சரணமடைந்து 'இனி என் செய்வது?' என்று வினாவ, அவன் தனது ஞானக்கண்ணால் உண்மையையுணர்ந்து 'அவர் இறந்திலர்' என்று கூறித் துருபதனைத் தேற்றியமையும்; பாண்டவர்மிக்க பலசாலிகளாதலால் பகைவர்களால் எவ்வகையாலும் எளிதில் அழிக்கப்படுவரல்ல ரென்று துருபதன் துணிந்தமையும் - இங்குக் குறிக்கப்பட்ட விஷயங்கள். 'இன்னம்' என்றதனால், துருபதன் செய்த முயற்சி ஒன்றினாலும் அவர்கள் கிடைத்தில ரென்பது பெறப்படும். இங்ஙனமிருக்கவும் துருபதன் ஆஸ்திக னாதலால், வரம், வான் மொழி, குருமொழி இவற்றில் மிக்கநம்பிக்கை கொண்டு அதனால் இன்னும் இவள் அருச்சுனனையே மணஞ்செய்து பெயர் - உலூகமுனிவனென்ப. 'வான்மொழிகேட்ட வாறும்,' 'தேசிகருரைத்தவாறும்,' 'உரத்தினாற் கெடாதவாறும் என்று பிரதிபேதம். (477) 3.- துருபதன் சுயம்வரநாள் குறித்தலும், அரசர் திரளலும். தான்வரித்தவற்கேயெய்த வுரியளென்றனயையென்று கான்வரிச்சுரும்புண்மாலைக் காவலர்க்கோலைபோக்க மான்வரிக்கண்ணிக்கேற்ற வதுவைநாண்மலர்ப்பூவொன்றைத் தேன்வரித்தென்னவந்து திரண்டதுகுமரர்சேனை. |
(இ-ள்.) 'என் தனயை - எனதுமகள், தான்வரித்தவற்குஏ எய்தஉரியன் - (சுயம்வரத்தில்) அவள் தானாக விரும்பிக்கொள்ளும் புருஷனுக்கே பெறுதற்கு உரியள், ' என்று-, கான் வரி சுரும்பு உண் மாலை காவலர்க்கு ஓலைபோக்க- இசைப்பாட்டையும் உடம்பிற் புள்ளிகளையு முடைய வண்டுகள் (மொய்த்துத்) தேனுண்ணுகிற பூமாலையைத் தரித்த அரசர்களுக்கு (த் துருபதன்) திருமுகம் அனுப்ப,- மான் வரி கண்ணிக்கு ஏற்ற வதுவை நாள் - மானின் பார்வைபோன்ற செவ்வரிபரந்த கண்களையுடைய அத்திரௌபதிக்கு இயைந்த அந்தச் சுயம்வர தினத்தில்,- மலர் பூ ஒன்றை தேன் வரித்து என்ன - மலர்ந்த ஒருபூவை வண்டுக்கூட்டம் (தனித்தனி தம்தமக்கென்று கொண்டு) விரும்பிவந்துமொய்த்தாற்போல, குமரர்சேனை - இராசகுமாரர்களுடையகூட்டம், (திரௌபதியொருத்தியை விரும்பி), வந்துதிரண்டது -; (எ-று.) திரௌபதிக்குச் சுயம்வரமென்று உலகமெங்குந்தெரிவித்தால் அவளைப் பெறும்விருப்பத்தாற் பலரும் வரும்போது பாண்டவரும் வருவ ரென்று கருதிச் சுயம்வரம்நாட்டி அதற்குஉரிய பத்திரிகையைத் தூதர்மூலமாக எல்லாத்தேசத்தரசர்க்கும் அனுப்பினனென்க. சுயம்வரமாவது - (ஓர் இராசகன்னிகை ஓரிடத்திலே வருவித்துச் சேர்க்கப்பட்ட இராசகுமாரர்பலருள் தனக்குப்பிரியமான ஒருவனைத்) தானே கணவனாக ஏற்படுத்திக்கொள்ளுதல். பெருந்திரளென்பதை உணர்த்தற்கு 'சேனை' என்றார். (478) 4.-சுயம்வரத்தைச் செவியுற்றவுடன் பாண்டவர் பிரயாணப்படுதல். ஆங்கதுநிகழ்ந்தமாற்ற மந்தணனொருவன்வந்தோன் ஈங்கிவர்க்குரைப்பமைந்த ரைவரும்யாயுங்கேட்டுப் |
|