கின்ற உரல்போன்ற கால்களைக் கொண்ட யானைச்சேனையையுடைய அரசர்களெல்லோரும்வந்தார்கள்; வீக்கும் நல் மிளிர் பொன் பூணிர்தரித்த நல்ல விளங்குகிற பொன்னணிகளையுடையர்களே! விரைவுடன் வம்மின்-(நீங்கள் அவளைமணஞ்செய்தற்கு) விரைவாக வாருங்கள், 'என்று-, கூக்குரல் விளிப்ப போலும் - உரத்துக்கூவுகிற குரலால் (தம்மை) அழைப்பன போன்ற, கோகிலம் குரல்உம் - குயில்களின் குரலையும், கேட்டார் - (பாண்டவர்கள்) கேட்டார்கள்; இது, தற்குறிப்பேற்றவணி. பாண்டவர்தவிர மற்றைய அரசர்களின் வருகைதிரௌபதியை மணஞ்செய்துகொள்ளுதற்கன்றி அவளது மணக்கோலத்தைப் பார்த்தற்காகவே முடிவதனால், 'வதுவையினழகு காணத் தரணிபரெவரும், வந்தார்' எனப்பட்டது. 'வீக்குநன்மிளிர்பொற்பூணீர்' என்றது, முன்னையநிலைமையைப்பற்றியது. மா-கருமை. குரலளகம்-ஒருபொருட்பன்மொழி; இரண்டும், பெண்மயிரென்னும் பொருளன. மாக் குர லளகம் - வண்டுகள் ஒலிசெய்யும் கூந்தலெனினுமாம். (489) 15. | நீடுதலில்லையின்றே நிருபதிகன்னிமன்றல் கூடுதலிவர்க்குண்டாகுங் கொற்றவர்குறைபொறாதே ஓடுதலுண்மையென்னாத் தோகைகளோகையோடும் ஆடுதனோக்கிநோக்கி யகமகிழ்ந்தேகினாரே. |
(இ-ள்.) 'நிருபதி கன்னி மன்றல்-(பாஞ்சால) ராசனுடைய புத்திரியான திரௌபதியின் விவாகம், நீடுதல் இல்லை-நீட்டித்தவில்லை; இன்றுஏ-இன்றைக்கேயாம்; இவர்க்கு கூடுதல் உண்டாகும் - இப்பாண்டவர்கட்கு (அவ்விவாகம்) கைகூடும்;(அதனால்), கொற்றவர்-மற்றையரசர்கள், குறை பெறாது-(தமக்கு நேர்ந்த) அவமானத்தைப் பொறுக்காமலே, ஓடுதல் - ஓடிப்போதல், உண்மை - நிச்சயம், ' என்னா-என்றுகருதி, (அதனால்), தோகைகள்-மயில்கள், ஓகையோடும் ஆடுதல் - மகிழ்ச்சியோடு கூத்தாடுதலை, நோக்கி நோக்கி, ' (பாண்டவர்கள்) அகம் மகிழ்ந்து ஏகினார்-மனமகிழ்ந்து சென்றார்கள்; (எ - று.) நிருபதி=ந்ருபததி. இதுவும்-தற்குறிப்பேற்றவணியே. மயில்கள் ஆடுதலை, இங்ஙனம் கருதியாடுவனவாக இவர்கள்கொண்டனரென்க. நோக்கி நோக்கி-அடுத்தடுத்துப் பலவிடத்தும் உற்றுப்பார்த்து என்றபடி. (490) 16. | பூவெலாஞ்சுரும்புமொய்ப்பப் புனலெலாம்புள்ளுவைக மாவெலாந்துணையின்மேவ மரனெலாம்வல்லிபுல்ல ஏவெலாம்பயின்றவிற்கை யேற்றிளஞ்சிங்கம்போல்வார் காவெலாமருங்குதோறுங் கண்டுகண்களித்துநின்றார். |
(இ-ள்.) கா எலாம்-(இடைவழியிலுள்ள) சோலைகள்யாவும், மருங்கு தோறுஉம் -தம் இடங்களிலெல்லாம், பூ எலாம் சுரும்பு மொய்ப்ப - மலர்களிலெல்லாம் வண்டுகள்மொய்க்க, புனல் எலாம் புள்ளு வைக-நீரிலெல்லாம் பறவைகள் தங்க, மா எலாம்துணையின் மேல்-விலங்குகளெல்லாம் (தத்தமக்குரிய) துணியான பெண்பாலுடனேபொருந்த, மரன் எலாம் வல்லி புல்ல - மரங்களிலெல்லாம் கொடிகள் தழுவ,-ஏஎலாம் பயின்ற வில் கை ஏறு இளஞ்சிங்கம் |