பக்கம் எண் :

266பாரதம்ஆதி பருவம்

     கங்குற்போதுக்குப் புலர்தல்-விடிதல். பனிக்குப் புலர்தல்- அழிதல். மனத்துக்கு
மலர்ச்சி-உணர்வுறுதல், கண்ணுக்கு மலர்ச்சி - விழிப்பு. திசைகளுக்கும் பாருக்கும்
வயங்குதல்-வெளிச்சம்பெறுதல். தடாகம் அலர்தல்-சூரியனுதித்தவளவிலே
தாமரைமலரப்பெறுதலும், நீர்தெளிவும், சோலையலர்தல் - ஒடுக்கமொழிதல்.
சக்கரவாகப்பறவை  இரவில் ஆணும் பெண்ணும் பிரிந்திருந்து பகலிற் கூடும்
இயல்பின தாதலால், அத்தன்மையை 'கலந்தன குருகும் பேடும்' என்றார்.
உதயகாலத்தில் மங்களகரமாக முரஜ சங்கங்களை முழக்குதல், இயல்பு.
இரண்டிரண்டுபொருளின் வினைகளுக்கு உடனிகழ்ச்சி கூறியது- உடனவிற்சியணி.
இதனோடு தன்மைநவிற்சியணி கலந்துவந்தது. இதுமுதல் குலாலனது இருக்கையைச்
சேர்தற்குமுன் வரையிலுள்ள வருணனைகள் பாலபாரதத்தில் இல்லை.    (485)

11.-உதயகாலத்துத் தென்றல் இனிமையாக வீசுதல்.

குன்றமுங்கொடியகானுங் கூரிருட்கங்குனீங்கி
நன்றுநன்றுதவவந்தீர் நடந்துநீரிளைத்தீர்போலும்
என்றுகொண்டுவகையோடு மின்மலர்க்கழுநீர்வாச
மன்றலந்தென்றல்வீசி வழிவிடாய்தணித்ததன்றே.

     (இ-ள்.)  மன்றல் அம் தென்றல் - நறுமணத்தையுடைய இனிய
தென்றற்காற்றானது, - (பாண்டவர்களைநோக்கி), 'கூர் இருள் கங்குல்-
மிக்கஇருளையுடைய இரவிலே, குன்றம்உம் கொடிய கான்உம் நீங்கி-மலைகளையும்
கொடுமையையுடைய காடுகளையுங் கடந்து, உதவ வந்தீர்-(எனதுநண்பனாகிய
அக்கினியின் மகளான திரௌபதியை மணம்புரிந்து). உதவுதற்கு வந்தீர்கள்; நன்று
நன்று-(உங்கள்வரவு) மிகவும்நல்லது; நீர் நடந்து இளைத்தீர்போலும் - நீங்கள்
வழிநடந்துவருவதால் இளைப்படைந்தீர்போலும்', என்று கொண்டு - என்று
சொல்லிக் கொண்டு, உவகையோடும் - மகிழ்ச்சியுடனே, இன் மலர் கழுநீர் வாசம்
வீசி-இனிய செங்கழுநீர்மலர்களின் வாசனையை மேல்வீசி, வழிவிடாய் தணித்தது-
(அவர்களுடையவழிநடைவருத்தத்தைத் தணியச்செய்தது;

     காலையில் இயல்பாக மந்தகதியோடு இனிது வீசுகிற தென்றலை, பாண்டவர்
வழிவிடாயைத் தணித்தற்கென்றே வீசுவதாக ஒருபயனைக்கற்பித்துக்கூறியது -
பயன்தற்குறிப்பேற்றவணி. இங்ஙன்இனியதென்றல்வீசியது. பாண்டவர்க்குச்
சுபசூசகம்.நன்று நன்று-அடுக்கு, மகிழ்ச்சிபற்றியது. அன்று, ஏ - ஈற்றசைகள். (486)

12,-ஐந்துகவிகள்-பாண்டவர்க்குநிகழும் நன்னிமித்தங்
கூறும்.

வெறிபடுமுளரிமொக்குள் விரிபதனோக்கிச்சுற்றும்
பொறிவரிவண்டினீட்டம் புறத்திருந்திரங்கவண்டொன்
றிறகரால்வீசியுள்புக் கின்மதுநுகர்தல்கண்டு
நெறியினன்னிமித்தமாக நெஞ்சுறநினைத்துசென்றார்.

     (இ-ள்.) வெறி படு - தேன்பொருந்திய, முளரி மொக்குள் - தாமரையரும்பு,
விரிபதன் - மலருஞ் சமயத்தை, நோக்கி - எதிர்