமுதலான பிராமணர்களும், அவன் இங்கு வரு தொழில் அஞ்சி - அவன் இங்கேவந்த செயலுக்குப்பயந்து, சிந்தை மெலிவு உற நொந்து - மனம்சோர்வடைய வருந்தி, தலைமிசை சென்று குவிதரு செம்கையார்- (அச்சமிகுதியால் தாமாகவே) தலைமேற் சென்றுகுவிந்து தொழுகிற சிவந்த கையையுடையவர்களாய்,-(எ-று.)- 'என்றலும்' என அடுத்த கவியோடு குளகமாய்த் தொடரும். அந்தகன் - பிராணிகளுக்கு அந்தத்தைச் செய்பவன்; அந்தம் - அழிவு. தலைமிசைக் குவி தரு செங்கையராய்ச் சென்று எனக்கூட்டி யுரைப்பினும் அமையும். மறுகிடைதின்ற - சந்தவின்பத்திற்காக வலிமிகவில்லை. தந்த தனதன தந்த தனதன தந்த தனதன தந்தனா என்பது, இந்தக் கவிக்குச் சந்தக்குழிப்பாம். (451) 42. | ஒன்றுபடவெதிர்கொன்றுபலருயி ருண்பதறநெறியன்றுநீ, இன்றுமுதலினியென்றுமுறைமுறை யெங்கண்மனைதொறும் விஞ்சையோர், குன்றமெனவொருபண்டியறுசுவை கொண்டவடிசிலு நங்குலம், துன்றுநரபலியொன்றுமிவைதிறைதொண்டுபுரிகுவ மென்றலும். |
(இ-ள்.) 'நீ-, ஒன்றுபட - ஒருசேர, எதிர் - எங்கள் எதிரிலே, பலர் உயிர் கொன்று உண்பது - பலருடைய உயிரைநீக்கி (உடலைப்) புசிப்பது, அறம் நெறி அன்று - தருமமார்க்கமன்று; இன்று முதல் |