கருதினனாயினும், அங்ஙனம் தான் மாறுகூறினால் மற்றோர் யாது கருதுவார்களோ என்று ஒன்றுஞ்சொல்லாது சும்மாஇருந்தனனென்பது, 'மாற்றம் பிறிதொன் றுரையான்' என்றதன் கருத்து. தன்மனத்திலுண்டான எண்ணத்தை மறைக்கவேண்டு மென்ற கருத்தோடு முகத்தில் பொய்யாக மலர்ச்சிகாட்டுகின்றன னென்பதும், அந்த அசட்டுத்தனத்தைக் குறிப்பறியவல்ல செவிலித்தாயர் அறிந்தாரென்பதும் இங்கு விளங்கும். பொய்யே மலர்ந்த திரு முகத்தான்-பொய்யையேபேசும் வாயையுடையான்என்றுமாம்.(510) 36.-இது. துரியோதனன் தம்பியரைக்குறித்தது. மணியின்கிரணவெயிலெறிப்ப மண்ணேழ்தாங்குநச்செயிற்றுப் பணியின்முடிநாயகத்தலையின் பாங்கேநிரைத்தபஃறலைபோல் துணியுங்கொடுமைவகிரன்ன துணைவர்துச்சாதனன்முதலோர் அணியுங்கழற்காற்சுயோதனனுக் கருகாசனத்தரிவரென்றார். |
(இ-ள்.) மணியின் கிரணம் வெயில் எறிப்ப - (தம்மிடத்து உள்ள) மாணிக்கங்களின்ஒளியாகிய வெயில் வீச, மண் ஏழ் தாங்கும் நஞ்சு எயிறு பணியின்முடி நாயகம்தலையின் பாங்கு நிரைத்த- ஏழுலகங்களையும்(கீழிருந்தும்) தாங்குகிறவிஷமுள்ளபற்களையுடைய ஆதிசேஷனது சுடிகையையுடைய பிரதானமானதலையினதுபக்கங்களில் வரிசையாகவுள்ள, பல் தலைபோல்- பல தலைகள்போல,அணியும் கழல் கால் சுயோதனனுக்கு அருகு ஆசனத்தர் - அணிகிறவீரக்கழலையுடைய காலையுடைய துரியோதனனுக்குப்பக்கத்து ஆசனங்களில்வீற்றிருக்கின்றவர்களான, இவர்-இவர்கள், துணியும் கொடுமை வகிர் அன்னதுணைவர்- துணிபட்ட கொடுமையின் துண்டுகள் போன்ற அவன் தம்பியராகிய,துச்சாதனன்முதலோர்-, என்றார்-; (எ-று.) ஆதிசேஷனது நடுநாயகத்தலை துரியோதனனுக்கும், அதனையடுத்துள்ள மற்றைத்தலைகள் அவனையடுத்துள்ள அவன்தம்பியர்தொண்ணூற்றொன்பதின் மருக்கும் உவமை. இவ்வுவமையால், அவர்களுக்குள்இருக்கிற ஒற்றுமை விளங்கும். மண் ஏழ் - ஏழு தீவுகளாகவுள்ள பூமியென்றுமாம்.ஆதிசேஷன் தலைக்குச்சுடிகை போல அரசர்கள் தலைக்குக் கீரீடம் அமையும். துரியோதனன் தம்பிமார் கொடியவர்களாதலால், கொடுமை பல துண்டுகளாகத் துணிப்பட்டதுபோன்றவ ரெனப்பட்டார்; தற்குறிப்பேற்றவணி. துச்சாதனன் முதலியோரின் கொடுமையைக் கற்போர்க்கு அறிவிக்கக் கவி கூறியதன்றிச் செவிலியர் 'கொடுமைவகிரன்னதுணைவர் ' எனக்கூறினாரெனக் கொள்ளற்க. (511) 37.- இது, சகுனியைக் குறித்தது. உலைவந்தயருஞ்சூன்மந்திக்குருகாநிலங்கீண்டுதவுகுலக் கலைவன்பலவின்சுளைகீறிக்களிப்போடளிக்குங்காந்தாரத் தலைவன்சகுனியிவன்கண்டாய்தக்கோராடாச்சூதுக்கும் நிலைவஞ்சனைக்குந்தரணிபரில்யாரேயிவற்குநிகரென்றார். |
(இ-ள்.) உலைவந்து அயரும்-மெலிந்து தளர்கிற, சூல்மந்திக்கு-கருப்பம்முதிர்ந்த பெண்குரங்குக்கு, உருகா - மனமுருகி, உதவு-(இரை |