றது, எதிர்காலம் இறந்தகாலமாகக் சொல்லப்பட்ட காலவழுவமைதி, அணங்கு- மோகினி யென்னும் பெண்தெய்வம்; இச்சொல்-இலக்கணையாய், அழகிற்சிறந்த பெண்ணை யுணர்த்தும், சுணங்கு-நிறவேறுபாடு: பொன்னுரைபோலச் சிறிதும் பெரிதுமாகப் படர்வது. (481) 7. | இப்பகலிரவும்வைகா தேகியாங்கெய்துமங்கண் அப்பகன்மன்றல் பெற்றாற் றோற்றுதலாண்மையென்று செப்பியேமுனிவன்போகச் சிறுவரும்பெரியகங்குல் மைப்புறப்பார்த்தன்செங்கை மணிவிளக்காரப்போனார். |
(இ-ள்.) இ பகல் இரவுஉம் வைகாது - இன்றைப் பகலும் இராத்திரியும் எங்குந்தங்காமல், ஏகி - விரைவாகநடந்து, ஆங்கு எய்தும் - அவ்விடத்துக்கு [சுயம்வரமண்டபத்துக்கு)ப் போய்ச்சேருங்கள்; அங்கண் - அவ்விடத்தில், அ பகல் -அத்தினத்தில், (நாளைக்கு), மன்றல் பெற்றால்-(திரௌபதியின்) மணமாலையைப்பெற்றபின்பு, தோற்றுதல் - (அங்கு உங்கள் உண்மைவடிவத்துடன்) வெளிப்படுதல்,ஆண்மை - ஆண்தன்மைக்குஉரிய செயலாம், என்று செப்பி- என்றுசொல்லி,-முனிவன் - அவ்வியாசமுனிவன், போக-செல்ல,-சிறுவர்உம் - யௌவனபருவமுடையவராகிய பாண்டவர்களும், பெரிய கங்குல் - நீண்ட அவ்விராப்பொழுதில், மைபுறம் பார்த்தன் செம் கை மணி விளக்கு ஆரபோனார் - கருநிறமானஉடம்பையுடைய அருச்சுனனது சிவந்தகையில் அழகியவிளக்குப் பொருந்தச்சென்றார்கள்; (எ-று.) அவ்விரவில் மிக்கதைரியசாலியான அருச்சுனன் வெளிச்சத்துக்காகக்கையில் தீக்கோல்பிடித்து முன்னேவழிகாட்டிக்கொண்டு செல்ல, மற்றையோர் அவன்பின் சென்றன ரென்பதாம், நீங்கள் அந்தணவேடத்தோட சென்று வில்வளைத்து இலக்கைஎய்து திரௌபதியின்மணமாலையைப்பெற்றால், அவ்விஷயத்திற்பொறாமை கொண்டவராய் அரசரனைவரும் எதிர்த்துப் பொருவராதலின் அவர்களைவென்றபின்னரே வெளிப்படுதல், நெடுநாளாக மறைந்திருந்தஉங்களது ஆண்மைஉங்கள் பகைவர்முதலியோர்க்கு நன்கு புலப்படுதற்கு ஏற்றவழி யென்னுங் கருத்தால், 'அப்பகல்மன்றல் பெற்றால் தோற்றுதலாண்மை' என்றான். திரௌபதியின் மணத்திற்கருத்தூன்றிய அவர்கட்கு இடையேநேர்ந்த அவ்விராப் பொழுதுநீட்டித்ததாகத்தோன்றிய தென்பதுபட, 'பெரியகங்குல்' என்றார். இங்கே, 'சிறுவர்' என்றது -இளமைப் பருவமுடையோரென்றபொருளோடு, அவ்வியாசமுனிவனது பௌத்திர ரென்ற கருத்தையுங் காட்டும். மன்றல்-விவாகம்; இலக்கணையாய் அதைநிச்சயித்தற்குஉரிய சுயம்வரமாலையை உணர்த்திற்று. (482) 8.- சித்திரரதனென்னும்கந்தருவனை அருச்சுனன் வெல்லுதல். புத்திரன்பேரர்கங்கைப் பூந்துறையடைந்தபோதில் குத்திரவிஞ்சைவேந்தன் குறுகிவெங்கொடும்போர்செய்யச் சித்திரத்தேரோன்றன்னைத் தேவர்கோன்மதலைசெந்தீ அத்திரத்திருந்தைத்தேரோ னாக்கினனிமைப்பினம்மா. |
|