மகாராசன் ஆலோசித்துச்செய்த செயலை, சொல்லல் உற்றாம் - இனிச்சொல்லத்தொடங்கினோம்; (எ-று.)- அதனை, அடுத்தகவி முதற் காண்க. தான் - அசை. இதுமுதல் முப்பத்தொரு கவிகள் - பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ்சீரும் விளச்சீர்களும், மற்றவை மாச்சீர்களுமாகிய அறுசீராசிரிய விருத்தங்கள். (476) 2.-துருபதனது உட்கருத்து. *வரத்தினாற்பிறந்தவாறும் வான்மொழிபுகன்றவாறும் சிரத்தினால்வணங்கிக்கேட்பத் தேசிகனுரைத்தவாறும் உரத்தினார்கெடாதவாறு முணர்ந்துதன்பேதையின்னம் சரத்தினாலுயர்ந்தவின்மைத் தனஞ்சயற்குரியளென்னா. |
இதுவும், அடுத்த கவியும் - குளகம். (இ-ள்.) (துருபதமகாராசன்),- வரத்தினால் பிறந்தஆறுஉம் - (தான்) வரம்வேண்டியபடி (திரௌபதி) தோன்றிய தன்மையையும், வான் மொழி புகன்ற ஆறுஉம் - (அங்ஙனந்தோன்றிய (பொழுது) ஆகாயவாணி சொன்ன தன்மையையும், சிரத்தினால் வணங்கி கேட்ப தேசிகன் உரைத்த ஆறுஉம் - (தனது) தலையால் வணங்கி வினாவ (அதற்குத் தன்) குரு சொன்னதன்மையையும், உரத்தினார் கெடாத ஆறுஉம் - வலிமையையுடைய பாண்டவர்கள் இறவாத தன்மையையும், உணர்ந்து - ஆலோசித்து,- ' தன் பேதை - தனது மகளான அத்திரௌபதி, இன்னம் - இன்னமும், சரத்தினால் உயர்ந்த வின்மை தனஞ்சயற்கு உரியள் - அம்பினாற் சிறந்த வில்லின் தொழிலில் வல்ல அருச்சுனனுக்கே உரியவளாவள், ' என்னா - என்று கருதி,- (எ-று.)- "காவலர்க்கோலை போக்க" என அடுத்த கவியோடு தொடரும். இக்குளகச்செய்யுள்களில் 'உணர்ந்து', 'என்னா', 'போக்க' என்ற வினையெச்சங்களுக்கு, 'துருபதன்' என்றுதோன்றாஎழுவாய் வருவிக்க. 'அருச்சுனனுக்கு மணஞ்செய்து கொடுத்தாற்பொருட்டு ஒருபுத்திரிவேண்டும்' என்று யாசன்உபயாசன் என்னும் முனிவர்களிடம் துருபதன் வரம்வேண்ட, அப்படியே அவர்கள் அநுக்கிரகித்துப் புத்திரகாமயாகஞ் செய்வித்ததனால் திரௌபதி தோன்றியமை, பிரசித்தம். அக்காலத்தில் தெய்வத் தன்மையுள்ள அசரீரி வாக்கு 'இவள் பாண்டவர்க்கு உரியளாய்ப் பல அரசர் இறத்தற்கு மூலமாவாள்' என்று வானத்தில் உரைத்தமையும்; பாண்டவர் மூலமாவாள்' என்று வானத்தில் உரைத்தமையும்; பாண்டவர் அரக்குமாளிகையில் இறந்துபோயினரென்ற உலகவதந்தியைக் கேட்டவுடனே மிகவுங்கவலைகொண்ட துருபதன் தன்குவைச்
* "மறைவழாமுனிவர்நின்றமரபினைநோக்கிமன்னன் இறையெனுமைவர்மாண்டாரேந்திழைக்கினிமைகூர்தன் முறைமையாதென்னப்பொய்யார்முந்துவரைவரென்னக் குறைவிலதென்னவிண்ணின்வாணியுங்கூறக்கேட்டான்" என்கிற செய்யுளொன்று, இச்செய்யுளுக்குமுன் சில ஏட்டுப்பிரதிகளிற் காணப்படுகிறது. |