ஆன மெல் புனல் ஆசையால் - குளிர்ச்சி பொருந்திய மெல்லிய நீரில் விருப்பத்தினால், மணி தூ நிறம் கங்கையாள் - அழகிய வெண்மைநிறம் பொருந்தியகங்காநதியின், சூழல் - கரையிலே, எய்தினான் - போய்ச் சேர்ந்தான்; (எ - று.) வேட்டையாடி யிளைத்ததனால், தண்ணீரில் விருப்புக் கொண்ட சந்தனுராசன்கங்கைக்கரையை யடைந்தா னென்க. காமவின்பத்தை மிகுவித்தற்கு ஏற்றவேனிற்காலத்திற்கு உரியவ னாதலால், மன்மதன் 'வேனிலான்' எனப்படுவன்.மணி -முத்துமாம். ஆனமெய் குளிர் புனல் என்றும் பாடம். (42) 35.- அப்போது கங்காநதி அங்குப் பெண்வடிவு கொண்டிருத்தல். மருவருங்குழல்விழி வதனம்வார்குழை இருதனந்தோள்கழுத் திதழொடின்னகை புருவம்வண்புறவடி பொற்பப்பாவையர் உருவுகொண்டனடன துடைமைதோன்றவே. |
(இ - ள்.) (அப்போது கங்காநதி),- மரு வரும் குழல்- நறுமணம் வெளிவருகின்றகூந்தலும், விழி - கண்களும், வதனம் - முகமும், வார் குழை - நீண்டகாதும், இருதனம் - இரண்டுமுலைகளும், (இரு) தோள்- (இரண்டு) தோள்களும், கழுத்து -கழுத்தும், இதழொடு - வாயிதழும், இன் நகை - இனிய பற்களும், புருவம் -புருவங்களும், வள் புறம் அடி - வளப்பமுள்ள புறவடிகளும், (ஆகியஇவ்வுறுப்புக்கள்), பொற்ப - அழகுபெற்றிருக்க, தனது உடைமை தோன்ற - தான்பெண்வடிவ முடையவளாயிருப்பது தெரியும்படி, பாவையர் உருவு - பெண்களின்வடிவத்தை, கொண்டனள்- ; (எ-று.) குழையென்பது - ஒருவகைக்காதணியையே யன்றி, காது என்னும் பொருளைக்காட்டுவதை "மணித்தோடுங் குழையி லாட" என்ற இடத்துங் காண்க: குழைந்திருப்பதுகுழை எனக் காதுக்குக் காரணவிடுகுறி. (43) 36.- கங்கையின் பெண்தெய்வம் தோன்றியதைச் சந்தனு காணுதல். கங்கையின்வெள்ளமேற் கருத்துமாறியிம் மங்கைதன்பேரொளி வனப்பின்வெள்ளமே தங்கியசோகமுந் தாபமுங்கெடப் பங்கயவிழிகளாற் பருகினானரோ. |
(இ - ள்.) கங்கையின் வெள்ளம் மேல் - கங்காநதியின் வெள்ளத்தின் மீது (சென்ற), கருத்து- (தன்) மனம், மாறி - மாறப்பெற்று, இ மங்கை தன் - இந்தக் கங்காநதியின் பெண்தெய்வத்தின், பேர் ஒளி வனப்பின் வெள்ளம்ஏ - மிக்க ஒளியைக்கொண்டுள்ள அழகின் பெருக்கையே, தங்கிய சோகமும் தாபமும் கெட- (தன்) மனத்துப் பொருந்திய சோகதாபங்கள் கெட்டொழிய, பங்கயம் விழிகளால்- தாமரை மலர்போன்ற கண்களினால், (சந்தனு), பருகினான்-; (எ -று.) நீர் பருகவேணுமென்ற எண்ணத்தோடு வந்த சந்தனுவின் கருத்து அங்குத்தோன்றிய கங்காநதியின் பெண் தெய்வத்தின் அழகுவெள்ளத்திற் செல்லவே,அவனுடைய சோகதாபங்கள் அகன்றனவென்க. (44) |