பக்கம் எண் :

288பாரதம்ஆதி பருவம்

வெண்மையான  தந்தங்களையுடைய, அயிராவதம்ஏபோலும் - ஐராவதமென்ற
அரசயானையையே ஒத்த, பகட்டில்- யானையின் மேலேறி, வினைக்கண்
புகுந்தால் -போர்த்தொழிலிலே பிரவேசித்தால், வேறு எதிர் நின்று இவனை
வெல்கிற்பார் ஆர் -இவனுக்குப் பகையாய் இவனெதிரில்நின்று 
இவனைவெல்லவல்லவர்  யாவருளர்?

     பகதத்தன்-நரகாசுரனதுமகன்; கண்ணன் நரகாசுரனைக்கொன்றபின்
அப்பெருமானால் அவனது பிராக்சோதிஷமென்னும் பட்டணத்தில்
இராச்சியப்பட்டாபிஷேகஞ் செய்யப்பட்டவன். ஒருகாலத்தில் தேவாசுர யுத்தத்தில்
தோல்வியடைந்த தேவேந்திரன், இவனைத் துணைவேண்ட, இவன் சென்று பொருது
அசுரரை யொழித்து இந்திரனுக்கு அரசாட்சியை நிலைநிறுத்தினன். அக்காலத்தில்
நூறாயிரம்யானை பலமுடைய சுப்பிரதீகமென்னும் தெய்வயானை இந்திரனால்
இவனுக்கு அளிக்கப்பட்டதென்றும்  அதனைப்பதினாயிரம் யானையை
யொத்தவனாகிய இவன் பட்டத்துயானையாகக் கொண்டுஅதன்மேல்
ஏறிப்பொருது தவறாதுபகைவென்றுவந்தனனென்றும் அறிக. இவன்,
யானைப்போரில் வல்லவன். ஐராவதமென்பது - இந்திரனது  பட்டத்துயானை;
வெண்ணிறத்தையும் நான்குதந்தங்களையும் உடையது, எட்டுத்திசையானைகளுள்
கீழ்திசைக்கு உரியதும் இதுவே.                                  (519)

45.-இது சல்லியனையும் நீலனையும் சேரசோழ
பாண்டியரையும் குறித்தது.

இவன்சல்லியனென்றுரைசான்ற விகல்வேன்மன்னர்க்கேறனையான்
இவன்றன்பகைவர்யாவரையு மிமையோராக்குமெழினீலன்
இவன்றண்டமிழ்தேரடல்வழுதி யிவன்றேரிரவிகுலவளவன்
இவன்செந்தழலோன்மரபாகி யீரேழுலகும்புகழ்சேரன்.

     (இ-ள்.) இவன்;- சல்லியன் என்று உரை சான்ற - சல்லியனென்று பேர்பெற்ற,
இகல்வேல் மன்னர்க்கு ஏறு அனையான் - வலியவேலாயுதத்தையுடைய
அரசர்களுக்குச்சிங்கம்போன்றவன்; இவன்;-, தன் பகைவர் யாவரைஉம் இமையோர்
ஆக்கும்-தன்பகைவர்களெல்லோரையும் தேவர்களாகச்செய்கின்ற, எழில் நீலன் -
அழகையுடையநீலனென்பவன்; இவன்-; தண்தமிழ் தேர் அடல் வழுதி-இனிய
தம்ழிப்பாஷையைஆராய்ந்துதேர்ந்த வலிமையையுடைய பாண்டியன்; இவன்-,
தேர் இரவிகுலம்வளவன் - தேரையுடைய சூரியனது குலத்தில் தோன்றிய சோழன்;
இவன்-,செம் தழலோன்மரபு ஆகி ஈர் ஏழ் உலகுஉம் புகழ் சேரன்-சிவந்த
அக்கினியினதுகுலத்தில் தோன்றியவனாய்ப் பதினான்கு உலகத்தாரும் புகழ்ப்பெற்ற
சேரன்;   (எ-று.)

     சல்லியன் - (பகைவர்க்கு) அம்பு நுனிபோல் (வருத்தஞ்செய்)பவன்; சல்யம் -
அம்புமுனை. இவன் மத்திரிநாட்டரசன்; பாண்டுமகாராசனது இரண்டாவது
மனைவியாகிய மாத்திரிக்கு உடன் பிறந்தவன், நீலனென்பவன் பிரசித்தரான
அரசர்களில் ஒருவனாக முதனூலிலுங் குறிக்கப்பட்டுள்ளான். இவனை
மாஹிஷ்மதீநாதனென்று பாலபாரதம்கூறுகிறது. போரிற் புறங்கொடாது.