பக்கம் எண் :

252பாரதம்ஆதி பருவம்

விக்கும்படி நின்றவைகள் வயிற்றின் இரண்டு பக்கங்களிலும் விழ விழ,
முன்விழுங்கலும் - (வீமன் அவற்றை) விரைவாக விழுங்கு மளவிலே,- அரக்கன்
- பகன்,- 'புக்க பண்டமுடன் உன் உடல் தசை புசிப்பன் - (உன்வயிற்றினுட்)
புக்க உணவுகளுடனே உனது உடம்பின் தசையை யுண்பேன்: இவை போவது
எங்ஙன் - இவை எங்கே போவது?' என்று - என்று சொல்லி, அ கடு கைஉம்
இளைத்து - (குத்திய) அந்தக் கடினமான (தன்) கைகளும் இளைக்கப்பெற்று,
(அதனால்), வெம் சினம்உம் ஆறி நின்றனன் - கொடியகோபமும் சிறிது
குறைந்து நின்றான்; (எ-று.)

     கவளம் - கையளவுகொண்ட உணவு; அல்லது, வாயளவு கொண்ட உணவு.
முஷ்டிகள்படுதலாகிய தீயசெயலையே சிறிது தடைப்பட்ட கவளங்கள் எளிதில்
உட்புகுதலாகிய நன்மைக்குக் காரணமாகக் கூறியது- தகுதியின்மையணி:
வடநூலார் 'விஷமாலங்காரம்' என்பார். 'புக்க பண்டமுட னுன்னுடற்றசைபுசிப்ப
னெங்ஙனிவைபோவது' என்ற இதில், பலிபண்டங்களையுண்ட உன்னை
யுண்பதால் பண்டத்தையும் உன்னையும் தனித்தனியே புசித்தலாகிய
இரண்டுவேலையில்லாமற் போய்விடுகிற தென்று பாராட்டினமை தோன்றும்.
போவது - தொழிற்பெயர்.                                   (466)

57.-இதுவும், அடுத்த கவியும் - வீமன் வீரவாதங்கூறிப்
போர்தொடங்கல்.

அச்சகட்டினிலொரெட்டுணைச்சுவடு மற்றபிற்சிறிதுமச்சமற்று
உச்சமுற்றவெயிலர்க்கனொத்திவனொடுத்தரித்துரைசெய்ததொட்டி
மெச்சுமெச்சுமுலகத்தரக்கர்களில் விக்ரமத்திறலின்மிக்கநீ [னான்
கச்சகச்சபலகத்தைவிட்டுனது கட்டுரத்தினொடுகட்டுவாய்.

     (இ-ள்.) அ சகட்டினில் - அந்தப் பண்டியிலே, ஓர் எள்துணை
சுவடுஉம்அற்றபின் - ஓர் எள்ளின் அளவு (அன்னத்தின்) அடையாளமும்
இல்லாது தீர்ந்தபின்பு, (வீமன்), சிறிதுஉம் அச்சம் அற்று - சிறிதும்
பயமில்லாமல், உச்சம்உற்ற வெயில் அர்க்கன் ஒத்து - (வானத்து)
உச்சியையடைந்த உக்கிரமான உஷ்ணகிரணங்களையுடைய சூரியன்போல
(உக்கிரங்கொண்டு எழுந்துநின்று), உத்தரித்து இவனொடு உரைசெய்துஒட்டினான்
- தருக்குக்கொண்டு பகனோடு இங்ஙன்கூறி வீரவாதஞ்செய்தான்:- மெச்சும்
மெச்சும் உலகத்து அரக்கர்களில் - (எல்லோராலும்) மிகவுங்கொண்டாடி
வியக்கப்படுகிற உலகத்துஉள்ள அரக்கர்களுள், விக்ரமம் திறலில் மிக்க -
பராக்கிரமத்தோடு கூடிய வலிமையில் மேம்பட்ட,நீ-, கச்சகச்ச பல கத்தை விட்டு
- மிகவும் வெறுக்கத்தக்க பல வேற்றொலியை [பயனில் சொற்களைப் பேசுதலை]
விட்டு, உனது கட்டு உரத்தினொடு கட்டுவாய் - (என்னோடு)
சமமாகப்பொரும்பொருட்டு உனது கச்சுக்கட்டை வலிமையோடு கட்டிக்கொண்டு
சித்தப்படுவாய்; (எ-று.)

     போர்செய்யச் சிறிதும்பின்னிடாமல் மிகஊக்கங்கொண்டென்பார், 'சிறிதும்
அச்சமற்று' என்றார். உத்தரித்து - (வயிற்றைத் தடவியுண்டதைச்
சரித்துக்கொண்டு) என்று கூறலுமாம்: உத்தரித்து உரைசெய்து - உத்தரமான
வார்த்தையைச்சொல்லி என்