பக்கம் எண் :

274பாரதம்ஆதி பருவம்

     (இ-ள்.) 'ஆண்டு - அக்காலத்தில், எரி பிறந்த போதுஏ- (நான்)
யாகாக்கினியில்தோன்றியபொழுதே, அன்பினால் எந்தை நேர்ந்த - அன்போடு
எனது தந்தை(எனக்குக் கொழுநனாக) நிச்சயித்த, பூண் தெரி மார்பன் - ஆபரணம்
விளங்குதற்குக்காரணமான மார்பின்பொலிவையுடைய அருச்சுனன், இன்று -
இன்றைத்தினத்தில், இ பொன் அவை பொலிய தோன்றி - இந்த அழகிய
சுயம்வரசபைபொழிவடையும்படி (இதில்) வந்து தோன்றி, மன்னர் இழிவு உற-மற்றையரசர்கள்அவமானமடைய, ஈண்டுஎரிமுன்னர் வேட்டிலான் ஏல்-சொலிக்கிற
அக்கினியின்முன்னிலையிலே (என்னை) விவாகஞ்செய்யாதொழிவனானால், மீண்டு
எரி புகுவன்-திரும்ப நான் அக்கினியிலே பிரவேசித்துவிடுவேன், ' என்னும்-
என்றுதுணிகிற,எண்ணமே-நினைப்பே, விளையும்-முதிர்கிற, நீராள்
தன்மையையுடையவளும்,-(எ-று.)- "(ஆகிய) பிறை நுதலாடன்னை" (26) என்க.

     எரியினின்று பிறந்தவ ளாதலால், 'மீண்டு எரிபுகுவன்' என்றாள்.
அக்கினிசாக்ஷியாக விவாகஞ்செய்தல், மரபு.                         (500)

26. - தோழியர் திரௌபதிக்கு அலங்காரஞ்செய்தல்.

கோண்பிறைநுதலாடன்னைக் கோதையர்பலருங்கூடிச்
சேண்புனல்பலகொண்டாட்டிச் செழுந்துகிறொழுதுசேர்த்திப்
பூண்பனவிசையப்பூட்டிப் புகைகமழ்தாமஞ்சூட்டிக்
காண்பவராண்மைதேயக் காமவேள்கலகஞ்செய்தார்.

     (இ-ள்.) கோண் பிறை நுதலாள்  தன்னை- வளைவாகியபிறைச் சந்திரன்
போன்றநெற்றியையுடையளான திரௌபதியை, கோதையர் பலர்உம்கூடி-
தோழிப்பெண்கள்பலருஞ் சேர்ந்து, சேண்புனல் பல கொண்டு ஆட்டி-சிறந்த பல
நதிகளினின்று(கொணர்ந்த) புண்ணியதீர்த்தங்களைக்கொண்டு ஸ்நாநஞ்செய்வித்து,
செழுதுகில்தொழுது சேர்த்தி-சிறந்த புதிய பட்டாடையை வணக்கத்தோடு (அவட்கு)
உடுத்தி,பூண்பன இசைய பூட்டி - பூணுதற்கு உரிய ஆபரணங்களை (அவட்கு)த்
தகுதியாகஅணிவித்து, புகை கமழ் தாமம் சூட்டி - (அகிற்) புகை மணம்வீசுகிற
மலர்மாலையை(அவட்கு முடியிற்) சூட்டி,-  காண்பவர் ஆண்மை தேய
காமவேள்கலகம் செய்தார்-(அவளைக்) காணும் ஆடவர்கள் ஆண்தன்மை
குறையும்படி மன்மதனது போரைவிளைத்தார்கள்; (எ-று.)

     அவளது இயற்கையழகோடு செயற்கையழகின் பொலிவையும் காணும்
ஆடவர்கள் அவளிடத்தே காதல்மிக்கு அதனால் அறிவு முதலிய
ஆண்மைக்குணங்கள் குன்றும்படி  அலங்கரித்தன ரென்பதாம். ஆண்மை - அறிவு
நிறை ஓர்ப்பு கடைப்பிடி யென்பன; இவை, ஆடூஉக்குணம் எனப்படும்.     (501)

27.- திரௌபதியைச் செவிலித்தாயர் சுயம்வர
மண்டபத்துக்கு அழைத்து வருதல்.

வந்தனர்குமரர்யாரும் வருகெனமகிழ்ந்துபோற்றிச்
சந்தணிமுலையினாளைத் தாயினும்பரிவுகூர்ந்தோர்