பக்கம் எண் :

திரௌபதி மாலையிட்ட சருக்கம்289

இறந்தவர், உடனே தேவர்களாகி வீரசுவர்க்கம் புகுகின்றனரென்பது
நூல்துணிபாதலால், பகைவர்களைத் தவறாதுகொல்கிற என்ற பொருளில்
'இமையோர்க்கும்' என்றார்; இது, பிறிதினவிற்சியணி. பாலபாதத்தில் தமிழ்மன்னரைக்
கூறவில்லை.                                                    (520)

46.-இதுபல அரசர்களைப் பொதுப்படக் குறித்தது.

வில்லாண்மையினால் வெங்கருப்பு வில்லோன்றனக்கேநிகரென்னப்
பல்லார்புகழும்பான்மையினாற் பதினெண்புவிக்கும்பதியாய
எல்லாவரசுநின்பொருட்டா லீண்டேதிரண்டவின்னமுதச்
சொல்லாய்நல்லாய்மென்பூவாய் தோகாய்பாவாய்திரௌபதியே.

     (இ - ள்.) இன் அமுதம் சொல்லாய்-இனிய அமிருதம்போன்ற
சொற்களையுடையவளே!நல்லாய்-அழகையும் நற்குணநற்செய்கைகளையு
முடையவளே!  மெல் பூவாய்-(இன்குரலாற் பேசுதலில்)  மெல்லிய நாகணவாய்ப்புள்
போன்றவளே! தோகாய் -(சாயலில்) மயில்போன்றவளே! பாவாய் - (அழகில்)
சித்திரப் பதுமையையும்(அருமையில்)கண்மணிப்பாவையையும் (மோகிப்பித்தலில்)
கொல்லிப்பாவையையும்போன்றவளே1 திரௌபதியே-! வில்ஆண்மையினால் -
விற்கொண்டு போர்செய்யுயுந்திறத்தினால், வெம் கருப்பு வில்லோன் தனக்கே
நிகர் - கொடிய கரும்புவில்லையுடைய மன்மதனுக்கே ஒப்பு, என்ன-என்று, பல்லார்
புகழும் பான்மையினால்- பலரும் புகழுந் தன்மையோடு, பதினெண் புவிக்கும் பதி
ஆய எல்லா அரசுஉம் -பதினெட்டுத்தேசங்களுக்கும் தலைவர்களாகிய
எல்லாவரசர்களும், நின்பொருட்டால்-ஈண்டேதிரண்ட-இங்கே வந்து கூடியுள்ளார்;
(எ-று.)

     எளியகரும்பை வில்லாக்கொண்டு அதில்மெல்லியமலரம்புகளைத்
தொடுத்துஎய்து காமப்போரை நடத்திப் பிரமன்முதல் எறும்புஈறாக
எல்லாவுயிர்களையும் தன்வசப்படுத்துதலால், மன்மதன், சிறந்தவில்வீர
னெனப்படுவன்.கருப்புவில்லோன் றனக்கே, ஏ - உயர்வுசிறப்போடு பிரிநிலை.
பதினெட்டுத்தேசங்கள்திரவிடம், சிங்களம் சோனகம், சாவகம், சீனம், துளுவம்,
குடகம், கொங்கணம்,கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம்,கங்கம்
மகதம், கடாரம், கௌடம், குசலம் என்பன; பிறவாறும் உரைத்தல் உண்டு. புவி -
வடசொல்; இதுஅந்தப்பாஷையில் ஏழாம்வேற்றுமைவிரியாயினும்
தமிழில்பெயர்மாத்திரமாய் நிற்கும்,

47.- 'இவர்களுள் இலக்குஎய்பவன் உனக்கு உரியான்'
எனல்.

இவரிற் றனது தோள்வலியா லரியே றென்ன வெழுந்திருத்தத்
தவரிற் புரிநா ணுறவேற்றித் தழல்கான் முனைவெஞ் சாயகத்தால்
பவரிற் செறிய நிரைத்துருளும் பல்வாய்த் திகிரிப் பயிலிலக்கைக்
கவரிற் செழுந்தார் புனைந்தவனைக் கைக்கொநீண் டிடு
                                         கடிதென்றார்.

     (இ-ள்.) இவரில் - இந்த அரசர்களுள், (எவனாயினும்), அழ ஏறு என்ன
எழுந்திருந்து - ஆண்டுசிங்கம்போல எழுந்து, தனது தோள் வலியால்- தன்னுடைய
புஜபலத்தால், அ தவரில் - அந்த வில்லில், புரி நாண் உற ஏற்றி-நாணிக்கயிற்றைப்
பொருந்தப் பூட்டி, தழல் கால் முனை வெம் சாயகத்தால் - நெருப்பைச் சொரி