பக்கம் எண் :

வேத்திரகீயச் சருக்கம்245

     பாலபாரதத்திற் கூறியதற்குஏற்ப, ஆடல் வலியுடையாண்மையான் என்பதற்கு -
பௌருஷத்தோடுபகையடவல்ல மந்திரசக்தியை யுடையவனெனினுமாம்.
அனுமானது பலபராக்கிரமச்செயல்கள், இராமயணத்து மிகப்பிரசித்தம்.
இரவுக்குஉரிய நான்குயாமங்களுள் ஒருயாமகாலம் பிராணிசஞ்சாரம்
முதலியவற்றாற்பகல் போலுதலால், யாமத்தில் இப்படி விசேஷமுடைய இரவி,
யாம மெனச் சிறப்பாக வழங்கப்படும். மோதிமிகுதிறல் என்றும் பாடம்.

     தான தன தன தான தனதன தான தனதன தானனா என்பது,
இதற்குச்சந்தக்குழிப்பு.                                    (455)

46.கொவ்வையிதழ்மடநவ்வியலமரல் குவ்வினனலினும்
                             வெவ்வியோர்,
அய்வருளர்சுதர்கைவில்விறலின ரவ்வியமுமிலர்
                             செவ்வியோர்,
இவ்விவரிலெமையுய்வுகொளுமவனெவ்வெவ்வுலகையும்
                               வவ்வுதிண்,
பௌவமெனநனிதெய்வமுனிவரர் பையுளநெறிசெய்வனே.

     (இ-ள்.) கொவ்வை - கொவ்வைக்கனிபோலச் சிவந்த, இதழ் -
வாயிதழையுடைய, மடம் நவ்வி - (கண்ணின்நோக்கத்தால்) இளமையான
மான்போன்றவளே! அலமரல் - (நீ மனங்) கலங்க வேண்டா; குவ்வின் -
இந்நிலவுலகத்தில், அனலின்உம் வெவ்வியோர் - (பராக்கிரமத்தால்)
அக்கினியினும் கொடியவர்களும், கை வில் விறலினர் - கைதேர்ந்த வில்லின்
வல்லமையை யுடையவர்களும், அவ்வியம்உம் இலர் -
பொறாமையில்லாதவர்களும், செவ்வியோர் - நற்குண முடையவர்களுமாகிய,
அய்வர்சுதர் - ஐந்துபிள்ளைகள் உளர் - (எனக்கு) இருக்கிறார்களன்றோ? இ
இவரில் - இத்தன்மையான ஐந்துபுத்திரர்களுள், எமை உய்வு கொளும் அவன் -
மற்றை யெங்களெல்லோரையும் உயிருய்யச்செய்பவனான அந்த ஒரு குமாரன், எ
எ உலகைஉம் வவ்வு திண் பௌவம் என நனி தெய்வம் முனிவரர் பையுள்அற
- உலகங்களெல்லாவற்றையுங்கவர்கிற வலிய சமுத்திரம் போல (அளவின்றி)
மிகுகிற தெய்வத்தன்மையுள்ள சிறந்த அந்தணர்களுடைய வருத்தம் நீங்க, நெறி
செய்வன் - (அதற்குஉரிய) முறைமையைச் செய்வான்;(எ -று.)- ஏ - தேற்றம்.

     சிஷ்டர்களாகிய முனிவர்களைப் பரிபாலிக்கும்பொருட்டுத் துஷ்டனாகிய
அவ்வரக்கனை அழித்தொழித்திடுவ னென்பதாம். இங்கு 'அவன்' என்றது
வீமனை. அவன் அரக்குமாளிகையினின்று தங்களையெல்லாம் உய்வித்தமையை
யுட்கொண்டு, அவனுக்கு 'எமை யுய்வுகொளும்' என்ற அடைமொழி
கொடுத்தாள். நவ்வி - உவமவாகுபெயர். அலமரல் - எதிர்மறை
யொருமையேவல்: அலமா - பகுதி. கு. பூமி: வடசொல். அய்வர் = ஐவர்.

     இச்செய்யுள் - கீழ்க்கூறியவகையில் வகரச்சந்தத்தாற் பெரும்பாலும்
வந்தது. 'தைய தனதன தைய தனதன தைய தனதன தையதா' என்பது. இதற்குச்
சந்தக்குழிப்பு. 'பைதலற' என்ற பாடம், சந்தத்துக்குச் சிறவாது. (456)

47.-அதுகேட்டு மகிழ்ந்து அவ்வீட்டார் சமையல்செய்யத் தொடங்கல்.

அவனையிடுபலியருளுகெனமொழி யளவின்மறலியுமுளைவுறச்
சிவனைவழிபடுமகவையருளிய செனகசெனனியர்நிகரெனத்