பக்கம் எண் :

தற்சிறப்புப்பாயிரம்3

2.- இதுவுமது.

முருகார்ம லர்த்தாம முடியோனை யடியார்மு யற்சித்திறந்
திருகாமல் விளைவிக்கு மதயானை வதனச்செ ழுங்குன்றினைப்
புருகூதன் முதலாய முப்பத்து முக்கோடி புத்தேளிரும்
ஒருகோடி பூதேவ ருங்கைதொ ழுங்கோவை யுறவுன்னுவாம்.

     (இ - ள்.) முருகு ஆர் - வாசனைபொருந்திய, மலர் - (கொன்றைப்)
பூக்கள்தொடுக்கப்பட்ட, தாமம் - கொன்றைமாலையை, முடியோனை -
சிரசிற்கொண்டுள்ளவனும், அடியார் முயற்சி திறம் - பக்தர்களின் முயற்சியின்கூறுபாடு,திருகாமல் - மாறுபட்டிடாமல், விளைவிக்கும் -
பயனைவிளையச் செய்கின்றவனாகி,மதம் யானை வதனம் செழுங் குன்றினை -
மதயானையின் முகம்போன்ற முகத்தைப்பெற்று வளமுள்ள மலைபோல் ஓங்கி
நிற்பவனும், புருகூதன் முதல் ஆய முப்பத்துமுக்கோடி புத்தேளிர்உம் -
இந்திரனைத்தலைவனாகவுடையராய் முப்பதுமுக்கோடியரென்று சொல்லப்படுகின்ற
தேவர்களாலும், ஒருகோடி பூதேவர்உம்-ஒரு கோடிக்கணக்கான அந்தணராலும்,
கைதொழும் -வணங்கப்படுகின்றவனுமான, கோவை - தலைவனாகிய
விநாயகக்கடவுளை, உற -மிகவும், உன்னுவாம் - தியானிப்போம்; (எ-று.)

     அடியார்முயற்சித்திறந் திருகாமல் விளைவிக்கும் குன்று எனவே,
அடியவனாகியஎனது முயற்சியை [மகாபாரதத்தைத் தமிழாற் பாடுதலை]யும்
இடையூறின்றிமுற்றுவிப்பான் அக்கடவுள் என்ற கருத்துக் குறிப்பிக்கப்படும்.
விநாயகக் கடவுள்வணக்கமாகவேயுள்ள இந்த இரண்டாவது செய்யுள், சில
பிரதிகளிலில்லை: ஒருகால்கவியினாற் பாடப்படாது இடைச்செருகலாய்
வந்ததாயிருக்கலாம். முப்பது முக்கோடியர்- அஷ்டவசுக்கள், ஏகாதசருத்திரர்,
துவாதசாதித்தர், அசுவினிதேவரிருவர் என்றமுப்பத்துமூவர்தேவர்களைத்
தலைமையாகக் கொண்டவர்கள்: இவர்கட்கெல்லாந்தலைவன் தேவேந்திரன்
என்க. வானுலகத்துத்தேவர் போலப் பூமியில்விளங்குபவரென்ற காரணத்தால்
பிராமணர், பூதேவரெனப்பட்டார். கோடி - மிகப்பலரென்ற பொருட்டது.
புருஹூதன் - யாகத்தில் மிகுதியாக அழைக்கபடுபவனெனஅவயவப்
பொருள்படும்.                                            (2)

வேறு.

3.- முதற்கடவுளின் வாழ்த்து.

ஆக்கு மாறய னாமுத லாக்கிய வுலகம்
காக்கு மாறுசெங் கண்ணிறை கருணையங் கடலாம்
வீக்கு மாறர னாமவை வீந்தநாண் மீளப்
பூக்கு மாமுத லெவனவன் பொன்னடி போற்றி.

     (இ - ள்.) எவன்-, ஆக்கும் ஆறு - படைக்கும்படி, அயன் ஆம் -
பிரமனாவனோ: முதல் ஆக்கிய உலகம் - முதலிற் படைக்கப்பட்ட அவ்வுலகத்துப்
பிராணிகளை; காக்கும் ஆறு - பாதுகாக்கும்படி, செங்கண் நிறை கருணை -
(செந்தாமரை மலர்போன்று) செந்நிறமான கண்களிலே நிறைந்த கருணையாகிய,
அம் -நீரைக்கொண்ட,