பக்கம் எண் :

30பாரதம்ஆதி பருவம்

     (இ-ள்.) இகல் - போர்க்குஉரியதும், மின் இலை - மின்னல் போன்ற
இலையைக்கொண்டதும், வடி கொள் - கூர்மையைக் கொண்டதுமான, வேல் -
வேற்படையையுடைய, வேந்தர் வேந்தன் - அரசர்க்கரசனான சந்தனு, (கங்கையின்
பெண்தெய்வத்தை நோக்கி),- 'கன்னிஏ எனில் - (நீ) கன்னிகையேயானால்,
கடிகொள்பான்மையை - விவாகஞ்செய்து கொள்ளுதற்கு உரிமையுடையாய்:
மண்ணின்மேல் -பூமியின்மீது, என்னில்- என்னைக்காட்டிலும், உயர்ந்தவர் -
சிறந்தவர், இல்லை-:(என்னை மணந்துகொள்ளும் விஷயத்தில்), உன் நினைவு -
உனது எண்ணத்தை, உரை - சொல்லுவாய், 'என - என்று, உசாவினான் -
வினாவினான்; (எ-று.) -பான்மையை - முன்னிலை யொருமைக்குறிப்புமுற்று.(49)   

42.- அந்தக்கங்கை நாணமுற்றிருந்து பிறகு பேசலுறுதல்.

நாணினளாமென நதிமடந்தையும்
பூணுறுமுலைமுகம் பொருந்தநோக்கினள்
சேணுறுதனதுமெய்த் தேசுபோனகை
வாணிலவெழச்சில வாய்மைகூறுவாள்.

     (இ - ள்.) நதி மடந்தைஉம் - நதியின் பெண்தெய்வமான கங்கையும்,
நாணினள்என - வெட்கமடைந்தவள்போல, பூண் உறு - ஆபரணங்கள்
பொருந்திய, முலைமுகம் - தனங்களின்முகத்தை, பொருந்த-, நோக்கினள் -
பார்த்தவளாய்[தலைகவிழ்ந்தவண்ணம் இருந்துகொண்டு என்றபடி], சேண்உறு -
தூரத்தேவிளங்குகின்ற, தனது மெய் தேசு போல் - தனது உடம்பினொளிபோல,
நகை- (தன்) சிரிப்பினின்று, வாள் நிலவு எழ - ஒளி பொருந்திய நிலவு
[வெள்ளொளி]தோன்ற, சில வாய்மை - சில வார்த்தைகளை, கூறுவாள் -
சொல்பவளானாள்; (எ-று.)- அவற்றை மேலே காண்க.

     தலையைக் கவிழ்த்துக்கொண்டிருத்தல் நாணங் கொண்டுள்ளாளென்பதைக்
குறிப்பிக்கும் ஆதலால், 'நாணினளாமென முலை முகம்பொருந்த நோக்கினள்'
என்றது. கங்கை வெண்ணிறத் தவளென்பது, பிரசித்தம்.சேண் - ஆகாயமுமாம்.
சிரிக்கும்பற்களிலிருந்து வெள்ளொளி வெளிப்படுதலால், 'மெய்த்தேசுபோல் நகை
வாணிலவெழ' என்றது. ஆம் - அசை. நாணின ளொடுங் கினணதி மடந்தையும்
என்றுபிரதிபேதம்.                                              (50)

43.- இதுவும் அடுத்தகவியும்- ஒரு தொடர்: கங்கை
'நான்என்னசெய்யினும் கேட்பதில்லையென்றால்
மணப்பேன்' என்ன, மன்னவனும் உடன்படுதல்.

இரிந்துமெய்ந்நடுங்கிட யாதியாதுநான்
புரிந்ததுபொறுத்தியேற் புணர்வலுன்புயம்
பரிந்தெனைமறுத்தியேற் பரிவொடன்றுனைப்
பிரிந்தகன்றிடுவனிப் பிறப்புமாற்றியே.

     (இ - ள்.) இரிந்து - அஞ்சி, மெய் நடுங்கிட - உடல்நடுங்கும்படி, நான்
புரிந்ததுயாது யாது- நான்செய்வது எது எதுவோ, (அவற்றையெல்லாம்),
பொறுத்திஏல் -பொறுப்பாயென்றால், உன் புயம்