பக்கம் எண் :

282பாரதம்ஆதி பருவம்

திண்மைக்கிவனேநெறிக்கிவனே தேசுக்கிவனேசிலைக்கிவனே
வண்மைக்கிவனேகன்னனெனு மன்னன்கண்டாய்மற்றிவனே.

    (இ-ள்.) பெண்மைக்கு - பெண் தன்மையில், இரதி என-ரதீ தேவிபோல்வா
ளென்று சொல்லும்படி, வந்த - தோன்றிய, பெண் ஆர் அமுதே-பெண்களுள்
பெறுதற்கு அரிய அமிருதம்போலச் சிறந்தவளே! பேர் உலகில் - பெரிய உலகத்தில்,
உண்மைக்கு-சத்தியத்துக்கு,  இவனே-; வலிக்கு - பலத்துக்கு, இவனே-; உறவுக்கு-
சிநேக தருமத்துக்கு, இவனே-; உரைக்கு-புகழுக்கு, இவனே-; திண்மைக்கு -
கலங்காத நெஞ்சுறுதிக்கு, இவனே-; நெறிக்கு-; நல்லொழுக்கத்திற்கு,  இவனே-;
தேசுக்கு - ஒளிக்கு, இவனே-; சிலைக்கு - விற்றொழிலுக்கு, இவனே-; வண்மைக்கு-
தானத்துக்கு,  இவனே-;- இவன்-,  கன்னன் எனும் மன்னவ-கர்ணனென்று
சொல்லப்படும் அரசன்; கண்டாய் - காண்பாய் (என்றுசொன்னார்கள்); (எ-று.)-மற்று-
அசை.

      'என்றார்' என்பதை வருவித்துக்கொள்க; இன்னும் சிலசெய்யுள்களுக்கும் இது
கொள்க. செய்யுளாதலின், 'இவன்' என்ற சுட்டுப்பெயர் 'கன்னன்' என்ற
இயற்பெயரின்முன் வந்தது; "செய்யுட்குஏற்புழி" என்றார், நன்னூலார்.
இவனேயென்பதற்கு-இவனே சிறந்தவ னென்றும், இவனல்ல தில்லை யென்றுங்
கருத்து.                                                       (514)

40.- இது, பலராமனைக் குறித்தது.

அலத்தான்முன்னம்பிளந்தபகை யடர்ப்பான்கருதிப்பிளப்புண்ட
சலத்தால்யமுனைபிணித்ததெனத் தயங்கும்படிசேர்தானையினான்
குலத்தாலுயர்ந்தவசுதேவன் குமரன்களபக்கொங்கையர்மெய்ந்
நலத்தான்மகிழுஞ்சிந்தையினா னறுந்தாரிராமனிவனென்றார்.

     (இ-ள்.) 'யமுனை - யமுநாநதி, முன்னம் அலத்தால் பிளந்த பகை
அடர்ப்பான்கருதி - முன்பு (தன்னை இவன்) கலப்பையைக்
கொண்டுபிளந்தபகைமைக்குஎதிர்செய்து வெல்லக்கருதி, பிளப்புண்ட சலத்தால்
பிணித்தது - பிளவுபட்ட நீரினால்(இவனைச்) சூழ்ந்திட்டது ', என-என்று
சொல்லும்படி, தயங்கும் படி சேர்-(நீலநிறமாய்)விளங்குந் தன்மையைக் கொண்ட,
தானையினான் - ஆடையையுடையவனாகிய,இவன்-, குலத்தால் உயர்ந்த
வசுதேவன் குமரன் - குடிப்பிறப்பினாற் சிறந்தவசுதேவனுடைய புத்திரனும்,
களபம் கொங்கையர் மெய் நலத்தால் மகிழும்சிந்தையினான்-
கலவைச்சந்தனத்தையணிந்த தனங்களையுடைய மகளிரது உடம்பைத்
தழுவும் இன்பத்தால் மகிழும் மனத்தையுடையவனுமாகிய, நறுந் தார் இராமன் -
நறுமணமுள்ளமாலையையணிந்த பலராமன் என்றார்-; (எ - று.) 

     பலராமன் - கண்ணனுக்குத் தமையன்; திருமாலின்  எட்டாம் அவதாரம்.
வசுதேவனுடைய பத்தினியருள் தேவகியின் கருப்பத்தில் ஆறுமாசமும்,
ரோகிணியின்கருப்பத்தில் ஆறுமாசமும் இருந்து பிறந்தவன். இவன், நீலநிறமான
ஆடையை யுடுப்பவனாதலால் நீலாம்பர னென்று பெயர்பெறுவன், இவன், ஒரு