பக்கம் எண் :

26பாரதம்ஆதி பருவம்

தாம். இருகுலம் - தாய் தந்தையர்குலம் என்றும் கொள்ளலாம். ஒரு குலத்தின்உம்
என்பதற்கு - சிற்றரசர்தோன்றிய எந்த ஒரு குலத்திலும் என்று உரைத்தாருமுளர்.
                                                             (40)

                                    வேறு.

33.- கவிக்கூற்று: குருகுலத்தில் சந்தனு என்று ஒருவன் தோன்றினான்:
இனி, அவன் செயலைக் கூறுவேனெனல்.

அந்தநன் மரபினி லமுத வெண்டிரைச்
சிந்துவின் மிசைவரு திங்க ளாமெனச்
சந்தனு வெனும்பெயர்த் தரணி காவலன்
வந்தன னவன்செயல் வகுத்துக் கூறுவாம்.

     (இ-ள்.) அந்த நல் மரபினில்- சிறந்த அந்தக் குருவமிசத்தில், அமுதம் -
பால்மயமானதாய், வெள் திரை சிந்துவின் மிசை - வெண்மையான
அலைகளையுடையபாற்கடலின்மீது, வரு - தோன்றுகின்ற, திங்கள் ஆம் என -
சந்திரனொப்பாவானென்று சொல்லும்படி, சந்தனு எனும் பெயர் தரணிகாவலன் -
சந்தனுஎன்று பேர் கொண்டபூமியைக் காப்பவனான அரசன், வந்தனன் -
தோன்றினான்; அவன் செயல் -அவனுடைய செய்தியை, வகுத்து கூறுவாம்-
விவரித்துச் சொல்லுவோம்; (எ -று.)

     ப்ரதீபனென்ற அரசன் சிபிவமிசத்தில் தோன்றிய சுகந்தீ யென்பவளை
மணக்க,அவர்களுக்குத் தேவாபி சந்தனு பாஹ்லிகன் என்று மூன்றுகுமாரர்
தோன்றினர்.முதல்வன் இளையனாயிருக்கும்போதே கானகஞ் சென்றிட்டான்.
அதனால், இந்தச்சந்தனு குருகுலத்துப்பிரதானனானான்: இவன்
வயதுமுதிர்ந்த எவரெவரைக்கையால்தொடுகின்றானோ அவர் யாவரும் யௌவன
மடைபவரும்,சுகமனுபவிப்பவருமாயினர்: இதனால் இவனுக்குச் சந்தனு
எனப்பெயரென்று முதனூல்கூறும். குருகுலத்திற்குப் பாற்கடலும், அக்குலத்திலே
தோன்றிய சந்தனுவுக்கு ஆங்குத்தோன்றிய சந்திரனும் உவமை. மகிழ்ந்து
கேண்மினோ என்றும் பாடம்.

     இதுமுதல் நாற்பத்தாறு கவிகள் - பெரும்பாலும் மூன்றாஞ் சீரொன்று
மாச்சீரும்,மற்றையவை விளச்சீர்களுமாகிவந்த கலிவிருத்தங்கள்.         (41)

34.- வேட்டையாடி யிளைப்புற்ற சந்தனு கங்கைக்கரை
 சேர்தல்.

வேனிலானிவனென விளங்குகாலையிற்
கானகவேட்டைபோ யிளைத்தகாவலன்
ஆனமென்குளிர்புன லாசையான்மணித்
தூநிறக்கங்கையாள் சூழலெய்தினான்.

     (இ -ள்.) 'இவன்-, வேனிலான்- மன்மதனேயாவன்,' என - என்று (கண்டவர்)
நினைக்கும்படி, விளங்கு காலையில் - (மிக்க அழகோடு) விளக்கமுற்றிருந்த
காலத்தில்,கானகம் வேட்டை போய் - காட்டிற் செய்யப்படும்
வேட்டைக்குச்சென்று, இளைத்த -சோர்வடைந்த, காவலன் - அந்தச்
சந்தனுராசன்,- குளிர்.