பக்கம் எண் :

வேத்திரகீயச் சருக்கம்243

இனி என்றும் - இன்றைநாள்முதல் இனிமேல் என்றைக்கும், முறை முறை
எங்கள் மனைதொறுஉம் - வரிசைக்கிரமப்படி எங்கள் வீடுதோறும்,
விஞ்சையோர் குன்றம் என் அறுசுவை கொண்ட ஒரு பண்டி அடிசில்உம் -
வித்தியாதரர்வசிக்கும் மலை யென்றுசொல்லும்படி அறுவகையுருசியும் அமைந்த
ஒருபண்டிசோறும், நம் குலம் துன்றும் நரன் பலி ஒன்றுஉம் - எங்கள்
குலத்திற்பொருந்திய ஒரு மனிதனாகிய பலியும், இவை - ஆகிய இவற்றை, திறை
- (உனக்குத்) திறைப்பொருளாகச்செலுத்தி, தொண்டு - அடிமையை, புரிகுவம் -
செய்வோம் ', என்றலும் - என்றுசொன்னவளவிலே,-(எ-று.) 'அன்று முதல் ***
தின்றுதிரிகுவன்' என அடுத்த கவியில் முடிபு காண்க.

     நாங்களே நாளுக்குஒருவீடாக முறைவட்டம் ஏற்படுத்திக் கொண்டு
ஒருவண்டிச்சோற்றையும், ஓராளையும் உனக்கு உணவாக இடுவோமென்று
ஊரந்தணர் கூறி அவனைச் சாந்தப்படுத்தினரென்க. விஞ்சையோர்=
வித்தியாதரர்; மாயவித்தைகளைத் தரித்தவர்; இவர்கள், பதினெட்டுத்
தேவகணங்களுள் ஒரு சாதியார். இவர்களுக்கு உறைவிடம்
வெள்ளிமலையாதலை, சிந்தாமணி சூடாமணிகளிற் காணலாம். நரபலி -
வடமொழித்தொடர்.

     தன்ன தனதன தன்ன தனதன தன்ன தனதன தன்னனா என்பது, இனி
மூன்று செய்யுட்களுக்குச் சந்தக்குழிப்பு.                        (452)

43.அன்றுமுதலடல்வஞ்சகனுமிறை யன்பினொடு
                            பெறுவன்பினால்,
என்றுநிலைபெறவுண்டியுடன்மனையெங்குமிடு
                             பலியெஞ்சுறத்,
தின்றுதிரிகுவனின்றென்மனைமுறைசென்றுபணிகவர்
                             திங்கள்போல்,
நின்றுதளர்வுறுகின்றதெனதுயிர்நெஞ்சமிலதொருதஞ்சமே.

     (இ - ள்.) அன்று முதல் - அந்நாள்முதலாக, அடல் வஞ்சகன் உம் -
கொடியவஞ்சகனான அவ்வரக்கனும், இறை அன்பினொடு - சிறிது அன்புடனே,
பெறு வன்பினால் - (தான்) பெற்ற வலிமையால், என்றுஉம் நிலை பெற -
எந்நாளும் நிலையாக, மனை எங்குஉம் உண்டியுடன் இடு பலி - வீடுதோறும்
உணவோடுசெலுத்தும் நரபலியை, எஞ்சுற தின்று திரிகுவன் - ஒழியும்படி தின்று
திரிவான்; (அந்த நியமித்தின்படி, இன்ற என் மனை முறை - இன்றைக்கு என்
வீட்டின் முறை; (ஆதலால்), எனதுஉயிர்-, பணி சென்று கவர் திங்கள் போல் -
(இராகுகேதுவாகிய) பாம்பினால் (அருகிற்) சென்று பிடிக்கப்பட்ட சந்திரன்போல,
நின்று தளர்வு உறுகின்றது - தளர்ச்சி பொருந்தி நிற்கின்றது; நெஞ்சம் ஒரு
தஞ்சம் இலது - என்மனம் ஒரு பற்றுக்கோடுமில்லாதிருக்கின்றது; (எ-று.)

     உயிர் அழியாது துயருறுதல்பற்றி, அதற்கு, பணிகவர்திங்கள் உவமை.
எஞ்சுற - (நாளடைவிலே ஊரில் ஆள்) குறைய என்றுமாம்.

43.கன்னியிவள்பிறர்பன்னியெனதிரு கண்ணின்மணி
                              நிகர்சன்மனும்,
மன்னுகுலமுதல்பின்னையொருவருமண்ணினுறுதுணை
                               யின்மையால்,
இன்னல்பெரிதுளதென்னபுரிகுவதென்னவறிகிலனன்னை
                                     கேள்,
முன்னைமனைநிகழ்தன்மமுனிவனைமுன்னிலிடர்நனி
                                துன்னுமால்.