யென்றுங் கொள்ளலாம்; வாரணம் - தடை அலங்காரஞ் செய்யப்பட்டகுடங்களை நீர்நிறைத்து மங்களகரமாக முன்வைத்தல் மரபு. 18.-பாண்டவர் பாஞ்சாலநகரத்தினுட் புகுதல். மங்கலமுழவம்விம்ம மன்னுபல்லியங்களார்ப்பச் சங்கினமுழங்கவெல்லாத் தானையும்பரந்துசூழ எங்கணுநெருங்கிவைகு மிராசமண்டலங்களோடும் துங்கவேற்றுருபதன்றன் றொல்லைமாநகரிபுக்கார் |
(இ-ள்.) மங்கலம் முழவம் விம்ம - மங்கள முரசங்கள் ஒலிக்க, மன்னு பல்இயங்கள் ஆர்ப்ப-(மற்றும்) பொருந்தியபலவகைவாத்தியங்கள் முழங்க, சங்கு இனம் முழங்க - சங்குக்கூட்டங்கள் ஆரவாரிக்க, எல்லாம் தானைஉம் பரந்து சூழ- நால்வகைச்சேனையும்பரவிச் சூழ்ந்துநிற்க, எங்கண்உம் நெருங்கி வைகும்- அந்நகரத்தில் எல்லாவிடத்திலும் நெருங்கியிருக்கின்ற, இராச மண்டலங்களோடுஉம்- அரசர்கூட்டங்களுடனே, (பாண்டவர்களும்), துங்கம் வேல் துருபதன்தன் தொல்லை மா நகரி புக்கார்-சிறந்தவேலையுடைய துருதனது பழைய பெரிய அந்நகரத்தினுட் சென்றார்கள்; (எ-று.) பல்இயம்-கொட்டுவன ஊதுவனமுதலியன. விம்மஆர்ப்பமுழங்க என்று ஒருபொருளிற்பன்மொழிகள்வந்தமை, பொருட்பின்வருநிலையணி. (493) 19.-அந்நகரம் அப்பொழுது இருந்த தோற்றம். தொடங்கியுந்தொடக்கந்தொட்டுத் துகளறவளர்ந்துமீள மடங்கியுஞ்செல்லுகின்ற மன்னுயிருலகமெல்லாம் முடங்கியசார்ங்கச்செங்கை முகுந்தன்வாய்புகுந்தகாலத் தடங்கியவுதரம்போன்ற தந்தமாநகரியம்மா. |
(இ - ள்.) அந்த மா நகரி-பெரிய அந்தப்பாஞ்சாலநகரமானது, தொடங்கிஉம் - தோன்றியும், தொடக்கம் தொட்டு துகள் அறவளர்ந்துஉம்-அத்தோன்றிய காலம்முதல்பழுதறவளர்ந்தும், மீளமடங்கிஉம் - பின்பு அழிந்தும், செல்லுகின்ற- (இவ்வாறு)நடைபெற்றுவருகிற, மன் உயிர் - மிக்க பிராணிகளையுடைய, உலகம் எல்லாம் -உலகங்கள் யாவும், முடங்கிய சார்ங்கம் செம் கை முகுந்தன் வாய் புகுந்த காலத்து -வளைந்து சார்ங்கமென்னும்வில்லையேந்திய சிவந்த திருக்கையையுடைய திருமாலினதுவாயினுட் புகுந்த பொழுது, அடங்கிய- (அவையாவும்) அடங்கப்பெற்ற,உதரம்-(அவ்வெம்பெருமானது) திருவயிற்றை, போன்றது - ஒத்தது; (எ-று.) அம்மா - வியப்பிடைச்சொல். யாவும் அழியும் யுகாந்த காலத்திலே, பிரளயசமுத்திரத்திலே மகாவிஷ்ணு அண்டங்களையெல்லாம் தன்வயிற்றிற்கொண்டு சிறுகுழந்தைவடிவமாய் ஆதிசேஷனது அமிசமானதோ ராலிலையின்மீது பள்ளிகொண்டிருந்த பின்பு பிரளயம் நீங்கியவுடன் அவ்வுலகங்களை யெல்லாம் வெளிப்படுத்தியருளுகின்றன னென்பது, வரலாறு. அப்பொழுதுஉலகத்திலுள்ள சகலசராசரங்களும் அடங்குகின்ற திருமாலின் திருவயிற்றை, உலகத்து உயிர்கள் பல வந்து கூடி நெருங்கியுள்ள பாஞ்சாலநகருக்கு உவமை கூறினார். காலவசத்தால் சிருஷ்டி |