பக்கம் எண் :

திரௌபதி மாலையிட்ட சருக்கம்295

நிற்றற்குஉரிய நிலை: அது-பைசாசம், மண்டலம், ஆலீடம், பிரதியாலீடம் என நான்கு.
இவற்றுள், ஒருகால்நின்று  ஒருகால்முடக்கல்-பைசாசநிலை: இருகாலும் பக்கல்வளைய
மண்டலித்தல் - மண்டலநிலை; வலக்கால் மண்டலித்து இடக்கால்  முந்துறல்-
ஆலீடநிலை; வலக்கால்முந்துற்று இடக்கால்மண்டலித்தல்-பிரதியாலீடநிலை  (528)

54.- அந்தணவடிவங்கொண்டிருந்த அருச்சுனன்
எழுந்துபேசலுறல்.

அரவநெடுங்கொடியுயர்த்தோன்முதலாவுள்ள வனைவருமங்
                             கொருதனுவுக்காற்றாராகி,
உரவுமெலிந்தெழின்மாழ்கிச்செயல்வேறின்றியுள்ளமழிந்திருந்த
                               தற்பினுருமேறென்னக்.
கரவுடனந்தணர்நாப்பணிருந்தகொற்றக்கருமுகில்வாகனன்
                               புதல்வன் கரியமேனி,
இரவிகுலச்சிறுவனைப் போலெழுந்துமன்றலிளங்கொடிதம்
                          முனைநோக்கியியம்பினானே.

     (இ - ள்.) அரவம் நெடு கொடி உயர்த்தோன் முதல் ஆ உள்ள அனைவர்உம்
- பாம்பின்வடிவமெழுதிய நீண்டகொடியை உயரநாட்டிய துரியோதனன் முதலாக
அங்குஉள்ள அரசர்கள் எல்லோரும், அங்கு-அவ்வாறு, ஒரு தனுவுக்கு ஆற்றார்
ஆகி - ஒப்பற்ற அவ்வில்லில் திறங்காட்டமாட்டாதவர்களாய், உரவு மெலிந்து -
வலிமை குன்றி, எழில் மாழ்கி-மனவெழுச்சி சோர்ந்து, செயல் வேறு இன்றி -
ஒன்றுஞ்செய்யமாட்டாமல், உள்ளம் அழிந்து இருந்ததன் பின்-மனமழிந்து
இருந்தபின்பு,- அந்தணர் நாப்பண்- பிராமணர்களுக்கு நடுவிலே, கரவுடன் இருந்த -
மறைந்தவடிவத்தோடு வீற்றிருந்த, கொற்றம் - வெற்றியையுடைய, கரு முகில்
வாகனன் புதல்வன் - கருநிறமுள்ள மேகத்தை வாகனமாகவுடைய இந்திரனது
குமாரனாகிய அருச்சுனன்,- இரவி குலம் கரிய மேனி சிறுவனை போல் எழுந்து -
சூரியகுலத்தில் திருவவதரித்த கரிய திருமேனியையுடைய இராசகுமாரனான
இராமபிரான் போலஎழுந்து நின்று, மன்றல் இள கொடி தம்முனை நோக்கி -
விவாகத்துக்கு உரிய இளமையான பூங்கொடிபோன்ற திரௌபதியினது தமையனான
திட்டத்துய்மனைப் பார்த்து, உரும் ஏறு என்ன இயம்பினான் - சிறந்த இடிபோலக்
கம்பீராமான உரத்தகுரலோடு ஒன்று  சொல்வானானான்; (எ-று.)-அவ்வார்த்தையை,
அடுத்த கவியிற் காண்க.

     மன்றல் என்பதற்கு - நறுமணமென்றும் பொருள்கொள்ளலாம்; அது -
உபமானமாகியபூங்கொடிக்கும், உபமேயமாகிய திரௌபதிக்கும் ஏற்கும்: திரௌபதி
உத்தமஸ்திரீசாதிலக்ஷணமான நறுமணத்தைத்தன்உடம்பில் மிகுதியாகவுடையளாயி
ருந்தனளென்று பலவிடத்தும் முதனூல் கூறும்.                       (529)

55.-அருச்சுனன் திட்டத்துய்மனிடம்அநுமதிபெற்று
வில்லையெடுத்தல்.

மன்னமரபிற்பிறந்ததிருதோள் வலியாலிந்தமண்ணாளுமவர்க்
                            கன்றிமறைநூல்வாணர்,
தொன்மரபிற்பிறந்தவருமிலக்குவீழத்தாற் சூட்டுமோ
                    தொடையலிளத் தோகையென்னத்,
தன்மரபுக்கணிதிலகமானவீரன்றகவன்றோமன்றலுக்குத்தாழ்வோ
                                       வென்றான்,
வின்மரபிற்சிறந்தநெடுவில்லையீசன்மேருகிரியெடுத்ததென
                               விரைவிற் கொண்டான்.