பக்கம் எண் :

வேத்திரகீயச் சருக்கம்253

பாரு முளர். கச்சகச்ச - அடுக்கு, மிகுதிப்பொருளது: கச்ச - கைத்த என்பதன்
போலி : இனி, 'கச்ச கச்ச' என்பதை, வடமொழி ஒருமையேவலாகக் கொண்டு,
'போ போ' என்று உரைப்பாரும் உளர். கத்து - கத்துதல்: பிதற்று: முதனிலைத்
தொழிற்பெயர். கட்டு - இடைக்கட்டு.

     இச்செய்யுள் - 'தத்த தத்தனன தத்த தத்தனன தத்த தத்தனன தத்தனா'
என்ற சந்தக்குழிப்புக்கு ஏற்ப வந்தது. இதில் வல்லோசைமிக்குவந்தது -
வல்லிசை வண்ணம்.                                  (467)

58.சொல்லியென்பயனரக்கனீமனிதன் யானுனக்குரிய
                                 தொழில்களாம்,
மல்லினும்படைவிதத்தினுஞ்செருவில் வல்லவல்லனபுரிந்து
                                       போர்,
வெல்லநெஞ்சமுளதாகில்வந்துபொரு விறலிடிம்பனையும்
                                 வென்றுனைக்,
கொல்லவந்தனனெனப்புகன்றிருகை கொட்டிமார்பின்
                               மிசைகுத்தினான்.

     (இ-ள்.) சொல்லி என் பயன் - வீண்வார்த்தை பேசிப் பயனென்ன? நீ
அரக்கன் - நீ (இயல்பில் வலிய) இராக்கதன்: யான் மனிதன் - யான் (இயல்பில்
எளிய) மனிதன்: (ஆயினும்), செருவில் - யுத்தத்தில், உனக்கு உரிய தொழில்கள்
ஆம்-உனக்குஉரியசெயல்களாகிய, மல்லின்உம் - மற்போர்த்தொழிலிலும்,
படைவிதத்தின் உம்- பலவகை ஆயுதத் தொழில்களிலும், வல்ல வல்லன - (நீ)
தேர்ந்தவற்றையெல்லாம், புரிந்து - செய்து, போர் வெல்ல - போரில் (என்னை)
வெல்லுதற்கு, நெஞ்சம் உளது ஆகில் - (உனக்கு) மனத்துணிவு உள்ளதானால்,
வந்துபொரு - எதிர்வந்து போர்செய்: விறல் இடிம்பனைஉம் வென்று -
வல்லமையுடைய இடிம்பனையுஞ் சயித்து, உனை கொல்ல வந்தனன் - உன்னைக்
கொல்லுதற்கு வந்தேன், என புகன்று - என்று வீரவாதங் கூறி, (அவ்வீமன்), இரு
கை கொட்டி - (தனது) இரண்டுகைகளையுந்தட்டி, மார்பின்மிசை குத்தினான் -
(பகனுடைய) மார்பிலே குத்தினான்; (எ-று.)

     மனம்போனபடி வாயில்வந்தவற்றைச் சொல்லுதலிற் பயனில்லை; தொழிலில்
திறங்காட்டவேண்டு மென்பான் 'சொல்லி யென்பயன்' என்றான். கைகொட்டுதல்
- மற்போர் தொடங்கற்கு அறிகுறி, வந்தனனெனப்புகுந்து என்றுபாடம்.      (468)

59.-இதுவும், அடுத்தகவியும் - இருவருஞ்செய்யும் போர்த்
திறத்தைக்கூறும்.

பட்டவர்த்தனர்கள்பொற்சிரத்தின்மலர்பொற்புடைச்சரணபற்பனும்
நெட்டிருட்சரனும்வெற்புவெற்பினொடுநிச்சயித்துடலநிற்பபோல்
வட்டம்வட்டம்வரவொட்டியொட்டியுறுமற்றொழிற்செருவின்மட்டியா
முட்டியுத்தநிலைகற்றகற்றவகை முற்றமுற்றவெதிர்முட்டினார்.

     (இ-ள்.) பட்டம் வர்த்தனர்கள் - பட்டந்தரித்து அரசாளும்
அரசர்களுடைய, பொன் சிரத்தின் - பொன்முடியையணிந்த தலைகளின்மீது.
மலர் - மலர்கிற, பொற்பு உடை சரணம் பற்பன்உம் - அழகுள்ள
பாததாமரைமலரையுடையவனான வீமனும், நெடு இருள் சரன்உம் - நெடிய
நிசிசரனாகிய பகனும்,- வெற்பு - வெற்பினொடு, உடல் நிச்சயித்து நிற்ப போல் -
மலை மலையோடு போர்செய்ய