பக்கம் எண் :

244பாரதம்ஆதி பருவம்

     (இ-ள்.) கன்னி இவள் - (எனது) இந்த இளம்பெண், பிறர் பன்னி -
வேறொருவரது உடைமையாகிய மனைவி: எனது இரு கண்ணின் மணி நிகர்
சன்மன்உம் - எனது இரண்டுகண்களிலுள்ள கருமணியை யொத்த அருமைப்
புதல்வனும், மன்னு குலம் முதல் - நிலையானவமிசத்துக்குஓர் அடியாயுள்ளான்;
மண்ணின்உறு துணை பின்னை ஒருவர்உம் இன்மையால் - பூமியிற் பொருந்திய
துணை வேறொருவரும் இல்லாமையால், இன்னல்பெரிது உளது - (எனக்குத்)
துன்பம்மிகுதியாயுண்டாயிற்று: என்ன புரிகுவது என்ன அறிகிலன்-யாது
செய்வதென்று அறியேன்; அன்னை கேள் - தாயே! கேள்; முன்னை மனை
நிகழ் தன்மம் முனிவனை முன்னில் - இவ்வீட்டுக்கு முதன்மையாய்
இல்லறவாழ்க்கையை நடத்துகிற (என்கணவனாகிய) அந்தணனை (ப்பலிசெலுத்த)
நினைத்தாலோ, இடர் நனி துன்னும் - துன்பம் மிகுதியாக உண்டாகிறது; (எ-று.)-
என்று பார்ப்பனி இடர்க்காரணத்தைக் குந்தியிடம் கூறிமுடித்தா ளென்க.

     எனதுமகளைப் பலிசெலுத்தலா மென்றால், அவள் ஒருபுருஷனுக்கு
வாழ்க்கைப்பட்டு அவனுக்குஉரிய பொருளாய்விட்டதனால். அவளைச்செலுத்த
இடமில்லை; எனதுமகனோ, ஏகபுத்திரனாதலால் அவனைச்செலுத்திவிடின்
சந்ததியின்றி வமிசம் அழியும்: என்னையே செலுத்துவதென்றால், வேறொருவர்
உதவுவாரில்லை; அதனால், என்கணவன் விரும்பகில்லான்; என்கொழுநனைச்
செலுத்தும் விஷயத்தில் உண்டாகிற துயரத்துக்கு எல்லையில்லை என்று
பலவகையிலும் தன் துயரத்துக்குப் பரிகாரமில்லாமையைக் கூறினள். ஜந்மம் -
பிறப்பு: அதனையுடையவன், சன்மன் : மகன்.                    (454)

45.-இருகவிகள் - அதுகேட்டுக் குந்தி தனது மக்களில்
ஒருவனைஅனுப்பலாமென்றல் கூறும்.

ஏதமறவுறவானமனைமகள் யாவுமுரைசெயயாதவன்
தீதில்குலமகளார்வமுடனவ டேறவொருமொழிகூறுவாள்
ஆதியனுமனொடோதுமுவமைய னாடல்வலியுடையாண்மையான்
மோதியிடையிருள்யாமசரிதனை மூளையுகவுடல்கீளுமே.

நான்கு கவிகள் - ஒருதொடர்.

     (இ-ள்.) ஏதம் அற உறவு ஆன - களங்கமில்லாமல் (குந்தியோடு)
நண்புரிமைபூண்ட, மனை மகள் - அந்தவீட்டுக்குஉரிய பார்ப்பனி, யாஉம்
உரைசெய - (இங்ஙனம்) எல்லாவற்றையும் சொல்ல, யாதவன் தீது இல் குலம்
மகள் - யதுகுலத்திற்பிறந்த சூரராசனது குற்றமற்ற குலத்துக்கு உரியமகளாகிய
குந்திதேவி, ஆர்வமுடன் - அன்புடனே, அவள் தேற ஒரு மொழி கூறுவாள் -
அப்பார்ப்பனி தேறுதலடையும்படி ஒருவார்த்தைசொல்வாள்:- ஆதி அனுமனொடு
ஓதும் உவமையன்-பழமையான அநுமானோடு சொல்லத்தக்க
ஒப்புமையுடையவனும், ஆடல் வலி உடை ஆண்மையான் -
போர்வலிமையோடுகூடிய பராக்கிரமசாலியும் ஆகிய என்மக்களில் ஒருவன்,
இருள் இடையாமசரிதனை - இருளையுடைய நள்ளிரவிற் சஞ்சரிப்பவனான
[இராக்கதனாகிய]அந்தப்பகனை, மோதி - தாக்கி, மூளை உக - மூளை
சிதறும்படி, உடல் கீளும் - உடம்பைப்பிளந்திடுவான்.